மீன் வளர்ப்பது எப்படி?

0
6413

விவசாயத்தின் ஒரு பகுதியாக கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு என பலவிதமான உபரித்தொழில்கள் நிறையவே உள்ளன. எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்துச் செய்வது கூட்டுப்பண்ணை என்று சொல்லலாம்.

இந்தியாவில் மீன் வளர்ப்பு நல்ல விழிப்புணர்வை பெற்றுள்ள நிலையில் என்ன வகையான மீன்கள் வளர்க்கலாம் என்பதும், அதற்கு சந்தை எப்படிஉள்ளது என்பதையும் நாம் அறியவேண்டும்

மீன் வளர்ப்பு வாய்ப்பு

2018-19 ஆம் ஆண்டில் மொத்தம் 13.7 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தியைக் கொண்ட உலகின் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தியாளராக இந்தியா உள்ளது, மொத்த மொத்த மதிப்பு சேர்க்கையில் இந்த துறை நிலையான வளர்ச்சியைக் காட்டுகிறது மற்றும் விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.23 சதவீத பங்கைக் கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல் 2012-2013 நிதியாண்டில் 4.9% ஆக இருந்த 2018-2019 ல் 11.9% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்காகவே மீன்வளத்துறையில் உள்ள அதிக வாய்ப்புகளை கருத்தில் கொண்டு பிப்ரவரி 2019 மீன்வளத் துறை என தனியாகவே ஒரு துறை உருவாக்கப்பட்டது.
மீன்வளத் துறையின் அனைத்து திட்டங்களையும் அரசாங்கம் ‘நீல புரட்சியின் ஒரங்கமாக மீன்வள வளங்களிலிருந்து மீன் உற்பத்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது நம் அரசு. ஆகவே மீன் உற்பத்தியில் நமக்கான வாய்ப்புகள் மிக அதிகம்

மீன் வளர்ப்பு எப்படி ஆரம்பிக்கலாம்?

அரசாங்கமே நமக்கு உதவி செய்கிறது உங்கள் நிலத்தில் பண்ணைக்குட்டை அமைத்து அதிலேயே மீன் வளர்க்க நிறைய உதவிகளை நமது அரசாங்கம் செய்துவருகிறது. எனவே உங்கள் ஊரில் வேளாண்மைப் பொறியியல் துறையை தொடர்பு கொண்டு மானிய விபரங்களை நீங்கள் கேட்கலாம்

நெல் பயிரின் ஊடே மீன் வளர்ப்பது,

நெல் பயிரின் ஊடாக மீன் வளர்ப்பதை நாம் யூடியூபில் பல இடங்களில் வீடியோக்களை காணலாம்

ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு

மீன் வளர்ப்பு பயிர் விளைச்சல் மற்றும் கால்நடை வளர்ப்புடன் சேர்த்து செய்யப்படுகிறது. இவ்வாறு ஒருங்கிணைத்துச் செய்யும்போது வளங்கள் நன்கு பயன்படுத்தப்படுவதோடு, இருக்கும் குறைந்த அளவு நிலத்தில் அதிக அளவு உற்பத்தி செய்ய முடியும். தற்போது அதிகரித்து வரும் மீன் பொருட்களின் விலையினாலும், பயிர்களுக்கு இடும் உரம் அதிக விலையாக இருப்பதாலும் நெல் போன்ற பயிர்களின் வயலில் மீன் வளர்ப்பது பற்றிவிழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்குக் குறைந்த செலவில் நல்ல மீன் புரதங்கள் எளிதில் கிடைக்கின்றது. அதோடு வயலிற்கு எருவாக மீன்களின் கழிவுகள் பயன்படுகின்றன.

பண்ணை (வயலின்) குளங்களில் மீன் வளர்க்கலாம். அதேபோல் கரை ஓரங்களில் வாத்துக்களை மேய விடலாம். வயல் ஓரங்களில் காய்கறி மற்றும் பழ மரங்களை விதைக்கலாம். இதனால் நமக்கு முட்டை, இறைச்சி, உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் மீன் போன்றவை கிடைக்கும். இதனால் நல்ல சரிவிகித உணவு கிடைப்பதோடு பொருளாதார அளவிலும் அதிக இலாபம் ஈட்ட முடிகிறது.

குளங்களில் வாத்து வளர்த்தல், பயிர்கழிவுகளை கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்துதல், மேலும் கால்நடை கழிவுகளை பயிர்களுக்கு உரமாக்குதல் போன்ற சுழற்சி முறைப் பயன்பாடே ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பாகும். இது சிறந்த வேலைவாய்ப்பை அளிப்பதுடன், கிராமப்புற வளர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும்.

ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பில் இரண்டு முறைகள் உள்ளன. 1) வேளாண் பயிர் செய்தல் – மீன் வளர்ப்பு, 2) மீன் வளர்ப்பும் கால்நடைப் பராமரித்தலும்.

வேளாண் பயிர் சாகுபடி மீன் வளர்ப்பில் நெல் – மீன் வளர்ப்பு, தோட்டக்கலை – மீன் வளர்ப்பு, காளான் – மீன் வளர்ப்பு, பட்டுப்புழு – மீன் வளர்ப்பு போன்ற முறைகள் அடங்கும்.
இதேபோல் கால்நடை – மீன் வளர்ப்பில், மாடுகளுடன் – மீன் வளர்ப்பு, பன்றியுடன் மீன் வளர்ப்பு, கோழி – மீன் வளர்ப்பு, வாத்து – மீன் வளர்ப்பு, ஆடு – மீன் வளர்ப்பு, முயல் – மீன் வளர்ப்பு.

மேலும் விபரங்களை இங்கே காணலாம்

வேளாண் பல்கலைகழகத்தின் வழிகாட்டுதல் இணைப்பு

http://agritech.tnau.ac.in/ta/fisheries/fish_ifs_ta.html

 

மீன் வளர்ப்பு பற்றி நாம் ஏற்கனவே பதிப்பித்துள்ள செய்தி

மீன் வளர்ப்பு

 

தொடரும்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here