விவசாயிகள் சந்தை முடிவுகளை எடுக்க ஏதுவாக கடந்த 16 ஆண்டுகளாக திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்ன வெங்காயத்தின் விலையை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஊரக வேளாண்மை மற்றும் மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் வேளாண் விற்பனைத் தகவல் மற்றும் வணிக ஊக்குவிப்பு மையத்தின்பின்புல அலுவலகம் ஆராய்ந்தது. சந்தை மற்றும் பொருளியல் ஆய்வுகளின் அடிப்படையில், தரமான சின்ன வெங்காயத்தின் விலை அக்டோபர் – நவம்பர் மாதங்களில் கிலோவிற்கு ரூ. 30 முதல் ரூ. 35 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்படும் சின்ன வெங்காயத்தின் ஏற்றுமதி தேவையினாலும் விலை உயர வாய்ப்புள்ளது. டிசம்பர் மாதத்திற்கு பிறகு விலையேற வாய்ப்பில்லாததால், விவசாயிகள் அறுவடை செய்த சின்ன வெங்காயத்தை உடனே விற்க பரிந்துரைக்கப்படுகின்றனர்.

Related Posts

“சங்க இலக்கியம் கூறும் வாழ்வியல் வரலாறு’’
இறப்புக்குப் பின்பும் ஒரு வாழ்வு இருப்பதாக மனிதர்கள் நம்பினார்கள். குறிப்பாக அரசர்கள்.. பிரபுக்கள்.. மற்றும் பலரும்.. அந்த இறப்பிற்கு பின்பான வாழ்விலும் சுகபோக வாழ்க்கையை வாழ ஆசைப்பட்டனர்.. அங்கு…. ஓர் அரசன். தான் இறந்தபிறகும்… Read More »“சங்க இலக்கியம் கூறும் வாழ்வியல் வரலாறு’’

பெருமதிப்புக்குரிய முதல்வர் அவர்களுக்கு அக்ரிசக்தியின் வேண்டுகோள்
தமிழ்நாடு முழுதும் தற்போது பெய்து வெப்பச்சலனமழையால் ஆங்காங்கே நெல் விற்கும் மையங்களில் குவிந்துள்ள நெல் மூடைகள் மழையில் நனைந்து வீணாகும் செய்திகளை தாங்கள் அறிவீர்கள். தமிழகம் முழுதும் பல்வேறு இடங்களில் இந்த நிலை நிலவிவருகிறது,… Read More »பெருமதிப்புக்குரிய முதல்வர் அவர்களுக்கு அக்ரிசக்தியின் வேண்டுகோள்

அக்ரிசக்தி விவசாயம் 2021 ஆய்வுப்போட்டி
அக்ரிசக்தி சார்பாக விவசாயம் மற்றும் கால்நடை மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கான போட்டி! நிபந்தனைகள் விவசாயிகளை நேரடியாக பேட்டி எடுக்க வேண்டும். அதில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை என்ன, அதற்கான தீர்வுகள் என்ன என்பதை கட்டுரை… Read More »அக்ரிசக்தி விவசாயம் 2021 ஆய்வுப்போட்டி