Skip to content

நெல்லிக்காய் மருத்துவ பலன்கள் ( அலோபதி- சித்த மருத்துவம் )

நெல்லிக்காய் மருத்துவ பலன்கள் ( அலோபதி- சித்த மருத்துவம் )

(Emblica Officinalis)., (gooseberries), ( Amla)

பண்டைய காலத்தில் இருந்து இந்தியர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மிக உயர்ந்த கனியாக நெல்லிக்காய் விளங்குகிறது
குறிப்பாக சங்ககாலத்தில் நீண்ட உயிர்வாழ அதியமான் அவ்வைக்கு இந்நெல்லிக்கனியை கொடுத்தார் என்றால் அதன் சிறப்பை நீங்கள் உணரலாம்

அலோபதி மருத்துவ பயன்கள்

Boost Immunity எனப்படும் நோய் தடுப்பாற்றல் அதிகமாக இருக்கிறது. காரணம் இதில் மற்ற கனிகளில் இல்லாத அளவிற்கு விட்டமின் சி மற்றும் விட்டமின் ஏ, அல்கலாய்டுஸ், flavonoids, quercetin Kaempferol என்ற வேதிப்பொருட்கள், வெள்ளை அணுக்களை ஊக்குவித்து வெளி புறத்தில் இருக்கும் நஞ்சு மற்றும் இரத்தத்தில் இருக்கும் நஞ்சுகளை எதிர்த்து போராடும் தன்மையுடையதாக இக்கனி விளங்குகிறது

இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. இன்சுலின் சுரக்கும் செல்களை ஒழுங்குபடுத்துகிறது,
வளர்ச்சிதை மாற்றம் சரி செய்யவும் , எல்டிஎல் கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது
நெல்லிில் உள்ள குரோமியம் இருத துடிப்பை ஒழுங்குபடுத்தவும், இருதய குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கவும் பயன்படுகிறது

நெல்லியில் அதிகமான நார்சத்து உள்ளதால் குடல் இயக்கத்தினை ஒழுங்குபடுத்தி மலச்சிக்கலை தீர்க்கிறது
குடல்களில் இருக்கும் இரணங்களை சீர் செய்கிறது
உடலில் இருக்கும் அதிகமான கழிவு, நஞ்சுகளை (Salt & Uric Acid.Toxins ) களை வெளியேற்றி Diuretic ஆக செயல்படுகிறது

தலைமுடியின் வேர் நன்கு வளர்வதற்கும், முடியின் வேர்களை தூண்டுவதற்கும் முடி கருமை நிறமாக மாறுவதற்க்கும், தலை வலுக்கை விழாமல் தடுப்பதற்கும் , இதில் இருக்கும் கரோட்டின் மற்றும் ஆன்டாக்சிடென்ஸ் உதவுகிறது

கண்
விட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் மாலைக்கண் நோய் வராமல் தடுக்கிறது மற்றும் கண் புரை ( Cataract) வராமல் தடுக்கவும், கண்ணுக்குள் இருக்கும் அழுத்தத்தை ( Intera -Ocular Tension) குறைக்கவும் கரோட்டின் (Carotene) உதவுகிறது

கல்லீரல்
கல்லீீிரலில் இருக்கும் சுரப்பிகளை ஒழுங்குபடுத்தி கல்லீரலை பலப்படுத்துகிறது, மேலும் கல்லீரலில் தங்கும் இருக்கும் நச்சுப்பொருட்களை , டாக்சின்களையும், வெளியேற்ற உதவுகிறது, இதற்கு நெல்லிக்காயில் உள்ள Phytochemicals, Quercetin,Gallic Acid, corilagin, ellagic acid சத்துகள் உதவுகின்றன

புற்று நோயையும், நீரிழவு நோயையும் தடுக்க இதில் உள்ள potent polyphenols,flavnoids,tannins உதவுகிறது

