Skip to content

நீர் – வேதம் முதல் விஞ்ஞானம் வரை (பகுதி-1)

உலகின் மூத்த உயிர் தோன்றியது தண்ணீரில்தான் இதிலிருந்தே புரிவது மனிதன் தோன்றுமுன், பூச்சிகள், விலங்குகளுக்கு, முன் செடி கொடிகளுக்கும் முன் தோன்றியது நீர் தான். உலகில் எல்லா மதங்களும், இலக்கியங்களும் நீரை பெரிதும் போற்றுக்கின்றன. வேதங்களில் தலையான வேதமான ரிக் வேதம் அப  என்னும் சொல்லில் நீரை தெய்வமாக்குகிறது. இன்னும் பல இடங்களில் நீரை பெண்ணென்றும் தாய் என்றும் கடவுள்களுக்கெல்லாம் தலையான கடவுள் என்றும் போற்றுகின்றது  கிறிஸ்தவத்தில் ஒருவனை கிறிஸ்தவனாய் அங்கீகரிப்பதற்கு நீரை கொண்டு தான்  ஞானஸ்நானம் செய்கின்றனர். இஸ்லாம் நீரை அறிவின் கருவாய் கருதுகிறது அதுமட்டுமன்றி அழகு தோட்டம் அமைக்கும் (MUGAL GARDEN) இடங்களில் எல்லாம் மக்கள் நீரை மையத்தில் பயன்படுத்துவார்கள். இஸ்லாமியர்களைப் பொருத்தவரை நீர் இருக்குமிடம் அவர்களுக்கு சொர்க்கத்திற்கு  நிகர். பெளத்தமும் நீரை ஞானம் அடைவதற்கான பாதை என்றும் உடல், மனம், உயிர் என அனைத்தையும் தூய்மையாக்கும் பொருள் என்றும் போற்றுகின்றது  இப்படிப்பட்ட நீர் அறிவியல், உலகளவிலும் இதன் தன்மையைக் கண்டு வியக்க வைக்கிறது.

ஹென்றி கேவெண்டிஷ் (HENDRY CAVENDISH) என்னும் அறிவியல் அறிஞர் தான் முதன்முதலில் நீர் ஹைட்ரஜன் ஆக்சிஜன் சேர்ந்த கலவை என்பதை கண்டறிகிறார்  (ஆக்சி ஹைட்ரஜன் எபெக்ட்). அவருக்குப்பின் 1811 அமாடியோ அவகாட்ரோ (Amadeo avagadro) என்பவர் நீரின் மூலக்கூற்றை (H2O) உலகிற்கு அறிவிக்கிறார். அதுவரை ஆராதிக்கும் பொருளாய் இருந்து வந்த நீர் அதற்குப்பிறகுதான் அறிவியல் பொருளாய் உருமாறுகிறது.

இன்றளவும் திடமாகவும் (solid), திறவமாகவும் (liquid), காற்றாகவும் (gas)  இருக்கும் ஒற்றை பொருள் நீர் இன்றி வேறு ஏதும் இல்லை இவ்வுலகில். காற்றைப் போல 775 மடங்கு அதிக அடர்த்தி கொண்டது நீர். அதனால் தான் நம்மால் அதில் நீந்த  முடிகிறது. விண்வெளிப் பயணம் மேற்கொள்வோரின்  விண்வெளி நடைபயிற்சி துவங்குவது  நீரில்தான். நீர் நெருப்பை கடத்துவது குறைவு (BAD CONDUCTOR OF HEAT) அதனால் தான் இந்த உலகம் தகுந்த தட்பவெப்ப சூழலில் நிலவுகிறது. நிறமற்ற, மனமற்ற, உருவமற்ற, சுவையற்ற இந்தப் பொருள்தான் உலகில் பெரும் கரைப்பான் (UNIVERSAL SOLVENT) ஆக திகழ்கிறது. உலகில் இதைப்போல் அதிக பொருளைக் கரைக்கும் கரைப்பான் எதுவுமே இல்லை ஏன் கரையும் பொருட்களையே நீரில் கரைபவை (water soluble) நீரில் கரையாதவை(non-water soluble or acid soluble) என்று இதைக் கொண்டுதான் பிரிக்கின்றனர்.

பி ஹெச் (pH) எனும் கார அமில கணக்கீட்டில் கூட நீர்தான் நடுநிலை. நீர் அமிலமாகவும் (ACID – PROTON DONOR) காரமாகவும் (BASE – PROTON ACCEPTOR)  செயல்படுகின்றது. இப்படி ஆன்மீக தளத்திலும் அறிவியல் தளத்திலும் பல தாக்கத்தை ஏற்படுத்திய தண்ணீர் பல கண்டுபிடிப்புகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் எப்படி பயன்பட்டது என்பதை வரும் வாரங்களில் பார்ப்போம்.

தொடரும்…

கட்டுரையாளர்: அன்பன் செ. விக்னேஷ், இளநிலை வேளாண்மை பட்டதாரி, குளித்தலை, தொடர்பு எண்: 8344848960, மின்னஞ்சல்: vickysvicky42@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news