Skip to content

புதிய இரண்டு சாண வகை வண்டு

Mexican-Italian research team இணைந்து நடத்திய பல்லுயிர் ஆய்வில் புதிய இரண்டு வண்டு இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கால்நடைகள் போடும் சாணத்திலிருந்து உருவாகிறதாம். இந்த வண்டு இனங்கள் விவசாயிகளுக்கு எதிரியாக இருக்கும்.

இந்த வண்டு இனம் அதிகமாக மெக்ஸிகோவின் மேய்ச்சல் நிலங்களில் காணப்படுகிறது. இந்த வண்டு இனங்கள் அதிக ஆற்றல் கொண்டதாக உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனை பற்றி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த ஆய்வு, டாக்டர் கோன்ஜாலோ Halffter தலைமையில் நடந்து வருகிறது. நில-பயன்பாடு மாற்றம் மற்றும் மனித நடவடிக்கைகள் மூலம் சுற்றுச் சூழலில் பல மாற்றங்கள் அன்றாடம் நிகழ்ந்து வருகிறது.

பெரும்பாலும் கால்நடை வளர்ப்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் 58% சாண வண்டுகள் மெக்ஸிகோவில் உருவாகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த புதிய வண்டு இனத்தினை மெக்ஸிக்கோ இன்ஸ்டியூட்டின் மாணவரான டாக்டர் கோன்ஜாலோ கண்டுபிடித்தார். இதேப் போல மேலும் மூன்று சாண வண்டுகளை பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது கண்டறியப்பட்ட வண்டு இனத்திற்கு Onthophagus clavijeroi மற்றும் Onthophagus martinpierai என்று பெயரிட்டுள்ளனர்.

https://www.sciencedaily.com/releases/2016/03/160315131900.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj