Skip to content

மாதுளை பழத்துளைப்பான் நோய் மேலாண்மை

Pomegranate fruit borer
Conogethes punctiferalis
Lepidoptera

பூச்சி தாக்கிய அறிகுறிகள்:

இளம் பழங்களை புழுக்கள் துளைக்கும். பழங்களின் உள்ளே உள்ளவற்றை உண்ணும். முதிராமலேயே வாடி, உதிர்ந்துவிடும்.

பூச்சியின் விபரம்:

புழு : இளம் பச்சை நிறத்தில், இளஞ்சிவப்பு புள்ளியுடன், நுண்ணிய ரோமங்களுடன், அடர் நிற தலை மற்றும் முன் மார்பு திட்டுடன் காணப்படும்.
பூச்சி : மஞ்சள் நிறத்தில், கருப்பு நிற புள்ளிகள் இறக்கை, மற்றும் உடல் முழுவதும் காணப்படும்.

மேலாண்மை:

சேதமடைந்த பழங்களை சேகரித்து, அழித்தல்.
சாகுபடியை தத்மாக மேற்கொள்ள வேண்டும்.
விளக்குப் பொறி 1/ஹெக்டர் என்ற அளவில் அமைத்தல்.
பூச்சி விரடிகளை பூக்கும் சமயம், பழங்கள் உருவாகும் சமயத்தில் தெளித்தல்.

 

செந்தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

senthamil E

senthamil E

முதுநிலை வேளாண் மாணவர் (உழவியல் துறை), அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் - 608002