மழைவாழ் மக்களின் அற்புத மூலிகை : ஆரோக்கியபச்சா

0
1010

தமிழகம் மற்றும் கேரளாவில் அமைந்துள்ள அகஸ்தியர் மலையின் அதிக ஆற்றல் வாய்ந்த மூலிகையாக ஆரோக்கியபச்சா விளங்குகிறது.

மேற்குத்தொடர்ச்சி மலை பல இயற்கை மூலிகைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அப்படி ஒரு குறிப்பிடத்தக்க மூலிகைதான் ஆரோக்கியபச்சா

இந்த ஆரோக்கியபச்சா வின் முழுமையான மரபணு கூறுக்களை ஆராய்ந்து அதன் மரபணு விபரங்களை வெளியிட்டுள்ளனர் கேரள பல்கலைக்கழக ஆய்வாளர்கள் , இவ்வாறு வெளியிட்ட இந்த மரபணு கூறுக்களின் விபரங்கள் அமெரிக்காவிலிருந்து பாதுக்காப்படும் National Centre for Biotechnology Information (NCBI) லும் சேர்க்கப்பட்டுள்ளது

ஆரோக்கிய பச்சாவின் முழுமையான விபரங்கள் பற்றி தாவரவியல் ஆய்வாளர் மற்றும் மதுரை தியாகராசர் கல்லூரி உதவி பேராசிரியர், திருமதி அருணா இராமசந்திரன் அவர்களிடம் கேட்டபோது

’20 வருடம் ஆன்பு ஆய்வாளர் புஷ்பாங்கதன் என்பவர் மலை வாழ் மக்களான காணி இன மக்களுடன் காட்டுக்குள் மூலிகைகளைப்பற்றி ஆய்வு செய்ய செய்யும்போது மலை ஏறும்போது மக்கள் மலைவாழ் இன மக்களக்கு எவ்வித சோர்வும் அடையாமல் தொடர்ந்து மலை ஏறிக்கொண்டிருந்தனர். இதை கவனித்த ஆய்வாளர் புஷ்பாங்கதன் மலை வாழ் மக்களின் செய்கைகளை உற்று கவனித்தபோது அவர்கள் அவ்வப்போது ஓரு பச்சிலையை எடுத்து சாப்பிட்டுவருவதை கண்டார். அதை உண்ணும்போதுதான் அவர்கள் சோர்வாகமல் இருப்பதை கண்டறிந்த ஆய்வாளர் அந்த மூலிகையைப்பற்றிய விபரங்களை சேகரித்தார். அந்த மூலிகையின் பெயர் : ஆரோக்கியபச்சா மற்றும் ஜீவானி என்றழைக்கின்றனர்

இந்த மூலிகையை வர்த்தகப்படுத்தும்போது கண்டறிந்தவருக்கும், கண்டறிய காரணமானவர்களுக்கும் பலன் உண்டென்பதால் ஆய்வாளர் புஷ்பாங்கதன் இந்த மூலிகையில் வரும் வருமானத்தைக்கொண்டு காணி இன மக்களின் கல்வி, அடிப்படை வசதிகளை மேம்படுத்தியும் கொடுத்தார்

இத்தகவலை திருமதி அருணா இராமசந்திரன் நம்மிடையே தெரிவித்தார்

ஆரோக்கியபச்சாவின் முழுமையான மூலக்கூறுகள் விபரம்
https://keralauniversity.ac.in/trichopus-zeylanicus
இந்தப்பக்கத்தில் காணலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here