இதில் அதிக அளவு கால்சியம் இருப்பதால் அது உடலில் இருக்கும் பல், நகம், எழும்பிற்கு வலு சேர்க்கிறது
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலியை தடுக்கிறது

வயோதிகத்தை தள்ளிப்போடுதல் – Anti Aging
இதில் இருக்கும் Hyper lipidemia, Free Radicals & Antoxidant Qualities, Vitamin C போன்றவை இருப்பதால் சோல் சுருக்கங்கள், முகத்தில் ஏற்படும் கொப்பளங்கள், புள்ளிகள் , வளர்ச்சிதை மாற்றங்களை சரி செய்து வயோதிகத்தை தள்ளிப்போடுகிறது

சித்த மருத்துவம்

பித்த மனலையம் பீநசம்வாய் நீர்வாந்தி
மத்தமலக் கட்டு மயக்கமுமி-லொத்தவுரு
வில்லிக்கா யம்மருங்கா மென்குட்கா லக்தேர்ந்தே
– சித்தர் பாடல்

சித்த மருத்துத்தில் நெல்லிக்காய், நெல்லிமுல்லி(காய்ந்த நெல்லிக்கனி), நெல்லிக்காய் எண்ணெய், நெல்லிக்காய் சாறு, நெல்லிக்காய் பவுடர், நெல்லிமர வேர் போன்றவை பயன்படுத்தப்பட்டுவருகிறது

சித்த மருத்துவத்தில் கடலில் கிடைத்த அமிர்தத்திற்கு ஒப்பாக நெல்லிக்காய் போற்றப்படுகிறது
இது தலைச்சுற்றல், மந்தம், வாயில் உமிழ்நீர் சுரக்காமல் இருத்தல் குறைபாடு, தலைசுற்றல், பிறக மேகம், பைத்தியம், கப நோய் தீரும்.
மேலும் புளிப்பால் வாய்வும், துவர்ப்பால் கபமும் நீங்கும் என்பது சித்தர் வாக்கு

நெல்லிமுல்லி(காய்ந்த நெல்லி)
உடற்சூடு, ருது தோசும் ( மாத விளக்கு கோளாறு), அஸ்தி சுரம்(எலும்பு சுரம்), தாகம், இரத்த பித்தம், முத்திர எரிச்சல், ஆண் குறி கொப்பளம், மலசிக்கல், பித்த வாந்தி, பிற மேகம், விந்து நஷ்டம் ஆகியவை குணமாகும், ஆண்மை பெருகம் , பால்வினைக்கு நோய்க்கு மருந்தாவுகம் பயன்படுகிறது

நெல்லிமரத்தின் வேர் திரிதோசமும் நீக்கி வாய்ப்புண்களை குணப்படுத்தி, உடலுக்கு அழகு சேர்க்கும் தன்மை உடையது

உண்ணும் முறை
காலை ஒரு நெல்லிக்காய், இரவில் ஒரு நெல்லிக்காய் தினமும் உண்டுவரலாம்

நெல்லிபவுடர், நெல்லி முல்லி( காய்ந்த நெல்லி) தினமும் காலை, மாலை 5 கிராம் உண்டு வரலாம்

நெல்லிப்பட்டை வேர் : புண்களுக்கு மேற்பூச்சாக மற்றும் மருந்தாகவும் , உடல் அழகு பெறவும் பயன்படுத்தலாம்

நெல்லிக்காய் பவுடரை மேற்பூச்சாக உடல் அழகு பெறவும், தோல் நோய் வராமல் தடுக்கும்

மருத்துவர் பாலாஜி கனகசபை, MBBS,. PhD
அரசு மருத்துவர்
99429-22002

நெல்லிக்காய் பவுடர், திரிபலா சுரணம் இரண்டும் அக்ரிசக்தி அங்காடியில் கிடைக்கும் , மேலும் விபரங்களுக்கு அக்ரிசக்தி 9940764680

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj