Skip to content

மானாவாரிக்கு ஏற்ற தீவனப்பயிர்களும் அவற்றின் சாகுபடி முறைகளும்

 

  1. கொழுக்கட்டைப்புல்:

பல்லாண்டுப் பயிராகப் பயிரிடலாம். மானாவாரி சாகுபடி மற்றும் மேய்ச்சல் நிலங்களுக்கும் ஏற்றது. வறட்சியை தாங்கி வளரக்கூடியது, ஹெக்டருக்கு 40 டன்கள்/வருடம் பசுந்தீவன மகசூல் தரக்கூடியது.
சாகுபடிக்குறிப்புகள்:
1. பருவம் மற்றும் இரகம்  :  வடகிழக்குப் பருவக்காற்றுக் காலத்தில் மழை வரும் போது விதைக்கலாம்.  இரகம் கோ 1

2 மண் : வடிகால் வசதியுள்ள இரு மண்பாட்டு மற்றும் சுண்ணாம்புச் சத்து மிகுந்த நிலம் மிகவும் ஏற்றது. களர், உவர் நிலங்களிலும் பயிர் செய்யலாம்.

  1. நிலம் தயாரித்தல் : 2 முதல் முறை உழவு செய்து நன்கு பண்படுத்தப்பட்ட நிலத்தில்
    மண்ணின் தன்மைக்கு ஏற்ப பாத்திகள் அமைக்கவும்

4 உர அளவு               : அடியுரம்
(எக்டருக்கு)         தொழு உரம் – 5 டன்
தழைச்சத்து – 25 கிலோ
மணிச்சத்து – 40 கிலோ
சாம்பல்சத்து – 20 கிலோ
மேலுரம்
25 கிலோ தழைச்சத்து ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னும் இடவேண்டும்.
5. விதையளவு           : 6-8 கிலோ/எக்டர்
6. இடைவெளி          : 50 செ.மீ x 30 செ.மீ
7. களை நீர்வாகம்    : தேவைப்படும்போது களை எடுக்கவும்
8 பயிர்ப் பாதுகாப்பு : பொதுவாக தேவையில்லை
9. அறுவடை              : விதைத்த 70-75 நாட்களில் அறுவடை அல்லது மேய்ச்சல் பிறகு
அடுத்தடுத்த அறுவடை 65 நாட்கள் இடைவெளியில் செய்யலாம்.
10. பசுந்தீவனமகசூல் :  40 டன்கள்/எக்டர்/வருடம் (4-6 அறுவடை)

2.சவுண்டல்:

சாகுபடிக்குறிப்புகள்:

 

1.பருவம் மற்றும் இரகம் : ஆண்டு முழுவதும் பயிரிட ஏற்றது.

இரகம்கோ 1 மற்றும் புதிய சவுண்டல்

  1. மண் : எல்லா மண் வகைகளிலும் வளரக்கூடியது

3.நிலம் தயாரித்தல்   : 2 முதல் 3 முறை உழவு செய்து, நிலத்தை நன்கு பண்படுத்தி தேவைக்கு ஏற்றவாறு பாத்திகள் அமைக்கவும்.

 

உரஅளவு                   : அடியுரம்

(எக்டருக்கு)

தொழுஉரம் – 25டன்

தழைச்சத்து – 10 கிலோ

மணிச்சத்து – 60 கிலோ

சாம்பல்சத்து- 30 கிலோ

5 விதையளவு                        : 10 கிலோ/ எக்டர்

  1. இடைவெளி : 1.00 மீ x 30 செ.மீ
  2. களை நிர்வாகம் : தேவைப்படும்போது களை எடுக்க வேண்டும்
  3. பயிர் பாதுகாப்பு : பொதுவாக தேவையில்லை
  4. அறுவடை : முதல் அறுவடை 120 நாட்களிலும், அடுத்தடுத்த அறுவடை 40-80 நாட்களிலும் செய்யலாம்.

 

10 பசுந்தீவன மகசூல்           : 80-100 டன் பசுந்தீவனம்/ எக்டர்

 

  1. தீவன மக்காச்சோளம்:

 

சாகுபடிக்குறிப்புகள்:

  1. பருவம் மற்றும் இரகம்: பருவ காலங்களில் மானாவாரியில் பயிரிடலாம்

ஆப்பிரிக்கன் நெட்டை இரகத்தினை பயன்படுத்தலாம்

  1. மண்: எல்லா மண் வகைகளிலும் வளரக்கூடியது
  2. நிலம் தயாரித்தல் :இரண்டு முறை உழவு செய்து, 60 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்கவும்.

 

  1. உரஅளவு : அடியுரம்

(எக்டருக்கு)               தொழுஉரம்- 25டன்

தழைச்சத்து – 30கிலோ (யூரியா-35கிலோ)

மணிச்சத்து – 40கிலோ (சூப்பர்-100கிலோ)

சாம்பல்சத்து – 20கிலோ (பொட்டாஷ்-14கிலோ)

                             மேலுரம்

யூரியா-30கிலோ/எக்டர் (விதைத்த 30 நாட்கள் கழித்து)

 

5.விதையளவு                        : 40-60கிலோ/ எக்டர்

  1. இடைவெளி : 30 செ.மீ x 15செ.மீ பாருக்கு இருபுறமும் விதைக்கவும்

7.களை நிர்வாகம்     : விதைத்த 25 நாட்கள் கழித்து முதல் களை எடுக்க வேண்டும்

8.பயிர் பாதுகாப்பு    : பொதுவாக தேவையில்லை

  1. அறுவடை : 50 விழுக்காடு பூக்கும் தருணத்தில் அறுவடை செய்யலாம். (65-70வது நாள்)
  2. பசுந்தீவன மகசூல் : 35-40 டன் பசுந்தீவனம்/ எக்டர்

 

  1. தீவனத் தட்டைப்பயறு:

அதிக புரதச்சத்தினை கொண்டது. விதைத்த 60 முதல் 70 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. எக்டருக்கு பசுந்தீவன மகசூல் 30 டன்களும் 625 கிலோ விதை மகசூலும் தரக்கூடியது. ஊடுபயிராக பயிரிட ஏற்றது.

 

சாகுபடிக்குறிப்புகள்

  1. பருவம் மற்றும் இரகம் : இறவைப்பயிராக ஆண்டு முழுவதும் பயிரிடலாம்

ஜீன் ஜீலை, பிப்ரவரி மார்ச் மிகவும் ஏற்றது

மானாவாரியில் பயிரிட செப்டம்பர்-அக்டோபர் ஏற்றது

கோ (எப்சி) 8 மற்றும் கோ 9 இரகங்களை உபயோகிக்கலாம்

  1. மண் : எல்லா மண் வகைகளிலும் வளரக்கூடியது

3 நிலம் தயாரித்தல்   : 2 முதல் 3 முறை உழவு செய்து, நிலத்தை நன்கு பண்படுத்தி, தேவைக்கு ஏற்றவாறு பாத்திகள் அமைக்கவும்.

  1. உர அளவு : அடியுரம்

 

(எக்டருக்கு)             தொழு உரம் – 25 டன்

தழைச்சத்து – 25 கிலோ

மணிச்சத்து – 40 கிலோ

சாம்பல்சத்து – 20 கிலோ

  1. விதையளவு : 20-25 கிலோ/ எக்டர்
  2. இடைவெளி : 30 செ.மீ x 15 செ.மீ இடைவெளியில் பார்களின் இரு புறமும் விதைக்க வேண்டும்
  3. களை நிர்வாகம் : தேவைப்படும்போது களை எடுக்க வேண்டும்
  4. பயிர் பாதுகாப்பு : பொதுவாக தேவையில்லை. பொறிவண்டு மற்றும் தத்துப்பூச்சி தென்பட்டால் மீதைல்டெமடான் (மெட்டாசிஸ்டாக்ஸ்) அல்லது டைமிதோயேட் (ரோகார்) 200 மில்லி, ஏக்கர் தெளிக்கவும்
  5. அறுவடை : 50 விழுக்காடு பூக்கும் தருணத்தில் அறுவடை செய்யலாம். (60-65 வது நாள்)
  6. பசுந்தீவன மகசூல் : 18-22 டன் பசுந்தீவனம்/ எக்டர்

 

கட்டுரையாளர்.

 .பியூலா எஸ்தர்,

உதவிப் பேராசிரியர், வேளாண் உழவியல் துறை,

கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, மதுரை.

மின்னஞ்சல்: beulahagri@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj