ஈரோடு மாவட்டம், பெருந்துறை வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடந்த கொப்பரை ஏலத்தில் ரூ.1.90 கோடிக்கு விற்பனை ஆனது. வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் பெருந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடக்கிறது. கடந்த புதன்கிழமை நடந்த ஏலத்தை விட நேற்று முன்தினம் ரூ.50 லட்சம் கூடுதல் ஏலம் போனது. இந்த ஏலத்தில் ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த உற்பத்தியாளர்களிடமிருந்து 3 ஆயிரத்து 602 மூட்டைகளில் இருந்து ஒரு லட்சத்து 70ஆயிரம் கிலோ எடையுள்ள கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இது கடந்த வாரத்தை விட 40 ஆயிரம் கிலோ அதிகமாகும். இதில் முதல் தர கொப்பரை குறைந்தபட்சம் கிலோ 115 ரூபாய் முதல் 120.10 வரையும், சராசரியாக 117.40 க்கும், இரண்டாம் தரம் குறைந்தபட்சம் 57.10 ரூபாய் முதல் 110.55 வரையும், சராசரியாக 117.40 வரை ஏலம் போனது. கடந்த வாரத்தை விட கிலோவிற்கு மூன்று ரூபாய் அதிகமாக விற்பனையானது. ஆக மொத்த விற்பனை ரூ.1.90 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. இதனை வாங்க தூத்துக்குடி, விருதுநகர், திருப்பூர், வெள்ளகோயில், உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்
useful news