காஞ்சிபுரத்தில் 359 ஏரிகள் நிரம்பின

1
2088

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 924 ஏரிகளில் 359 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர் கனமழை காரணாக காஞ்சிபுரம் மாவட்ட ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இவற்றில் 359 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. 266 ஏரிகள் 75 சதவீதமும், 178 ஏரிகள் 50 சதவீதமும், 121 ஏரிகள் 50 சதவீதத்திற்கும் குறைவாக நிரம்பி உள்ளதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி ஏற்கனவே நிரம்பி விட்டது. தற்போது இந்த ஏரிக்கு வரும் நீரின் அளவு 9,800 கனஅடியில் இருந்து 2,800 கனஅடியாக குறைந்துள்ளது. ஏரியில் இருந்து 1,790 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here