- சேலம் மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியின் காரணமா, உள்ளூர், வெளியூர் காய்கறிகளின் விளைச்சலில் ஏற்பட்ட பாதிப்பால், விலை உயர்ந்துள்ளது.சேலம் மாநகரில் செயல்படும் உழவர்சந்தைகள், வெளி மார்க்கெட்டுக்கு ஊட்டி, ஒசூர், பெங்களூரு கொடைக்கானல் ஆகிய இடங்களில் இருந்து, கேரட், பீட்ரூட், இஞ்சி, பீன்ஸ், உருளை கிழங்கு ஆகியனவும், பனமரத்துப்பட்டி, வாழப்பாடி, சங்ககிரி, தாரமங்கலம், ஓமலூர் ஆகிய இடங்களில் இருந்து, கீரை, கத்தரிக்காய், தக்காளி பழம், புடலங்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய் ஆகியனவும் விற்பனைக்கு வருகிறது.
- தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியால் குளிர்பிரதேசங்களில் இருந்து வந்து கொண்டு இருந்த காய்கறிகள் மட்டுமின்றி உள்ளூரில் விளையும் காய்கறிகளின் வரத்திலும் கடும் சரிவு ஏற்பட்டது.
- இதனால், உழவர்சந்தைகள், மார்க்கெட்டில் காய்கறிகளுக்கு மவுசு அதிகரித்து, அதன் விலை கிலோவுக்கு, ஐந்து ரூபாய் அதிகபட்சமாக, 50 ரூபாய் வரை உயர்வு ஏற்பட்டுள்ளது.உழவர்சந்தை நிலவரம்: பீன்ஸ், 80 ரூபாய், கேரட், 34 ரூபாய், முட்டை கோஸ், 16 ரூபாய், இஞ்சி, 96 ரூபாய், பெரிய வெங்காயம், 20 ரூபாய், சவ்சவ், 30 ரூபாய், பீட்ரூட், 34 ரூபாய், வெண்டைக்காய், 35 ரூபாய், தக்காளி, 16 ரூபாய், கத்தரிக்காய், 20 ரூபாய், அவரைக்காய், 20 ரூபாய், சுரைக்காய், 14 ரூபாய், புடலங்காய், 18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.வெளி மார்க்கெட் நிலவரம் : பீன்ஸ், 110 ரூபாய், கேரட், 45 ரூபாய், முட்டை கோஸ், 22 ரூபாய், இஞ்சி, 125 ரூபாய், பெரிய வெங்காயம், 24 ரூபாய், சவ்சவ், 35 ரூபாய், பீட்ரூட், 42 ரூபாய், வெண்டைக்காய், 40 ரூபாய், தக்காளி, 22 ரூபாய், கத்தரிக்காய், 25 ரூபாய், அவரைக்காய், 24 ரூபாய், சுரைக்காய், 18 ரூபாய், புடலங்காய், 22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.காய்கறி வியாபாரி தங்கவேல் கூறியதாவது:சேலம் மாவட்டத்தில் மட்டுமின்றி குளிர்பிரதேசங்களிலும் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரும், காய்கறிகளின் வரத்தில் கடும் சரிவு ஏற்பட்டது. இந்த சரிவு காரணமாக கடந்த வாரத்தில் அனைத்து காய்கறிகளின் விலையிலும் கடும் உயர்வு ஏற்பட்டது.இந்நிலையில், நேற்று எதிர்பாராத விதமாக காய்கறிகளின் வரத்தில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டது. இதனால், விலை நிதானத்தை எட்டி உள்ளது. இருந்த போதிலும் கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், தற்போத அனைத்து வகையான காய்கறிகளின் விலையிலும் உயர்வே ஏற்பட்டுள்ளது.தற்போது கிணற்று பாசனத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகளின் வரத்தே காணப்படுகிறது. தொடர்ந்து இதே பருவ நிலை நீட்டித்தாலல் கிணற்று பாசன காய்கறிகளின் விளைச்சலிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புஉள்ளது. மழை பொய்த்து விடும் பட்சத்தில் அனைத்து வகையான காய்கறிகளின் விலையிலும் மேலும் உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.