மஞ்சளின் மருத்துவப்பயன்கள்  – மருத்துவர் பாலாஜி கனகசபை

0
984
மஞ்சள்
வேதகாலத்தில் இருந்தே மஞ்சள் நம் சாதாரண பயன்பாட்டில் இருந்து வருகிறது என்பதை நாம் அறிவோம். மேலும் அனைத்து மங்களகரமான  நிகழ்ச்சிகளிலும், ஆன்மீக வழிபாடுகளிலும் , திருவிழாக்களிலும், அனைத்து தமிழர்களின் உணவுகளிலும் மஞ்சள் சேர்க்காத உணவே இல்லை எனலாம்

மஞ்சளானது ஆன்டி பாக்டீரியல் Antibacterial, ஆன்டிவைரஸ்Antiviral, and பூஞ்சைக்கு எதிராகவும் Antifungal  செயல்படுகிறது.

கோவிட் 19 நோய்க்கு தற்போது antiviral agents, antibiotics and anti-inflammatory  துணை மருந்தாக பயன்படுத்தப்பட்டுவருகிறது

இயற்கையில்  பலவகையான வேதிப்பொருட்களை கொண்ட சில மருந்துகளை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகையில் மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற முக்கியமான வேதிப்பொருள் வைரஸ்கள் உள்நுழைவதை தடுக்கவும், வைரஸ் பல்கி பெருகுவதை தடுக்கவும், சில வைரஸ்களை கொல்லவும் செய்கிறது என்பதை ஆராய்ச்சிகள் வழியாக கண்டறிந்துள்ளனர். அதாவது குர்குமின்  antiviral  ஆக செயல்பட்டு வைரஸ்களில் இருந்து பாதுகாக்கிறது

கொரோனா பெருந்தொற்று போன்ற பல வகையான வைரஸ்களான நிபா,இன்ப்ளூயன்சா, யூமன் சிம்பிக்ஸ்,HIV, HSV-2, HPV வைரஸ் , அடினோ வைரஸ் என பல நோய்களின் தாக்கங்கலிருந்து மஞ்சள் நம்மை பாதுக்காக்கிறது.

நம் உடலில் உள்ள Angiotensin Converting Enzyme 2(ACE2)  என்ற செல்லில் இருக்கும் மேல்தளத்தில் இருக்கும் ஏற்பி(receptor) வழியாக கோவிட் போன்ற கொரொனா வைரஸ்கள் உள்ளே நுழைந்து பல்கிப் பெருகி நோய் ஏற்பட வாய்ப்பாக அமைகிறது. வைரசில் இருக்கும் எஸ் எனும் புரோட்டின் செல்களில் இருக்கும் மேல்தளத்தில்  ஒட்டி பல்கி பெருகுகிறது. இது குறிப்பாக மூக்கில் இருக்கும் மேற்புறச்செல்கள், நுரையீரல் நுண் சுவாச அறைகள்(alveolar) மற்றும் குடல்களில் இருக்கும் மேற்செல்கள் ஏற்பி மூலமாக மேற்கண்ட இடங்களில் உள்நுழைகிறது.
இதன் மூலம் கொரோனா ஏற்படுகிறது, மேலும் இரத்தக்குழாயையும் சுருக்கிவிடுகிறது.

இதன் மூலமாக நுரையீரல் மற்றும் நுண்சுவாசக்குழாய்களில் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த வைரஸ் பாதிப்பானது மஞ்சளில் இருக்கும் குர்குமினை துணை மருந்தாக பயன்படுத்தி வீரிய தன்மையுடைய வைரசை தடுக்கவும், வைரஸ் பல்கிப் பெருகுவதை தடுக்கவும் உதவுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகிறது. மேலும் Angiotensin II-AT1 ஏற்பியில் செயல்பட்டு நுரையீரயில் உள்ள வீக்கத்தை குறைத்து மூச்சுத்திணறலை கட்டுப்படுத்துகிறது எனவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது.

viral S protein  ஆனது  ACE2 ஏற்பியில் சேராமல் தடுக்க குர்குமின் தடுக்கிறது. மேலும் இந்த குர்குமின் ஆனது மிகச்சிறந்த வைரஸ் தடுப்பு மருந்தாக , இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கும் சீர்செய்ய துணை மருந்தாகவும்ல, ஆஸ்துமா , வைரஸ் நிமோனியா போன்ற பெரும் கிருமித்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கவும் குர்குமின் உதவுகிறது.
வைரஸ் இருக்கும் இடங்களாகக் கருத்தப்படும் வாய்,, தொண்டைக்குழி, நுரையீரல்  பாதை, கண், மற்றும் வயிறு போன்ற இடங்களில் குர்குமின் நன்கு செயல்பட்டு வைரஸ் பல்கிப்பெருகும் தன்மையை குறைக்கிறது.

உடலில் இருக்கும் ரெனின்  ஆஞ்சியோடென்சன் ஆல்டோஸ்டிராய்ன் சிஸ்டத்தின் வழியாக இது ஆன்டி ஆக்சிடென்ஸ், வீக்கம் குறைப்பானாக , இரத்த அழுத்தத்தை குறைப்பானாக மஞ்சளில் இருக்கும் குர்குமின் செயல்படுகிறது. மேலும்  ACE and AT1R ஏற்பியில் மூளை செல்கள் மற்றும் இரத்தக்குழாய்களில் செயல்பட்டு இரத்த அழுத்தத்தைச் சீர் செய்கிறது. மற்றும் மன அழுத்தத்தையும் குறைக்கிறது.

இப்போது கொடுக்கப்பட்டு வரும் கோவிட் 19 சிகிச்சையில் விட்டமின் சி மற்றும் சிங்ப் நோய் எதிர்ப்புப்பொருளாக மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் இயற்கையில் கிடைக்க்கூடிய மஞ்சளை பச்சையாகவோ(உரம் போடாதது ), தூளாகவோ உணவில் சேர்த்துக்கொள்வது, அவ்வப்போது மஞ்சள், நொச்சி இலை போட்டு ஆவி பிடிப்பதுதும், மஞ்சளை பாலில் கலந்து குடிப்பதும், மஞ்சள் நீரால்  வெந்நீரில் குளிப்பதும்   வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க உதவும், பெண்கள் தினமும் மஞ்சள் பூசி குளித்துவர சிறந்தது. இது காலம் காலமாக நம் பண்பாட்டில் இருந்து வந்த தமிழர் மரபு. ஆனால் அதை நாம் மறந்துவிட்டோம்

சித்த மருத்துவம்
மஞ்சளின் குணம்
பாடல் 1

பொன்னிற மாம்மேனு புலானாற்ற
மும்போகும்
மன்னு புருஷம் வசியமாம்-பின்னயேழும்
வாந்திபித்த தோஷமையம் வாதம்போந்
தீபனமாங்
கூர்ந்த நறுமஞ்ச டனக்கு
பாடல் 2

தலைவலி நீரேற்றஞ் சளையாத மேக
முளைவுதரு பீநத்தினூடே-வலிசுரப்பு
விஞ்சு கடிவிஷமும் வீறுவிர
ணங்களும்போ
மஞ்சட் கிழங்குக்கு மால்
சித்தர் பாடல்

பெண்கள் மஞ்சளை உடலில் தேய்த்து குளிக்கும்போது நறுமணம் ஏற்படுவோடு கணவனை வசியம் செய்யும் என்றும், தலைவலி, வாதம், பித்தம் , கபம் போன்ற தோசங்களைப்போக்கும், விஷக்கடி, தலைபாரம், தலைவலி, இதர உடல்வலிகள் கட்டுப்படும்

உண்ணும் முறை

ஒரு நாளைக்கு 300 மி கிராம் அளவு ஒரு நாளைக்கு நான்குமுறை மஞ்சளை பச்சையாகவோ(உரம் போடாதது) அல்லது  தூளாகவோ உணவில் சேர்த்தோ அல்லது தனித்தோ உண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்

மஞ்சளில் உள்ள குர்குமினை நம் சத்து கிரகிக்கவேண்டுமெனில்  அதில் சிறிது மிளகுத்தூள் சேர்த்து பாலில் பருகிவந்தால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கும். உணவுகளை சமைத்தபின் அதன் மேல் மஞ்சள் தூள், மிளகுத்தூள் கலந்து உணவில் சமைப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு கிருமிகள் வராமல் தடுக்கமுடியும்
இணைப்பு

https://www.ncbi.nlm.nih.gov/books/NBK92752/#:~:text=Turmeric%20is%20one%20such%20herb,Jain%2C%20and%20Joshi%201988).

மருத்துவர் பாலாஜி கனகசபை,MBBS, Phd(Yoga)
அரசு மருத்துவர்
கிருஷ்ணகிரி மாவட்டம்
9942922002

சுத்தமான மஞ்சள் தூள் வேண்டுமெனில் அக்ரிசக்தி அங்காடியை தொடர்பு கொள்ளலாம்

99407-64680

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here