கறுப்பு அரிசி – கவுனி அரிசி

0
6265

ஆசியாவில், குறிப்பாக, சீனாவில்,கருப்பு அரிசி எனப்படும், கவுனி அரிசி, அதிகளவில்,விளைகிறது. பழங்காலத்தில், கருப்பு அரிசியை,’ராஜாக்களின் அரிசி’ என, வரலாற்று குறிப்புகளில்குறிப்பிடப்பட்டு, இந்த அரிசியை, ராஜாக்கள் மற்றும்ராணிகள் மட்டுமே சாப்பிட வேண்டும் என, சீனாவில், சட்டமே இருந்துள்ளது. தமிழகத்தின் சில பகுதிகளில்இதை, ‘கார் அரிசி’ ‘கவுனி அரிசி’ என்றும் அழைப்பர்.

சீனாவில்,  கருப்பு அரிசி அதிகமாக விளைவிக்கப்படுகிறது. மற்ற உணவுகளில் இருக்கும் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, புரத சத்துக்கள் தவிர, அபரிமிதமான நார்ச்சத்து, கருப்பு அரிசியில் உள்ளது.இரும்பு,தாமிரம், துத்தநாகம், மெக்னீஷியம், மேங்கனீஸ், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் கனிமங்களும், வைட்டமின் சத்துக்களும் உள்ளன. மேலும், உடலுக்கு அத்தியாவசிய தேவையாக கருதப்படும் வேதிப்பொருட்களை, கருப்பு அரிசி கொடுக்கிறது.

கருப்பு அரிசியை அதிகமாக பயன்படுத்தும்போது, ரத்தகுழாய்களை விரிவடைய செய்யும் ஆற்றல் கிடைக்கிறது. இதனால்,இதயத்துக்கு பாதுகாப்பு கிடைக்கும்.இயற்கை வேளாண்மை மூலம் உற்பத்தி செய்வதுடன், அதன் நலன்களை முழுமையாகபெற, கருப்பு அரிசிக்கு பாலீஷ் செய்யப்படுவதில்லை. இதை சமைப்பதற்கு முன், குறைந்தபட்சம், ஐந்து முதல்ஆறு மணி நேரம் வரை, ஊற வைக்க வேண்டும்.

சக்தி கிடைக்கும்குக்கரில் சமைப்போர், ஒரு பங்கு அரிசிக்கு,இரு பங்கு அளவு நீரில், 10 முதல் 12 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். இதில், நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வழக்கமாக நாம் உட்கொள்ளும் உணவு அளவில், மூன்றில், ஒரு பங்கு கருப்பு அரிசி சாதம் உண்டாலே, நம் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கும்.மேலும், அடிக்கடி பசி எடுக்காது.

இணையத்தில் மேலதி விபரங்களுக்கு

https://en.wikipedia.org/wiki/Black_rice

கவுனி அரிசியை அக்ரிசக்தியில் வாங்க

https://goo.gl/bEvzWQ

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here