Skip to content

பிராய்லர் கோழியை போன்று வேகமாக வளரும் சபோல்க் செம்மறியாடுகள்

பிரிட்டனைச் சேர்ந்த கருப்பு முகத்துடன் கூடிய நார்போல்க் ஹார்ன் (Norfolk Horn) பெண் செம்மறியாட்டினையும், சிறிய பிரிட்டிஷ் வகை சௌத்டௌன் (SouthDown) ஆண் செம்மறியாட்டினையும் இணைத்து உருவாக்கப்பட்ட கலப்பின ஆடுகள் தான் இவை.18 ஆம் நூற்றாண்டின் கடைசி பகுதியில் இங்கிலாந்தின் சபோல்க் பகுதியில் இந்த செம்மறியாடுகள் உருவாக்கப்பட்டன. 1810… 

நீலக்காது நெடுவால் வண்ணக்கோழி

திபெத் மற்றும் மத்திய சீன பகுதிகளிலுள்ள, ஊசியிலை காடுகள் மற்றும் இலையுதிர் காடுகள் நிறைந்த மலைச்சரிவுகளில் (11,500 அடி) இப்பறவைகள் வாழ்கின்றன. அனைத்துண்ணியான நீலக்காது நெடுவால் வண்ணக்கோழிகள் (Blue Eared Pheasant) பெர்ரி பழங்கள், காய்கள், வேர்கள், கிழங்குகள்,  பூச்சிகள் மற்றும் தரையை மிக வேகமாக கிளறி புழுக்களையும்… 

தமிழக நாட்டு நாய்கள் இனத்தைச் சேர்ந்த அயர்லாந்து நாய் – ஐரிஷ் வுல்ஃப் ஹௌண்ட்

அயர்லாந்து நாட்டை பூர்வீகமாகக் கொண்ட நாய் இனம் இது. அங்குள்ள மக்கள் ஓநாய், மான், கரடி போன்றவற்றை வேட்டையாடுவதற்காக ஐரிஷ் வுல்ஃப் ஹௌண்ட் நாய்களை (Irish wolf Hound) பயன்படுத்தியுள்ளனர். கி.பி இரண்டாம் நூற்றாண்டு முதல் நான்காம் நூற்றாண்டு வரை அயர்லாந்து ராணுவத்தில் 300 ஐரிஷ் வுல்ஃப் ஹௌண்ட்… 

ஐரோப்பிய காடுகளில் அன்னிய ஆக்கிரமிப்பு இனமாக மாறியுள்ள வளையவால் கோட்டிகள்

ரக்கூன் குடும்பத்தை சார்ந்த இந்த விலங்குகளை தென் அமெரிக்க கோட்டிகள் என்றும் அழைக்கின்றனர். இதன் விலங்கியல் பெயர் நேசுவா நேசுவா (Nasua nasua). இவை தென் அமெரிக்க கண்டத்திலுள்ள நாடுகளான கொலம்பியா, கயானா, உருகுவே, அர்ஜென்டினா, ஈக்வடார், பொலிவியா, பராகுவே, பெரு, சூரினேம் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளில்… 

மாலுமிகளுடன் உலகம் சுற்றிய பொம்மை நாய்கள்

பஞ்சுப் பொதி போன்றிருக்கும் இந்த அழகிய குட்டி நாய்கள், பிஷான் வகையைச் சேர்ந்தவை. இவை 13ம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பிய நாடுகளிலுள்ள ராஜகுடும்பத்தினரின் செல்லப்பிராணியாக இருந்து வந்துள்ளன. அத்துடன் ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரை இவை மிகவும் பிரபலமான சர்க்கஸ் நாய்களாகும்.              … 

நான்கு கொம்புகளை கொண்ட செம்மறியாடுகள்

கருப்பு அல்லது சாம்பல் நிறத்தில் வெள்ளை நிற திட்டுக்களுடன், கண்ணைக்கவரும் அழகோடு காணப்படும் இந்த செம்மறியாடுகள் பிரிட்டனை பூர்வீகமாகக் கொண்டவை. 350 ஆண்டுகளுக்கும் மேலாக இவை அங்கு வளர்க்கப்பட்டு வருகின்றன. ஜேக்கப் செம்மறியாடுகள் பெரும்பாலும் நான்கு கொம்புகளை கொண்டவையாக இருக்கும். ஆண் பெண் இரு ஆடுகளுக்கும் கொம்புகள் உண்டு.… 

டிஸ்னி திரைப்படங்களில் வரும் கலிபோர்னிய காடைகள்

டிஸ்னி திரைப்படங்களில் வரும் கலிபோர்னிய காடைகள் அழகிய கொண்டை வைத்துள்ள இந்த சிறிய காடைகளை, கலிபோர்னிய பள்ளத்தாக்கு காடை மற்றும் பள்ளத்தாக்கு காடை என்றும் அழைக்கின்றனர். ஒன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை உயிர் வாழும் இக்காடைகளின் விலங்கியல் பெயர்  கேலிபெப்லா கலிபோர்னிகா (Callipepla californica). அமெரிக்காவை பூர்வீகமாகக்… 

யானைகள் விரும்பி உண்ணும் பழம் – யானை ஆப்பிள்

வெப்பமண்டல தாவரமான யானை ஆப்பிள் (Elephant Apple) மரத்தை, உவாமரம் என்றும் இதன் காயை உகக்காய் என்றும் அழைக்கின்றனர். சங்க இலக்கியங்களில் இம்மரத்தை பாங்கர் மற்றும் ஓமை என்று குறிப்பிட்டுள்ளனர். யானைகள் விரும்பி சாப்பிடுவதாலும், இவற்றின் குமிழ் வடிவ காய் பார்ப்பதற்கு யானையின் நகங்களை போன்றிருப்பதாலும் இதனை பொதுவாக… 

தண்ணீரில் வாழும் அதிசய மாடு- குரி

திமில்களற்ற விசித்திரக் கொம்புடைய இந்த அழகிய மாடுகள், ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள சேடு ஏரியை (Lake Chad) சுற்றியுள்ள இடங்களில் மட்டும் வாழ்கின்றன. சேடு ஏரியானது மேற்கு ஆப்பிரிக்காவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. பழங்காலத்தில் மெகா சேடு என்னும் பிரம்மாண்ட உள் கண்ட கடலாக இந்த ஏரி அமைந்திருந்ததாக கூறுகின்றனர்.… 

கருப்பு சேன்டெரல் காளான்

மிகவும் சுவையான காட்டு காளான் வகையான இவை வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கிழக்காசியாவின் காடுகளில் பரவலாக காணப்படுகின்றன. மிக அதிக அளவு சுண்ணாம்பு சத்துள்ள மண்ணில் இந்த கருப்பு சேன்டெரல் காளான்கள் (Black Chanterelle Mushroom) வளர்கின்றன. பெரும்பாலும் பெரிய இலைகளைக் கொண்ட மரங்களான பீச், ஒக்… 

error: Content is protected !!