Skip to content

வீட்டிற்கு அழகு சேர்க்கும் அடீனியம் பூ

அடீனியம் என்றால் என்ன?

பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் அழகையும், ரம்யமான பூக்களையும் கொண்டுள்ள வெளிநாட்டுச் செடியான அடீனியம், இன்று நம்ம ஊர் வீடுகளிலும் வளர்ந்து அழகுக்கு அழகு சேர்க்கின்றது.

ஒரு வீட்டின் முன்பு ஜந்து அடீனியம் செடிகள் இருந்தால் அந்த வீட்டின் அழகே தனிதான்.

 

அடீனியம் வகைகள்:

1. அடீனியம் அரபிக்கம் (Adenium Arabicum)

2. அடீனியம் போஹ்மியானம் (Adenium Boehmianum)

3. அடீனியம் கிறிஸ்பம் (Adenium Crispum)

4. அடீனியம் மல்டிஃபுளோரம் (Adenium Olifolium)

5. அடீனியம் ஒலிபெலியம் (Adenium Swazicum)

6. அடீனியம் ஸ்வாசிகம் (Adenium Socotrunum)

7. அடீனியம் சோமாலி (Adenium Somalanee)

8. அடீனியம் ஒபேசம் (Adenium Obesium)

9. அடீனியம் ஓமன் (Adenium)

அடீனியம் இனங்களில் உலகமெங்கும் அதிகமாக வளர்ப்பது அடீனியம் ஒபேசம் (Adenium Obesium) இனமாகும்.

அடீனியம் பூர்வீகம்:

அடீனியம் செடியின் பூர்வீகம் சவூதி அரேபியா. இந்தியாவில் அடீனியம் எனப்படும் பாலைவன ரோஜாக்கள், 500 அதிகமான நிறங்களில் கிடைக்கின்றன, ஓரிதழ் கொண்டவை, நிறைய அடுக்குகள் கொண்டவை எனப் பல வகைகள் உள்ளன.

அடீனியம் செடியின் அழகுக்குக் காரணம், சின்ன பூந்தொட்டிகளில் உடல் பகுதி பருத்து, மெல்லிய கிளைகளுடன் உச்சியில் பூக்கள் தென்படுவதுதான்.

அடீனியம் வளர்ப்பதற்கு எளிதான இனமாகும். 10 மாதங்களில் பெரியதாக வளர்ந்து பூ பூக்கும் இனமாகும்.

அடீனியம் ஆயுள்:

இவற்றின் ஆயுள் 500 முதல் 1000 வருடங்கள்.

அடீனியம் பாதுகாப்பு முறை:

அடீனியம் மிகக்குறைந்த அளவு தண்ணீரும் அதிக சூரிய வெளிச்சமும் தேவைப்படுகிற செடிகள் இவை. திறந்தவெளி வெயிலில் வைக்க வேண்டும்.

தினமும் தண்ணீர் ஊற்றக்கூடாது, 3 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் ஊற்றினால் போதுமானது. நீங்கள் போதும் போதும் என்கிற அளவுக்கு நிறைய பூக்கள் மலரும். பராமரிப்பு எளிதானது.

எதிர்பாராத விதமாக ஊருக்குப் போவதானால் அதிகபட்சம் மூன்று நாட்களில் செடிகள் இறந்துவிடும்.

அடீனியம் வைத்திருப்பவர்கள் 6 மாதங்கள் ஊருக்குப் போய்விட்டுத் திரும்பினாலும், வரும் போது அழகிய மலர்களுடன் அவை உங்களை வரவேற்கும். இந்த பாலைவன ரோஜா..

அடீனியம் சிறப்பம்சம்:

இவற்றின் தண்டானது அடிக்கடி வடிவம் மாறிக் கொண்டே இருக்கும். எனவே அவற்றை தரையில் வைப்பதைவிட, தொட்டிகளில் வைத்தால்தான் அந்த அழகை ரசிக்க முடியும்.

உலக மார்க்கெட்:

தாய்லாந்தில்தான் அடீனியத்தின் உலக மார்க்கெட் இருக்கு. அங்கேதான் ஆயிரக்கணக்கான வகைகளில் அடீனியம் உற்பத்தி பண்றாங்க.

நர்சரி தோட்டம் போட்டு அடீனியம் செடிகளை விற்பனை செய்யறாங்க.

அடீனியம் அராபிகம் என்று பாப்புலர் இனத்தின் விதை.

அடீனியம் நடும்போது கவனிக்க வேண்டியவை:

நிழல் அதிகம் உள்ள இடத்தில் அடீனியம் நட்டால் செடிகளில் பூக்கள் தோன்றாது என்பதோடு செடியின் உடல் பகுதி பக்கவாட்டில் வளராமல் நெடு நெடுவென வளரத்துவங்கும். இது பார்க்க அழகாக இராது.

சாண உரம், கடலைப்பிண்ணாக்கு ஆகிய இயற்கை உரங்களை நேரடியாக போடுவது செடிக்கு நோய் தோற்றுகளை உருவாக்கும். எனவே இவற்றை நன்கு பொடி செய்து போடுவது நல்லது.

3 கிராம் பொட்டாசியம் நைட்ரேட்டை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் மீது தெளித்தால் அதிகமாக பூக்கள் பூக்கும்.

விதை சேகரித்தல்:

விதைக்காக சில செடிகளை நாம் பூவோடு விடவேண்டும். பூக்கள் பீன்ஸ் தோற்றத்தில் விதைகளாகி, பின்னர் பழைய ஏர் இந்தியா எம்பளத்தில் உள்ள ராஜாவின் மீசை போன்ற தோற்றத்தில் வளரும். 3 மாதத்தில் நன்கு காய்ந்து வெடிக்கும் பருவத்தில் வரும்போது காய்களை பறித்து, உடைத்து அதிலிருந்து விதைகளை சேகரிக்க வேண்டும்.

அடீனியம் வளர்க்கும் முறை:

பிளாஸ்டிக் டப்பாவில் மெல்லிய டிஷ்யூ பேப்பரில் வைத்து தண்ணீர் நனைத்து விதைகளை வரிசையாக வைக்க வேண்டும். இருட்டறையில் வைத்து ஜந்து நாட்கள் கழித்துப் பார்த்தால் அவை முளை விட்டிருந்தது. மூன்று நாட்களிலேயே முளை விடும். ஆனால் ஜந்து நாட்கள் ஆன பின்னர்தான் சற்று விதையில் இருந்து வெடித்துக்கிளம்பிய இலையின் தண்டு சற்று கெட்டிப்படும்.

அடீனியம் நடும்போது மண்ணுடன் சிறிது மணல், மண்புழு உரம் போட்டு பிளாஸ்டிக் தொட்டி அல்லது கெட்டியான பிளாஸ்டிக் பையில் வளர்ப்பது நல்லது.

மண் தொட்டிகளை தவிர்ப்பது நல்லது. 19:19:19 என்ற விகிதத்தில் என்.பி.கே இருப்பது நல்லது. இது இலை மற்றும் பூக்கள் அதிகமாக உருவாக உதவி புரியும்.

இரண்டு மாதங்களில் இலைகள் பருமனாகி, சின்ன கிளை விட்டதும்             அவற்றை அப்படியே வேருடன் பிடுங்கி மண், மணல், மண்புழு உரம்கலந்த பிளாஸ்டிக் பை அல்லது பிளாஸ்டிக் தொட்டியில் நடவேண்டும்.

தண்டுப்பகுதியின் பாதியளவு வெளியே தெரியும் வகையில் இருக்க வேண்டும் என்பதோடு நன்கு வெயில் இருக்கும் இடத்தில் செடிகளை வைப்பது நல்லது.

முதலில் இரண்டு மாதத்துக்கு தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும். இரண்டு மாதங்களுக்குப் பின்னர் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் ஊற்றினால் போதுமானது.

ஜந்தாவது மாதத்தில் பெரும்பாலும் பூக்கத் துவங்கும், ஆனால் மழை பெய்தால் பூக்கள் உதிர்ந்து விடும். மற்றபடி மழை இல்லை எனில் பூத்த பூக்கள் பல நாட்கள் வாடாமல் செடியிலேயே நிற்கும்.

மழைக்காலங்களில் தண்ணீர் நேரடியாக அடீனியத்தில் விழாத வகையில் தொட்டியை மாற்றி வைப்பது மிகவும் நல்லது.

தண்டின் கீழ்ப்பகுதியில் அழுகி இருப்பதாகத் தெரிந்தால் செடியை வேருடன் பிடுங்கி எடுத்து, அழுகிய பாகத்தை கவனமாக அறுத்து மாற்றி விட்டு அந்த இடத்தில் கிருமிநாசினி வைத்து நன்கு தேய்த்து விட்டு, செடியை வேறொரு பையில் அல்லது தொட்டியில் நடலாம்.

இலைகள் பழுத்து விழுந்து கிளை அழுகி இருப்பது தெரிந்தாலும் அந்த இடத்தில் கிருமி நாசினி பேஸ்ட்டை வைத்து செடியைப் பாதுகாக்கலாம்.

அடீனியம் சந்தைப்படுத்துதல்:

அதுபோல் இன்றைக்கு இணையதளம் உலகாளாவிய சந்தைப்படுத்துதலைப் பெற்றுத்தந்துள்ளாதால் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உட்பட உள்ள தளங்கள் மூலமாக எளிதில் செடிகளை விற்கவும் முடியும்.

தமிழ்நாட்டின் வெப்ப நிலையைப் பொறுத்தவரை இந்த அடீனியம் செடி, வளர்க்க ஏற்றது. மொட்டை மாடியில் கூட வைக்கலாம்.

2 thoughts on “வீட்டிற்கு அழகு சேர்க்கும் அடீனியம் பூ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj