Skip to content

தண்ணீரில் வாழும் அதிசய மாடு- குரி

திமில்களற்ற விசித்திரக் கொம்புடைய இந்த அழகிய மாடுகள், ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள சேடு ஏரியை (Lake Chad) சுற்றியுள்ள இடங்களில் மட்டும் வாழ்கின்றன. சேடு ஏரியானது மேற்கு ஆப்பிரிக்காவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. பழங்காலத்தில் மெகா சேடு என்னும் பிரம்மாண்ட உள் கண்ட கடலாக இந்த ஏரி அமைந்திருந்ததாக கூறுகின்றனர்.… 

இயற்கை முறையில் கால்நடை உற்பத்தி

தற்பொழுது நடைமுறையில் உள்ள முறைகளை விட இயற்கை முறையில் கால்ந டைக ள் பராமரிக்கப்ப டு வ து வித்தியாசமானது. மேய்ச்சல் முறையில் மாற்றம், நோய் தாக்குதலின் பொழுது கொடுக்கப்படும் சிகிச்சை மற்றும் இனப்பெருக்க மேலாண்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்துடன் , இயற்கை முறையில் கால்நடைகளை பராமரித்தல் கால்நடைகளுக்கு ம்… 

பெல்டட் கேலவே – ஓரியோ மாடுகள்

300 ஆண்டுகளுக்கு முன்பு இறைச்சிக்காக ஸ்காட்லாந்தில் உருவாக்கப்பட்ட இனம் இது. ஸ்காட்லாந்தின் பூர்வீக மாடாகிய கேலவே மாட்டிலிருந்து இந்த கலப்பின மாட்டை உருவாக்கியுள்ளனர். 1921 ஆம் ஆண்டு இது தனி இனமாக  அங்கீகரிக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, இங்கிலாந்து, நியூஸிலாந்து,… 

உலகிலேயே மிக நீண்ட கழுத்தினை கொண்ட மான்- ஜெரினக்

இரலை வகை மான்களான ஜெரினக் -கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் கென்யா, தான்தோனியா, ஜிபூட்டி ஆகிய நாடுகளின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றன. சோமாலி மொழியில் ஜெரினக் (Gerenuk) என்பதற்கு ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து என்று பொருள். இதனை ஒட்டகச்சிவிங்கி கெசல் (Giraffe Gazelle) என்றும் வல்லரின்… 

அரசப்புறா

அரசப்புறா

அரசப்புறா உருண்டையான உடல் அமைப்பின் காரணமாக, கோழிகளைப் போன்று தோற்றமளிக்கும் இந்த புறாக்கள் அமெரிக்காவில் (19ஆம் நூற்றாண்டு)  உருவாக்கப்பட்டவையாகும். டச்சஸ், ஹோமர், ரன்ட், மால்டீஸ் ஆகிய நான்கு புறாக்களிலிருந்து உருவாக்கப்பட்ட கலப்பினம் தான் இந்த அரச புறாக்கள் (King Pigeon). இவற்றின் முன்னோர்கள் மாடப்புறாக்கள். பொதுவாக புறாக்களில் இறைச்சியின்… 

அழகுக்காக வளர்க்கப்படும் கொண்டை கோழிகள் – போலிஷ் கோழி

ஏறத்தாழ எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்களால் வளர்க்கப்பட்டு வரும் கோழிகள் இவை. 15 மற்றும் 16ஆம் நூற்றாண்டை சார்ந்த டச்சு மற்றும் இத்தாலிய ஓவியங்களில் இக்கோழிகளை காண முடிகிறது. போலிஷ் கோழிகள் (Polish Chicken) என்றழைக்கப்பட்டாலும், இவை போலந்து நாட்டை பூர்வீகமாகக் கொண்டவை அல்ல. பழங்கால போலந்து நாட்டு… 

மிக அகலமான கொம்பினை கொண்ட மாடுகள் – அங்கோல் வாட்டுசி

  நீண்ட மற்றும் மிக அகலமான கொம்புகளை கொண்டுள்ள இம்மாடுகள் அமெரிக்காவின் பிரபலமான வளர்ப்பு கால்நடைகளாகும். அங்கோல் வாட்டுசி மாடுகள் (Ankole watusi), கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் காணப்படும் கால்நடையினமான சங்கா மாட்டினத்தில் இருந்து உருவாக்கப்பட்ட கலப்பினங்களே. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்ட இம்மாடுகள்,… 

பசுந்தீவனம் பதப்படுத்தும் முறைகள்

கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தை ஆண்டு முழுவதும் தொடர்ந்து அளிப்பதன் மூலம் சீரான உற்பத்தியினை பெறலாம். பசுந்தீவனத்தில் ஊட்டச் சத்துக்கள் இயற்கையான தன்மையிலேயே உள்ளதால் அவற்றின் செரிமானத் தன்மை அதிகம். மழைக்காலங்களில் தேவைக்கு மேல் கிடைக்கும் பசுந்தீவனத்தை பதப்படுத்தி கோடையில் கால்நடைகளுக்கு அளிப்பதன் மூலம் பசுந்தீவனப் பற்றாக்குறையையும் கால்நடைகளின் உற்பத்தி இழப்பையும்… 

அசோலா சாகுபடி மற்றும் அதன் பயன்பாடுகள்

அசோலா ஒரு அற்புதமான பசுந்தீவனம் மற்றும் இது ஒரு  மிதக்கும் நீர்வாழ் உயிரி  ஆகும். இது தண்ணீரின் மேற்பரப்பில் வளரக்கூடியது. கால்நடை தீவன பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக பல விவசாயிகள் கால்நடைகளுக்கு போதுமான தீவனத்தை உற்பத்தி செய்ய போராடி வருகின்றனர். அவர்களுக்கு அசோலா  ஒரு சரியான… 

நோயுற்ற கால்நடைகளை கண்டறிதல் மற்றும் பராமரிக்கும் முறைகள்

மனிதர்களை போல் இல்லாமல் கால்நடைகளுக்கு ஏதேனும் உடல்நிலை பாதிப்பட்டிருந்தால் அவற்றை கண்டறிதல்  சற்று சிரமமாகும். நோயுற்ற கால்நடைகள் மற்ற கால்நடைகளைக் காட்டிலும் சற்றே சோர்ந்து காணப்படும். சரியாக தீவனம் உட்கொள்ளாமல் இருத்தல்,  கழிச்சல் அல்லது சாணம் வெளி வராமல் இருத்தல், அதிக உடல் வெப்பநிலை, சுவாசிப்பதில் சிரமம்  ஏற்படுதல்… 

error: Content is protected !!