Skip to content

பழஞ் சோறு – (பழைய சோறு) என்ன பயன்?

சமீப காலமாக ஊடகங்களில் பழைய சோறு பற்றிய செய்திகள் வருவதை நாம் கண்டிருப்போம். பழைய சோறு இப்போது ஒன்றும் புதிதில்லை. காலம்காலமாக நம் மக்கள் மண் குவையத்தில் பழைய சோறும், வெங்காயமுமே நம் பாரம்பரிய  உணவாகவே இருந்தது, காலை வேளை கஞ்சி வேளை , மதியானம்  அண்ணம் என தமிழர் பண்பாட்டில் இருந்து வந்தது.

பழைய சோற்று கஞ்சியில்  அதிகமான நார்சத்தும், புரதமும், கார்ப்போஹைட்ரேட் , சோடியம், தாதுக்கள், குளோரைடு, வைட்டமின் பி காம்பிளஸ், விட்டமின் டி, கால்சியம் ஆகியவை உள்ளது.
இரவில் உப்பு போட்டு ஊற வைத்து சோறு, மறுநாள் பழைய சோறு கஞ்சியாக குடிக்கும்போது அதில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் (புரோபயாடிக்) லாக்டோபேசிலஸ்  போன்ற குடலுக்கு நன்மை செய்யும் நொதிகள் உள்ளன.

சர்க்கரை மற்றும் இரத்தக்கொதிப்பு, உடற்பருமன் , வயிற்றுப்போக்கு, இருதய நோய், குடல்புண் , பசியின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும்,  நீண்ட நாள் படுக்கையில் உள்ள நோயாளிகளும் கூட எடுத்துக்கொள்ளலாம்
குழந்தைகள் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் அருந்தலாம்

அதிக கொழுப்பு உள்ளவர்கள், சோடியும் உப்பு குறைவால் இரத்த அழுத்தம் குறைந்தவர்களும், அதிக உடற்பயிற்சி செய்பவர்களும் அருந்தலாம். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது,  குடல் இயக்கத்தினை சீர்படுத்துகிறது

எச்சரிக்கை : (சர்க்கரை , சிறுநீரக்கோளாறு மற்றும் இரத்தக்கொதிப்பு, இருதய நோய் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனைக்கு பின் எடுத்துக்கொள்ளலாம்)

சித்த வைத்தியம்

பழஞ்சோற்று அந்தப் பழைய நீராகாரம் !
கொழுஞ்சேர்க்கை யோடுதயங் கொள்ளில் – எழுந்தாது
பித்தவா தம்போம் பெரும்பசியா மெய்யெங்கும்
மெத்தவொளி வுண்டாகுமே 1394

– இரவில் நீர் ஊற்றிய கஞ்சியை நீராகாரத்துடன் அருந்தினால் சுக்கில விருத்தி, உதராக்னி, உடலழகு, பித்தம், வாதம் இவற்றை நீக்கி , பசியை ஏற்படுத்தும்.
மலச்சிக்கல், ஜீரண குறைபாடு, குண்மம்(அல்சர்) , உடல் எடை குறைத்தல் , நாவறட்சி போன்றவை குணமாகும்.
பழைய சோற்று கஞ்சியை கொண்டு முகம் கழுவினால் முகம் பொலிவு பெறும். பழஞ்சோற்று கஞ்சியால் தேக புஷ்டி உண்டாகும் , மூலதாரத்தால் ஏற்படும் உடற்சூடு , சுக்கில நஷ்டத்தினை தீர்க்கும், தாது பலப்படும்

மருத்துவர் பாலாஜி கனகசபை, MBBS, Ph.D
அரசு மருத்துவர்
கல்லாவி

99429-22002

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj