விவசாய நூல் – ஏழாம் அதிகாரம்.
உழவு. “உழவு நட்பில்லாத நிலமும் மிளகு நட்பில்லாத கறியும் வழவழ.” “புழுதியுண்டானால் பழுதில்லை.” பயிர்கள் தங்களுக்கு வேண்டிய ஊட்டத்தை மண்ணிலிருந்து வேர்கள் மூலமாய்க் கிரகிக்கவேண்டியிருப்பதால், அவ்வூட்டத்தை நிலத்திலுள்ள ஜலம் கரைப்பதற்கு மண்ணின் அணுக்கள் கூடியவரையில் நயமாயிருக்கவேண்டியது அத்தியாவசியம். பயிர் அறுவடையானபின் அநேகமாய் நிலம் எந்த நிலைமையில் காணப்படுமோ அவ்வண்ணம்…










