Skip to content

விவசாயிகள்தான் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நாடு வளமாக இருக்கும் : ராகுல்காந்தி

இந்தியாவில் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் தற்போது சூடு பிடித்திருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 , 17 தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் உள்ள கிராமங்களுக்கு சென்றார். அங்குள்ள விவசாயிகளை சந்தித்து அவர்களைப் பார்த்து அவர்கள் செய்யும் விவசாய பணியையும் மேற்கொண்டார்.

மேலும் ராகுல் காந்தி விவசாயிகளுடன் இருந்த புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்து, விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருந்தால் தான் நாடு மகிழ்ச்சியாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்‌ மேலும் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டால் ஒன்றிற்கு 2640 ரூபாய், 21 லட்சம் விவசாயிகளுக்கு 23 ஆயிரம் இடுபொருள் வாங்க மானியம், 19 லட்சம் விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் கடன், அனைத்து விவசாயிகளுக்கும் மின்கட்டண தள்ளுபடி, மானியம், 5 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 7 ஆயிரம் ரூபாய் நிதி உதவி என்று பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் நிறைவேற்றி வருகிறது. மேலும் பல்வேறு இயந்திரங்கள் அரசின் சார்பில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj