Skip to content

மாப்பிள்ளை சம்பா அரிசியில் உணவு தயாரிப்பு (பகுதி-2)

மாப்பிள்ளைச் சம்பா முடக்கத்தான் கீரை தோசை:

என்னென்ன தேவை?

  • மாப்பிள்ளைச் சம்பா அரிசி – 1 கப்
  • உளுந்து – கால் கப்
  • வெந்தயம், சீரகம், மிளகு – தலா கால் டீஸ்பூன்
  • முடக்கத்தான் கீரை – 1 கப்
  • உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

  • மாப்பிள்ளைச் சம்பா அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் சுத்தம் செய்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
  • அவற்றுடன் சீரகம், மிளகு, சுத்தம் செய்த முடக்கத்தான் கீரை சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்துக் கலக்கி இரண்டு மணி நேரம் அப்படியே வைக்கவும்.
  • பிறகு அந்த மாவை சூடான தோசைக் கல்லில் ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு இரண்டு புறமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.
  • பூண்டு கார சட்னியுடன் பரிமாறினால் அருமையாக இருக்கும்.

கட்டுரையாளர்: ச .கண்ணன், வேளாண்மை அலுவலர் மற்றும் இயற்கை ஆர்வலர், மயிலாடுதுறை. அலைபேசி எண்-9965563563.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news