தேனீ வளர்ப்பு பகுதி – 8

0
821

தேனீக்களின் கோடை கால மேலாண்மை

பெரும்பாலான பகுதிகளில் தேன் ஓட்ட (honey flow) காலமானது, கோடை காலத்தைத் தொடர்ந்து வருகிறது. கோடை காலமானது பொதுவாக அதிக வெப்பம் மற்றும் வெப்ப காற்றால் குறிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் வெப்பநிலை பெரும்பாலும் 40oC ஐ விட அதிகமாக இருக்கும். எனவே தேன் ஓட்டம் பருவத்தில் கடினமாக உழைத்த பழைய தேனீக்கள் இறப்பு மற்றும் தேனீ எதிரிகளின் தாக்குதலால் தேனீக்களின் எண்ணிக்கை குறைகின்றது. மேலும் உணவு பற்றாக்குறையால் வேலைக்கார தேனீக்கள் ஆண் தேனீக்களை வெளியேற்றுகின்றன.

இக்காலகட்டத்தில், தேனீக்கள் பெரும்பாலும் அவற்றின் இளம்புழுக்கள் வளர்ந்து வரும் வரை கூட்டுக்குள்ளேயே சிறிய வேலைகளைச் செய்கின்றன. ராணியின் செயல்பாடும் குறைந்து முட்டையிடுவதை நிறுத்துகிறுது. ஏறக்குறைய அனைத்து இளம்புழுக்களும் உருவான பிறகு அவை போதுமானதாக இல்லையெனில், ​​தேனீ கூட்டத்தோடு கூண்டைவிட்டு பறந்து சென்றுவிடுகின்றன. வெற்று அடைகள் மற்றும் மெழுகு அந்துப்பூச்சியால் பாதிக்கப்பட்ட அடைகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

இந்த காலகட்டத்தில் செய்ய வேண்டிய மிகச் சிறந்த விஷயங்கள்,

  • பெட்டியில் இளம்புழுக்களை உருவாக்கி மற்ற தேனீக்களை அடைகாக்க தூண்டுவது.
  • போதுமான அளவு தேனுடன் கூடிய வலுவான பெட்டிகள் கோடையில் சில அடைகாக்கல்களைத் தொடர்ந்து வளர்க்கும்.
  • இளம் வளமான ராணிகள் தலைமையிலான பெட்டிகள் தொடர்ந்து முட்டையிடும்.
  • சில வலுவான பெட்டிகள் எளிதில் மலர் மூலங்களை பயன்படுத்திக் கொள்ள முடிகிறது மற்றும் எதிரிகளால் குறைவாகத் தாக்கப்படுகின்றன.
  • சில இடங்களில் வெப்பநிலை 45–47oC வரை உயரும்; எனவே மேல் போர்த்தப்பட்ட கோணிப்பைகளை மதியம் மற்றும் பிற்பகலில் இரண்டு முறை ஈரப்படுத்த வேண்டும்.
  • பெட்டியின் காற்றோட்டம் உறுதி செய்யப்பட வேண்டும், ஆனால் துளைகள், விரிசல்கள் மற்றும் பிளவுகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும்.
  • தேனீ வளர்ப்பவர்களுக்கு தேனீக்களுக்கு கிடைக்கக்கூடிய உயிர்வாழ் தாவரங்களின் முழுமையான தகவல்கள் மற்றும் கடைசியாக தேன் பிரித்தெடுக்கும் நேரத்தில் பெட்டியினுள் அனுமதிக்கப்பட வேண்டிய அளவு குறித்து தெரிந்து இருக்க வேண்டும்.
  • கோடையில் தேனீக்கள் தங்கள் அறை வெப்பநிலையை பராமரிக்க, வெளி மூலத்திலிருந்து தண்ணீரைச் சேகரித்து, அதை அறை உள்ளே கொட்டி ஆவியாக்குவதன் மூலம் புதிய நீர் ஆதாரத்தை உருவாக்குகின்றன. எனவே அடிப்பகுதியில் ஒரு துளையிடப்பட்ட தண்ணீரால் நிரப்பப்பட்ட ஒரு மண் குடத்தை வைத்து, அதிலிருந்து விழும் நீர் சாய்வான கற்கள் அல்லது மர சட்டத்தின் மீது விழ அனுமதிப்பதன் மூலம் தேனீக்கள் எளிதில் நீர்த்தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றன.

கோடையில் மேற்கண்ட மேலாண்மை நடைமுறைகள் பெட்டிகளின் இழப்பை சரிபார்க்கும். எனவே “தேனீக்களுக்கு வசதிகளைச் சேர்க்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும்”.

தொடரும்

கட்டுரையாளர்: பா. பத்மபிரியா, முதுநிலை வேளாண் மாணவி, பூச்சியியல் துறை,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம். மின்னஞ்சல்: priyabaluagri@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here