கழிவுநீர் நிலைகளை சுத்தம் செய்ய  வெட்டிவேர் படுகை!? -பாஸ்கர், பொள்ளாச்சி

6
1574

மிதக்கும் மூங்கிலால் ஆன வெட்டிவேர் படுகை மூலம் கழிவுநீர் நிலைகளாக மாறிய நீர் நிலைகளில் சுத்தம் செய்ய  வெட்டிவேரின்  உதவும் ஏனெனில் வெட்டிவேரின் பல பயன்களில் ஒன்று அதன் சுத்திகரிப்பு தன்மை

கழிவுநீர், நீர்நிலைகளில் கலந்து மாசுபடுத்துகிறது. அதனால் ஆகாய தாமரை படர்ந்து வளர்கிறது.   இதற்கு நிரந்தர தீர்வு குறைந்த செலவில் உள்ளது. ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் மிதக்கும் மூங்கிலால் ஆன வெட்டிவேர் படுக்கை கழிவுநீர் நிலைகளில் மிதக்க விடவேண்டும். வெட்டிவேர் அந்த நீரில் நன்றாக வளரும். வளரும் பொழுது அந்த நீரை சுத்திகரித்து கொண்டே இருக்கும். நீரில் கலந்து இருக்கும் ஹெவி மெட்டல், சோப்பு   தன்மை, எண்ணை பசை போன்ற தன்மைகளை உறிந்து நன்றாக வளர்கின்றது. பொதுவாக மின்சாதனங்கள் கொண்டு சுத்திகரிப்பு செய்யும் மையங்கள் அருகில் உள்ளவர்கள் எந்நேரமும் மூக்கை பிடித்து கொண்டு இருக்க வேண்டும். மின்சார செலவும் அதிகம். கடைசியாக உருவாகும் கழிவை வெளியேற்ற கஷ்டப்பட வேண்டும். ஆனால் இயற்கை நமக்கு தந்த வரப்பிரசாதம் வெட்டிவேர். எந்த செலவும் வைக்காமல் , தட்பவெப்ப நிலைகளை பொறுத்து கொண்டு சுத்திகரிப்பு செய்து கொண்டே இருக்கும்

திரு.பாஸ்கர் அவர்களின் ஆலோசனைக்கு உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

 

திரு.பாஸ்கர்

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here