இணைந்திருக்க வேண்டாமா பாலாறும் தென்பெண்ணையும்?

0
1207
174 கி.மீ தூரம்  கொண்ட  கோதாவரியும் கிருஷ்ணாவும் வாய்க்கால் மூலம் 2015 ஆம் ஆண்டிலேயே இணைந்து ஆந்திர மக்களுக்குப் பயனளித்துக் கொண்டிருக்கிறது.
அதை விடக் குறைந்த சுமார் 73கி.மீ தூரமே இடைவெளி கொண்டிருந்தும்,கர்நாடக நந்திதுர்கா மலைப்பகுதிகளில் உற்பத்தியாவதும், 3690 ச.கி.மீ. நீர்ப்பிடிப்புப் பகுதிகளைக் கொண்டதுமான தென்பெண்ணையைப் பாலாற்றோடு இணைக்கப் பல ஆண்டுகளுக்கு முன் திட்டமும் அதற்கான நடைமுறை ஒப்புதல்கள்,நில அளவைப் பணிகள் முடிந்தும்,இத்திட்டம் இன்னும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டடிருக்கிறது.
கிருஷ்ணகிரி நெடுங்கல் அணையிலிருந்து சந்தூர் வழியாக நாட்டறம்பள்ளி வரை வெறும் 59.5கி.மீ தூரம் கால்வாய்
அமைத்தாலே போதும்.மீதமுள்ள தூரம் ஏற்கனவே இருக்கும் நாட்டறம்பள்ளி கல்லாறு பாதை காவேரிப்பட்டு வழியாக வாணியம்பாடி ராமய்யன் தோப்பு என்ற இடத்தில் பாலாற்றில் கலக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 இணைந்த கிருஷ்ணா-கோதாவரி ஆறுகளைப் போல் இவ்விரு ஆறுகளையும் இணைந்திருந்தால் 2015 ஆம் ஆண்டு பெய்த வடகிழக்குப் பருவமழையால் பெருநீர் பெற்றிருக்கும் வட தமிழகம்.
இணைக்கப்படாத காரணத்தால் வழக்கமாக வரும் பாலாற்று நீர் 2015இல் தமிழக எல்லையான புல்லூர் கீழ்ப்பெரியபள்ளம்,ஆவாரங்குப்பம் பகுதி வரையே எட்டிப் பார்த்து. வாணியம்பாடியைக் கூடத் தொடவில்லை.
  அது மட்டுமன்றி,இவ்விரு நதிகளையும் இணைக்காத காரணத்தால் மழைக் காலங்களில் கிருஷ்ணகிரி அணையிலிருந்து வெளியேறும் 3 டி.எம்.சி. உபரி நீரை நாம் இழக்கிறோம்.இணைத்தால் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் எப்போதெல்லாம் நீர் உபரியாகிறதோ அப்போதெல்லாம் அந்த உபரிநீரைப் பாலாறு பெறும் அல்லவா…
இவ்விரு நதிகளையும் பாலாறு தமிழகத்தைத் தொடும் பள்ளத்தூர் பெரும்பள்ளம் பகுதியில் இணைப்பதால் அதற்கொரு சிறப்புண்டு
அது என்னவெனில் ஜோலாபேட்டை,நாட்டறம்பள்ளி,வாணியம்பாடி போன்ற நகராட்சிகளுக்கான நீர்த்தேவயைத் தமிழ்நாடு குடிநீர்  வாரியம் இப்படுகையில் தான் நீரேற்று நிலையங்களை அமைத்துப் பூர்த்தி செய்கிறது வாணியம்பாடிக்கு அருகிலும் வாணியம்பாடித் தொடங்கி ஆம்பூர் வரையிலும் தோல் தொழிற்சாலைக் கழிவுகளால் நிலத்தடி நீர் அதிகமாக மாசடைந்திருப்பதால்,
இக்காரணங்களால் வாணியம்பாடிக்கு மேலே பாலாற்றுப் படுக்கைகளில் பல கோடி லிட்டர் நிலத்தடி நீர் நாளும் உறிஞ்சப்படுவதால் பல ஆண்டுகளாக நிலத்தடி நீர்  ஆயிரம் அடிக்கும் கீழே சென்றுவிட்டது இதை நாடறியும் இதனால்  விவசாயிகள் பலர் பட்டுப்போன தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்துள்ளனர்.
தென்பெண்ணை ஆறு பாலாற்றோடு இணைக்கப்பட்டதால் நீர் விநியோகமும் தொடரும்,   நிலத்தடில்   நீரும் படரும் தென்னங்குருத்தும் விரியும்
ஆட்சியாளர்கள் கவனிப்பாளர்களா?
நீர் மேலாண்மை எனும் புத்தகத்தில் இருந்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here