கத்திரிக்காய் பயிரில் கொழுந்து மற்றும் காய்ப்புழு மேலாண்மை

0
779

உலகளவில் கத்தரிக்காய் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த வருடம் 7.3 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் கத்தரிக்கய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கத்தரிக்காய் இல்லாத விருந்து கலைகட்டுவதில்லை என்பது சான்றோர் வாக்கு. கல்யாணம், திருவிழாக்கள் முதல் நாம் வீட்டில் தினசரி சாப்பிட்டும் சாம்பார் வரை கத்திக்காய் முக்கிய இடத்தில் உள்ளது. இத்தகைய சிறப்புமிக்க கத்திரிக்கயின் உற்பத்திக்கு மிகவும் சிக்கலாக இருப்பது கொழுந்து மற்றும் காய்ப்புழு ஆகும். Leucinodes arbonalis என்ற அறிவியல் பெயர் கொண்ட இப்புழு lepidoptera வரிசையையும் crambidae குடும்பத்தையும் சார்ந்தது. கத்தரி செடிகளில் இதன் தாக்கம் இருக்கும்பொழுது இதன் குருத்து பகுதி வாடி நடுக்கொழுந்து காய்ந்து காணப்படும். வாடிய கொழுந்துப்பகுதியை உடைத்து பார்க்கும்பொழுது கொழுந்துக்குள் இப்புழு காணப்படும். இதன் காய்களை துளைத்து அதில் உள்ள திசுக்களை உண்டு கழிவை வெளியே தள்ளிவிடும். இதன் தாக்கம் அதிகம் உள்ள சமயத்தில் பூக்கள் உதிர்வதுடன் சிறுகாய்களும் உதிர்ந்துவிடும்.

இதன் முட்டைகள் வெண்ணிறத்தில் காணப்படுவதுடன் இதன் புழு பருவம் சிவப்பு கலந்த ஊதா நிறத்தில் பழுப்பு நிற தலையுடன் காணப்படும். இதன் அந்துப்பூச்சியின் முன் இறக்கைகள் முக்கோண வடிவில் சிவப்பு நிற அடையாளங்களுடன் காணப்படும். இதன் பின் இறக்கைகள் வெண்ணிறத்தில் கரும் புள்ளிகளுடன் காணப்படும்.

கொழுந்து மற்றும் காய்ப்புழுவினை கட்டுப்படுத்தும் முறைகள்:


கத்திரி பயிரையே தொடர்ந்து பயிரிடாமல் பயிர் சுழற்சி அடிப்படையில் வேறு பயிர்களை பயிரிட வேண்டும். பாதிக்கப்பட்ட இளங்கொழுந்து மற்றும் காய்களை சேகரித்து அழித்துவிட வேண்டும். Leucilure என்ற இனக்கவர்ச்சி பொறியை ஏக்கருக்கு 5 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும். Trathala flavoorbitalis, Pristomerus testaceus, Cremastus flavoorbitalis போன்ற ஒட்டுண்ணிகளை பயன்படுத்தி புழுக்களை அழிக்கலாம். விளக்குபொறியை வைத்து தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். வேப்பங்கொட்டை கரைசலை 5 சதவிகிதம் தெளிக்கலாம். இயற்கை முறையில் இப்புழுக்களை கட்டுப்படுத்த இயலவில்லை என்றால் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தலாம். காய்களை  அறுவடை செய்யும் நேரத்தில் செயற்கை pyrethroidகளை பயன்படுத்துவதை தவிக்க வேண்டும். Chlorpyriphos என்ற பூச்சிகொல்லியினை ஒரு ஹெக்டேருக்கு 500 மில்லி என்ற விதத்தில் செடிகள் நடப்பட்ட 30 நாட்கள் கழித்து 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

கட்டுரையாளர்
எ. செந்தமிழ்,
முதுநிலை வேளாண் மாணவர் (உழவியல் துறை),
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here