Skip to content

மக்காச்சோளம்

செய்தி எண். 15: மக்காச்சோளம் இரகத்தேர்வு:-

கோஎச்(எம்) 5 மற்றும் கோஎச்(எம்) 6 போன்ற வீரிய ஒட்டு ரகங்கள் பரிந்துரைக்கப்படுகிறது.

செய்தி எண். 16: மக்காச்சோளம் விதை அளவு மற்றும் நடவு:-

வீரிய ஒட்டு ரகங்களுடன் 8 கிலோ தேவை. ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பெண்டாசிம் அல்லது 4 கிராம் திரம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதற்குப் பிறகு ஒரு ஏக்கருக்கு தேவையான 2 பாக்கெட் அசோஸ்பைரில்லம் கொண்டு விதை நேர்த்தி செய்தல் வேண்டும். இடைவெளி – 60 x 25 செ.மீ. மற்றும் மொத்த செடிகளின் எண்ணிக்கை ஏக்கருக்கு 26667 எண்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

மக்காச்சோளம் – களைக்கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி.

அட்ரசின் 50% நனையும் தூள் 200 கிராம்/ஏக்கர் என்ற அளவில் நடவு செய்த 3 நட்கள் கழித்து தெளிக்க வேண்டும். பிறகு 40-45 நாளில் கைக்களை ஒன்று எடுக்க வேண்டும். மண்ணில் போதுமான அளவு ஈரப்பதம் இருக்கும் போது களைக்கொல்லி தெளிக்க வேண்டும். களைக்கொல்லி பயன்படுத்தவில்லையெனில், நடவு செய்த 17 அல்லது 18-வது நாளில் கைக்களை எடுத்தல் அவசியம்.

மக்காச்சோளம் – நுண்ணூட்டச்சத்து இடுதல்.

ஏக்கருக்கு 5 கிலோ நுண்ணூட்டச்சத்துக் கலவை மணலுடன் கலந்து அளித்திடல் வேண்டும். பார் முறையில் பாரின் கீழிலிருந்து 2/3 பங்கு உயரத்தில் இக்கலவையை அளித்திடல் வேண்டும்.

செய்தி எண். 17: மக்காச்சோளம் உரமிடுதல்:-

மண் பரிசோதனைக்கு ஏற்ப தழை, மணி, சாம்பல் சத்துக்கள் இடவேண்டும் இல்லையெனில் 100:30:30 கிலோ/ஏக்கர் தரவல்ல தழை, மணி, சாம்பல் சத்துக்களை பொதுவாக இடுதல் வேண்டும். ¼ பகுதி தழைச்சத்தினை அடியுரமாகவும் 2/4 பகுதி 25-ம் நாளும், ¼ பகுதியினை 45-ம் நாளும் பிரித்து இடுதல் வேண்டும். மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து முழுவதும் அடியுரமாக இடவேண்டும்.

செய்தி எண். 18: மக்காச்சோள பயிருக்கு இலைவழி நுண்ணூட்டம்:-

இலைவழி நுண்ணூட்டமாக TNAU மக்காச்சோளம் மேக்சிம் 1 ஏக்கருக்கு 3 கிலோ கிராம் என்ற விதத்தில் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து ஆண் மஞ்சரி மற்றும் மணி உருவாகும் பருவத்தில் தேவையான அளவு ஒட்டு திரவம் சேர்த்து தெளிக்க வேண்டும். இதன் மூலம் திரட்சியான மணிகள், 20% அதிக மகசூல் கிடைப்பதுடன் வறட்சியையும் நன்கு தாங்கி வளரும்.

நன்றி!

வேளாண்மை இயக்குநர்
தருமபுரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj