Skip to content

தமிழக விவசாயிகளுக்கு கைகொடுக்கும் சாதனைத்தமிழர்! ஜவகர்அலி

யார்இந்தஜவகர்அலி? பிலிப்பைன்ஸில்உள்ளசர்வதேசநெல்ஆராய்ச்சிநிறுவனத்தில்முதன்மைவிஞ்ஞானியாகபணியாற்றும்இவர்சிவகங்கைமாவட்டத்தில்பரமக்குடிஅருகேஉள்ளஇளையாங்குடியில்பிறந்தவர். அப்பா, ஈ.ஏ. சித்திக், பாரதத்தின்தலைசிறந்தநெல்ஆராய்ச்சியாளர், இந்தியவேளாண்ஆராய்ச்சிகுழுமத்தின்துணைப்பொதுஇயக்குனராகபணியாற்றியவர். குறிப்பாகநவீனஉயர்விளைச்சல்தரும்பாசுமதிநெல்இரகங்களைஉருவாக்கியவர். அம்மா, எஸ். இ. பாத்திமுத்துதமிழ்கவிஞர் மற்றும் எழுத்தாளர்.

தன்பள்ளிப்படிப்பைடெல்லியில்முடித்தஜவகர்அலிகல்லூரிப்படிப்பாகத்தேர்ந்தெடுத்ததுஇளமறிவியல்விவசாயத்தை. பஞ்சாப்பல்கலைக்கழகத்தில்உதவித்தொகையுடன் 1988–ல்இளமறிவியல்முடித்துபட்டமேற்படிப்புக்குமரபியல்துறையைதேர்ந்தெடுத்தார்ஜவகர்அலி. புதுதில்லியில்உள்ளஐ.ஏ.ஆர்.ஐஎனும்இந்தியவேளாண்ஆராய்ச்சிநிறுவனத்தில்ஊக்கத்தொகையுடன் 1990–ல்படித்துபின்நெல்லில்ஆண்மலட்டுத்தன்மைகுறித்ததன்முனைவர்பட்டஆய்விற்காகமதிப்புமிக்கபண்டிதஜவகர்லால்நேருவிருது, கையோடுராக்பெல்லர்பவுண்டேஷனின்திட்டத்தில்இணைஆய்வாளராகபணியாற்றிபின்பி.டி.எப்எனும்முனைவர்பட்டபிந்தையஆய்வையும்முடித்துதமிழகவேளாண்பல்கலையின்உறுப்புக்கல்லூரியானதிருச்சியில்உள்ளஅன்பில்தர்மலிங்கம்வேளாண்கல்லூரியில்உதவிப்பேராசிரியராகபணியில்சேர்ந்துதமிழகஉப்பு-உவர்நிலங்களுக்குஏற்றநெல்கலப்பினஆய்வையும், ஆண்மலட்டுத்தன்மைஆய்வையும்சிறப்பாகமுடித்தார்.

ஜவஹர்அலிஅவர்கள்நெல்ஆய்வு வயலில்

1995 ஜவகருக்குமுக்கியவருடம். மருந்தாளுநரானநசீமாபானுவைகரம்பிடித்தார். காசநோய்எதிர்ப்புகுறித்தமுதுநிலைஆய்வைமேற்கொண்டநசீமாகணவரின்ஆய்விற்குமுழுஒத்துழைப்பைநல்கபின்எல்லாமேஏறுமுகம்தான்!.

இரண்டாயிரம்ஆண்டில்சர்வதேசநெல்ஆராய்ச்சிநிறுவனத்தில்திட்டவிஞ்ஞானியாகஇணைந்தஜவகர், ஈரானியநெல்ஆய்வுநிறுவனத்துடன்இணைந்துகலப்பினநெல்மற்றும்மரபணுஆய்வுகளைமேற்கொண்டுஆறுஉயர்விளைச்சல்வீரியஒட்டுஇரகங்களைகண்டறிந்தார்.

2009-ல், ஆப்பிரிக்க-ஆசியநாடுகளின்ஏழைவிவசாயிகள்வாழ்வுமேம்பட, சீனவிவசாயஅறிவியல்அகாடெமியும், பில்-மெலின்டாகேட்ஸ்பவுண்டேஷனும்இணைந்துமேற்கொண்ட “கிரீன்சூப்பர்ரைஸ்” ஆய்வின்ஒருங்கிணைப்பாளராகபொறுப்பேற்றுஒன்பதேஆண்டுகளில் 27 அதி-விளைச்சல்நெல்இரகங்களைவெளியிட்டுசாதனைபடைத்தார்.

பிலிப்பைன்ஸ்நாட்டில்மட்டும்ஏறக்குறைய 10 லட்சம்ஹெக்டேரில்பயிரிடப்படும் “ஜி.எஸ்.ஆர் 8” இரகமானதுபன்னாட்டுவிவசாயிகளின்வாழ்வில்மறுமலர்ச்சிஏற்படுத்தியுள்ளதுஎன்பதுமிகைக்கூற்றல்ல. தற்காலசூழலியல்மாறுபாட்டின்விளைவுகளானவறட்சி, வெள்ளம், உப்புத்தன்மையைதாங்கிமற்றும்இலைக்கருகல்நோய்களுக்குஎதிர்ப்புத்திறன்கொண்டுஹெக்டேருக்கு 8.5 டன்விளைச்சலை 108 நாட்களில்அள்ளித்தரும்நடுத்தரசன்னஇரகமாகும்.

ஜவகர்அலியின்சீரியவழிகாட்டலில்மேலும் 106 ஜி.எஸ்.ஆர். நெல்இரகங்களைஉருவாக்கியுள்ளதுஇவரதுகுழு. இதில் 55 நெல்இரகங்கள்பல்வேறுஆசிய, ஆப்பிரிக்கநாடுகளில்பல்லாயிரக்கணக்கானவிவசாயிகள்வாழ்வில்ஒளியேற்றிவைத்திருக்கின்றன.

உலகின்சிறந்தஅறிவியல்இதழான “நேச்சர்“ இதழில்வெளியான 3000 நெல்ஜீனோம்புராஜெக்டில்ஜவகரும்ஒருவர்என்பதுதமிழன்னையின்மகுடத்தில்மேலும்ஒருவைரமாகும்.

இவரதுவெற்றிப்பட்டியலில்மேலும் 195 அதிஉன்னதநெல்இரகங்களும்சாரும்.சமீபத்தில்சீனவேளாண்அறிவியல்அகாடமி, இவரதுஇமாலயசாதனையைப்பாராட்டி “சிறந்ததலைமைப்பண்பாளர்“ விருதுஅளித்துமகிழ்ந்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.

நூற்றுக்கணக்கானஆய்வுக்கட்டுரைகளும், முப்பதிற்கும்மேற்பட்டஆய்வர்களையும்அறிஞர்களுக்குமரபணுஆய்வில்திறன்பயிற்சிஅளித்துசர்வதேசவேளாண்ஆய்வில்தடம்பதித்தசாதனையாளரானஜவகர்அலிதற்போதுதன்தாய்மண்மீதுகண்பதித்திருப்பதுவீரியஒட்டுரகநெல்ஆய்வின்மூலம்பலகோடிஏழைஎளியவிவசாயிகள்வாழ்வில்மறுமலர்ச்சிஅளித்து, வளங்குன்றாவழியில்பொருளாதாரமுன்னேற்றத்திற்குவழிகோலும்.

அண்ணாமலைப்பல்கலைக்கழகபேராசிரியர்கள்ஜவஹர்அலிஅவர்களுடன்

இந்தியவேளாண்ஆராய்ச்சிகுழுமத்தின்தரநிர்ணயஅங்கீகாரம்பெற்றதமிழகத்தின்இரண்டாம்வேளாண்கல்லூரியானஅண்ணாமலைப்பல்கலைக்கழகத்தின்வேளாண்புலமும், பிலிப்பைன்ஸின்சர்வதேசநெல்ஆராய்ச்சிநிறுவனமும்புரிந்துணர்வுஒப்பந்தம்கையெழுத்திட்டுஇருப்பதுதமிழகவேளாண்வரலாற்றில்ஒருமைல்கல்லாகும். வைரவிழாவைக்கொண்டாடஇருக்கும்வேளாண்புலத்திற்கும் 90-வதுஆண்டைக்கொண்டாடும்சிறப்புமிக்கஅண்ணாமலைப்பல்கலைக்கழகத்திற்கும்இதுமேலும்ஒருமகுடமாகும். இந்தபுரிந்துணர்வுஒப்பந்தத்தின்மூலம்தமிழகத்தின்களர், உவர், வறட்சிமற்றும்அதிகவெள்ளத்தையும்தாங்கிவளரக்கூடியஇரகங்கள்குறித்தஆய்வுமேற்கொள்ளப்பட்டுவிவசாயிகள்சாகுபடிசெய்யஏற்றநெல்இரகங்கள்வெளியிடப்படும். இதுமட்டுமல்லாமல்ஆராய்ச்சிக்காகமாணவர்பரிமாற்றம், ஆசிரியர்பரிமாற்றம்மற்றும்விஞ்ஞானிகள்இங்குவந்துஆய்வுமேற்கொள்வதற்கும்வாய்ப்பாகஅமைந்துள்ளது. இந்ததிட்டத்தின்ஒருங்கிணைப்பாளராகமுனைவர். ரெ. பார்த்தசாரதிஅவர்களும்மற்றதுறைசார்ந்தவல்லுநர்கள் 12 பேராசிரியர்களும்இந்ததிட்டத்தில்ஆய்வுகளைமேற்கொண்டுவருகின்றனர். இதில்முதற்கட்டமாகஏயு 1 ஜிஎஸ்ஆர் (AU 1 GSR) என்றநெல்இரகத்தைகடந்தவாரம்வேளாண்மைமற்றும்உயர்கல்வித்துறைஅமைச்சர்உயர்திரு, கே.பி. அன்பழகன்அவர்கள்வெளியிட்டார். தொடர்ந்துமேற்கொள்ளப்படும்ஆய்வுகளிலிருந்துதமிழகத்துக்குஏற்றபுதியஇரகங்கள்வெளியிடப்படஇருக்கிறது.  இதன்மூலம்தமிழகவிவசாயிகள்வாழ்வில்ஒளியையும், அவர்கள்முகத்தில்மலரும்புன்னகையையும்வரும்காலத்தில்பார்க்கலாம்என்பதுதிண்ணம்.

ஜவகர்அலிஅவர்களைத்தொடர்புகொள்ள: j.ali@irri.org

கட்டுரையாளர்:மு. ஜெயராஜ், உதவிப்பேராசிரியர் (உழவியல்), தொன்போஸ்கோவேளாண்மைக்கல்லூரி, சகாயத்தோட்டம். தொடர்புஎண்: 8220851572. மின்னஞ்சல்: jayarajm96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news