Skip to content

மிளகு மருத்துவப்பலன்கள்

மிளகு
(Piper Nigrum-Dried Fruit)

மிளகானது சங்கக்காலத்தில் இருந்தே நம் உணவுப்பழக்கவழக்கத்திலும், வியாபாரப்பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தியாவில் கேரளத்து மிளகு என்பது தனித்தன்மைக்கொண்டதாக கருதுகின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் மிளகு வணிகத்திற்காகவே நம் நாட்டை நாடி வந்தனர்.

மிளகில் உள்ள ஊட்டசத்து விபரங்கள்
http://nutrition.agrisakthi.com/detailspage/PEPPER%20DRY,%20BLACK/306

அதில் கருமிளகு மிகவும் மருத்துவத்தன்மை கொண்டதாகவும், காய கல்ப மூலிகை மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டிருந்ததை மருத்துவச்சுவடிகள் குறிப்பிடுகின்றது

மிளகானது பொதுவாக சமையல் அறையில் கார சுவைக்காக உணவில் சேர்க்கப்படும் ஒரு பொருளாகும். இது நோய் எதிர்பாற்றலையும், சீரண மண்டலத்தை சீர்படுத்தவும்,  வயறு மற்றும் குடலை பாதுகாக்கவும் உதவுகிறது. இது கிருமி நாசினியாகவும் அதிக காய்ச்சல், சளி,இருமல், ஆஸ்துமா, வயிற்று எரிச்சல் போன்ற உபாதைகள் இருப்பவர்கள் மிளகு பயன்படுத்தும்போது நல்ல பலனை அளிக்கிறது.  மேலும் உடலில் ஏற்படக்கூடிய வீக்கம், கட்டி, மூட்டுவலிகள் , மறதி நோய் எனப்படும் அல்சிமைர் டிசீஸ், மூளை பாதிப்புகள் , மன அழுத்தம் போன்றவற்றையும்  சீர்படுத்தி குணப்படுத்துகிறது.

இது அதிக கொழுப்பையும், இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் எடுத்துக்கொண்டால் நல்ல பலனை கொடுக்கிறது.
வாயு ஏற்படக்கூடிய lichen plenus என்ற நோயையும் கட்டுப்படுத்துகிறது.

சித்த மருத்துவ பலன்கள்

சீதசுரம் பாண்டு சிலேஷ்மங்கி ராணிக்கும்
வாத மருசி பித்த மூல-மோது சக்தி யாசமபஸ்
மார மடன்மேகங் காசமிவை
காசங் கறிமிளகி னல்

குளிர் சுரம், வயிற்று வலி, சளி, மூச்சிறைப்பு, வயிற்றுப்புண், மூட்டுவலி, பித்த ரோகம், உடல் அசதி, இருமல், பக்கவாதம் , காதுவலி, வயிற்றில் இரத்தக்கசிவு , அஜீரணக்கோளாறு, தொண்டைவலி, வைரஸ் சுரம் போன்றவை குணப்படுத்தப்படுகிறது

பயன்படுத்தும் முறை
அனைத்து உணவுகளிலும் காரத்திற்குப் பதிலாக மிளகாய்க்கு பதிலாக மிளகை பயன்படுத்தலாம்
மஞ்சளும், மிளகும் கலந்து சிறிதளவு பாலில் கலந்து குடித்தால் பல நோய்களில் இருந்து நல்ல குணம் கிடைக்கும்.மஞ்சளில் உள்ள குர்குமினை உடல் எடுத்துக்கொள்ள மிளகில் உள்ள பெப்பரின் உதவுகிறது. எனவே இரண்டையும் ஒன்றாக குடித்தால் நலம் பயக்கும்.

அளவு 3 கிராம் சரி சமமாக பொடி செய்து 200 எம்எல் பாலில் குடிக்கலாம்

மிளகு சித்த மருத்துவத்தில் காய கற்ப மருந்தாக பயன்படுகிறது

மருத்துவர்கள கலந்து ஆலோசித்து பயன்படுத்துங்கள்

மருத்துவர் பாலாஜி கனகசபை, MBBS,. PhD (Yoga)
அரசு மருத்துவர்
கிருஷ்ணகிரி மாவட்டம்
99429 22002

 

தரமான மிளகு அக்ரிசக்தி அங்காடியில் கிடைக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj