இந்தியாவில் விவசாயம் 2020, தேவை நால்வர் கூட்டணி – ஒரு பார்வை

0
3119

ஐநா சபையின் கணக்கீட்டின் படி 2050 ஆம் ஆண்டில், உலகில் மொத்த மக்கள் தொகை 10 பில்லியன் (ஆயிரம் கோடி) இருக்கும், இந்தியா 173 கோடியாக இருக்கும். 2017 கணக்கெடுக்கின் படி சுமார் 133 கோடி பேர் இந்திய மக்கள் தொகையாக இருக்கிறது.

அதிகரித்து வரும் உலக மக்கள்தொகையுடன் விவசாயத்தை அளவிட வேண்டிய அவசியம் அதே சமயம் அத்தியாவசியமும் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்தியாவில் விவசாயம் செய்ய ஆட்கள் குறைந்துள்ள நிலையில் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது அதே சமயம் விளைநிலங்களும் குறைந்து வருகின்றன, மேலும் விவசாயிகள் மட்டுப்படுத்தப்பட்ட இயற்கை வளங்கள் மற்றும் காலநிலை மாற்றங்களுடன் போராடிக்கொண்டிருக்கின்றனர் , அது மட்டுமல்லாமல் வெள்ளம், வறட்சி மற்றும் மோசமான மழை போன்ற தீவிர வானிலை பயிர் உற்பத்தித்திறனையும் விவசாயிகளின் வருமானத்தையும் குறைக்கிறது. ஆகையால் ஒவ்வொரு வருடமும் விவசாயத்தை விட்டுச்செல்லும் விவசாயி்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. ஒவ்வொரு விவசாயி விவசாயத்தை விட்டுச்செல்லும்போதும் இந்தியாவில் எல்லா மக்களின் உணவுப்பொருளின் விலையும் குறிப்பிட்ட சதவிகிதம் ஏறும்.

பாதுகாப்பான, மலிவு மற்றும் போதுமான உணவை உறுதி செய்வதற்கும், குறைந்த உற்பத்தித்திறன் மற்றும் வருமானத்தைச் கொண்டுள்ள விவசாயிகளுக்கு சவால்களை சமாளிப்பதற்கும், நிலையான வருமானத்தை ஈட்டவும், உலகளவில் போட்டித்தன்மையுடனும் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

அதே சமயம் அரசு, தொழிற்துறை, விவசாயிகள் மற்றும் சமூகம் இடையே ஒரு கூட்டு அணுகுமுறை தேவைப்படுகிறது. தொழில்நுட்ப கண்டுபிடிப்பு, உற்பத்தித்திறன் மேம்பாடு, சந்தை அணுகல் மற்றும் இடர் குறைப்பு ஆகியவற்றில் கவனம் இந்த நான்கு பேரின் கூட்டு அணுகு முறை மிக அவசியமாகிறது

ஏனெனில் விவசாயத்திற்கான சிக்கல் பிரதான சிக்கல்
1.குறைந்தவ வருமானம்,
2.இடர்பாடுகள் அதிகம்
3. விவசாய நிலங்கள் குறைவு
4. இயற்கை (நிலம்,நீர், காற்று) மாசு
இவற்றை தாக்குபிடித்து வளர்க்க சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரை திறம்பட பயன்படுத்துவதற்கு ஏற்ற தொழில்நுட்பம், குறைந்த இடத்தில் தேவையான ஊட்டச்சத்துக்களுடன் அதிக உற்பத்தி, ஆகியவை மிக அவசியம்

அதேபோல் விளைந்த உணவுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய அரசும் தனியார் நிறுவனங்களுக்கம் பெரும் பங்களிப்பை கொடுத்தே ஆகவேண்டும்.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமையாக இருக்கவேண்டும் .
ஏனெனில் அதிகரித்து வரும் மக்கள் தொகையால் அடுத்த தலைமுறைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு நிச்சயம் வரும். அவற்றினை களைய இப்போதிருந்தே நடவடிக்கை எடுப்பது அவசியம்

2020 கால கட்டம் இந்திய விவசாயத்திற்கு முக்கியமானது. இது வருங்கால சந்ததியினருக்கு விவசாயத்தை ஒரு கவர்ச்சிகரமான தொழிலாக மாற்றிக்காட்டுவதோடு , விவசாயத்தி் மீது அதிக ஆர்வத்தினையும் கொண்டு வரும்.
விவசாயத்தில் மின்னணுக் கருவிகளை விவசாயிகளுக்கு பயிற்சிக்கொடுத்து உற்பத்தியையும், உணவுப்பாதுகாப்பையும் உறுதி செய்யவேண்டும்.

நிகழ்நேரத்தில் தரவு சார்ந்த முடிவுகள் மிக அவசியம் எடுக்க முடியும். ட்ரோன்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் சிறுதொழில் விவசாய உலகில் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன. களைகள், பூச்சிகள் மற்றும் நோய்களை அடையாளம் காணவும், வேளாண் வேதிப்பொருட்களின் பயன்பாட்டைக்கண்காணிக்க ட்ரோன்கள் உதவும். சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள விவசாயிகள் ஏற்கனவே ட்ரோன்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்திய பண்ணைகளில் பயன்படுத்த ட்ரோன்கள் அனுமதிக்கப்பட்டவுடன், அது விவசாயிகளுக்கு மிகுந்த நன்மைகளை அளிக்கும்.

என்னதான் கலப்பின விதைகளை நாம் வாங்கினாலும் விதைக்காக அடுத்தவர்களை சார்ந்திருப்பது மிகவும் ஆபத்தான ஒன்று. எனவே விதைகளை விவசாயிகளே கையிப்பில் வைத்துக்கொள்ளவேண்டும் அல்லது விவசாயிகளே தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளலாம்.

இந்தக்கட்டுரை பல விசயங்களை குறிப்பிட்டிருந்தாலும் ஏற்கனவே குறிப்பிட்டவாறு அரசு, தொழிற்துறை, விவசாயிகள் மற்றும் சமூகம் இடையே ஒரு கூட்டு அணுகுமுறை தேவைப்படுகிறது, இந்த அணுகு முறையை தேவையான இடத்தில் தேவையானவர்களை பிரதானமாகக்கொண்டு செயல்படுத்திடலாம்

செல்வமுரளி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here