Skip to content

சிகைக்காயின் மருத்துவப் பயன்கள் – மருத்துவர் பாலாஜி கனகசபை

சிகை+காய், முடி + காய் என்பது இதன் ஒரு பொருளாக பெரியோர்கள் விளக்கம் , னுஅளித்துள்ளனர், Fruit for Hair என்று ஆங்கிலேயர்கள் சிகைக்காயை அழைத்து வந்துள்ளனர்
இந்திய மற்றும் தமிழ் பண்பாட்டு மரபியலில் பல நூறாண்டுகளாக இயற்கை முறையில் முடி பராமரிப்பதற்கு சிகைக்காய் பயன்படுத்தி வந்து இருக்கிறார்கள். சிகைக்காயை சித்த மற்றும் ஆயூர்வேத மருத்துவத்தில் சிகைக்காயை மிகுந்த மருத்துவ குணம் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

(Acacia Concinna).
மூக்கின் சிகிச்சைக்கு முக்கியமாம் பேதியையுண்
டாக்குவம ணத்தை யழைப்பிக்கும்-தேய்க்கும்
வகைநெய்ச்சிக் கைப்போக்கு மாதரசே! நாளுஞ்
சிகைக்காய் யதனை தெறி.
————சித்தர் பாடல்

தீபாவளி போன்ற பண்டிகைக்காலங்களில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எண்ணெய் தேய்த்து குளித்து வருவது நம் பண்பாட்டில் இருந்துவருகிறது. எண்ணெய் தேய்த்தபின் சீயக்காயை தலைமுடிக்கு தேய்த்து வெந்நீரில் குளிப்பது முடி செழிப்பாக வளரும், பொடுகு வராது, முடியின் அமில கார சமநிலை சீர் செய்யப்படும். முடி உதிர்தலை தடுக்கும், தலையில் இருக்கும் அழுக்கை அகற்றும், சொரி , சிரங்கு , கொப்பளங்கள் போன்றவை குணமாகும்.

சிகைக்காய் உடன் சம அளவு புகையிலையையும் கூட்டி தூள் செய்து சுட்டு கரியாக்கி பல் வழி இருக்குமிடத்தில் வைத்து அடக்கினால் பற்கிருமிகள் அழியும்.

உள்ளுக்குள் சாப்பிடும்போது மளமிலக்கியாகவும், இருமல் நோய்க்கு மருந்துதாகவும், மாரடைப்பு நோய்க்கு மருந்தாகவும் நம் பண்பாட்டில் இருந்துள்ளது.

சிகைக்காய் காய் மற்றும் இலைகளில் அமிலங்கள் , புரதங்கள் அதிகமாக உள்ளதால் முடி மற்றும் தோல்பராமரிப்பில் முக்கிய பொருளாக இன்றுவரை இருந்துவருகிறது.

இதன் இலையில் புளிப்புத்தன்மை கூடுதலாக காணப்படுவதால் இதன் இழையை சட்டினி செய்து உணவுடன் சாப்பிடவும் பயன்பட்டிருக்கிறது.

இந்த காலத்தில் துணிகளுக்கு  சோப்பு போடுவதை போல அக்காலத்தில் துணித்துவைக்க சிகைக்காயையே பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இந்தக்காயில் பொடியில் அமில கார நொதித்தன்மை பாதுகாப்பாகவும், நுரைக்கும் தன்மை கொண்டதாகவும் செயல்பட்டு பயன்பட்டிருக்கிறது.

முடியில் வேரை தூண்டி நன்கு முடியை வளர வைக்கவும், மண்டை(Scalp)யை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் முடிக்கு நன்கு புரதம், ஆன்டாக்சிடென்ட்ஸ் முடிக்கு கிடைக்கவும்வழி செய்கிறது. Alopacia என்ற முடி உதிரும் நோய் சிகைக்காயை பயன்படுத்தும்போது தடுக்கப்படுகிறது. முடி நரைப்பதையும் தடுக்கிறது.

சிகைக்காய் இலை கொழுந்தினை, மிளகு, புளி, உப்பு,மிளகாய் சேர்த்து அரைத்து துவையலாக பயன்படுத்தினால் பித்தம், காமாலை போன்றவை நீங்கும்

சிகைக்காயை உபயோக்கும் முறை

நன்கு காய உலர்த்திய சிகைக்காயை தூள் செய்து நேரடியாக தலையில் தேய்த்தோ அல்லது எண்ணெய் தேய்த்தோ 15 நிமிடம் கழித்து வெந்நீரில் குளிக்கலாம்.

சிகைக்காய் உடன் செம்பருத்தி பூ, ஆவாரம் பூ , மருதாணிப்பூ, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, பூலா க்கிழங்கு, வேப்ப இலை, கடுக்காய், நெல்லிக்காய், கருவேப்பிலை, பூந்திக்கொட்டை, வெட்டிவேர், பச்சைப்பயிர், அரப்பு போன்றவைகளை சேர்த்தோ தனித்தனியாகவோ இன்னமும் பல மூலிகைகள் கலந்து பயன்படுத்தினால் தலை முடியும் நன்கு வளரும், தூக்கம் நன்றாக வரும்.

விட்டமின்  C, A, D, E , K போன்றவைகளும் சிகைக்காயில் உள்ளது

வரும் தீபாவளிக்கு அனைவரும் தமிழ் பாரம்பரியமுறைப்படி சிகைக்காய் தேய்து குளித்து , அதையே வாரம்தோறும் பயன்படுத்தி வந்தால் நல்லது. தரமான சிகைக்காய் அக்ரிசக்தி அங்காடியில் கிடைக்கும்

மருத்துவர் பாலாஜி கனகசபை MBBS., PhD (Yoga)
அரசு மருத்துவர்
99429-22002
கிருஷ்ணகிரி மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj