அரசம்பட்டி:
கடந்த சில மாதங்களாக உச்சத்தைத் தொட்டுவந்த தேங்காயின் விலை சிறிது சிறிதாக குறைந்துவருகிறது. பண்டிகைக்காலம் முடிந்துவருவதோடு வட மாநிலங்களுக்கு ஏற்றுமதி குறைவு, கொப்பரை மற்றும் தேங்காய் எண்ணெயீின் நுகர்வும் குறைந்ததால் தேங்காய் விலை குறைந்துவருவதாக தேங்காய் வியாபாரம் செய்துவரும் திரு.அண்ணாதுரை (ஸ்ரீரங்கா கோக்கனட்ஸ்,அரசம்பட்டி) தெரிவித்தார்
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக எதிர்பார்த்த பருவ மழை பொய்யாததால், கடுமையான வறட்சி ஏற்பட்டது அதனால் கடந்த ஆண்டு, தேங்காய் விளைச்சல் வெகுவாக குறைந்தது. இதனால் தமிழகம் முழுதுமே தேங்காய் விலை கடுமையாக உயர்ந்தது.
தனியாக தேங்காய் சில்லறையில் குறைந்த பட்சம், 20 முதல், அதிகபட்சம், 40 ரூபாய் வரையும் கிலோ 140க்கும் சென்றது. கடந்த ஆறு மாதங்களாக விலை குறையாமல், அதே நிலையில் விலை நீடித்தது. இந்நிலையில் கிலோ 140 ல் இருந்து 110 முதல் 124 ரூபாய் விலை குறைந்து வருவது பொதுமக்களுக்கு ஆறுதலாக இருக்கும் என்றும் திரு.அண்ணாதுரை தெரிவித்தார்