நெற்பயிரை தாக்கும் பூச்சிகளை அழிக்க ‘சோலார்’ மின் விளக்கு அறிமுகம்

0
2094

நெற்பயிரை பயிரை அதிகம் தாக்கும் பூச்சி வகைகளில் அந்திபூச்சியும் ஒன்று,. இந்த அந்திப்பூச்சி நெற்பயிரின் இலைகளை கடித்து சேதப்படுத்துவதால் நெல் விளைச்சல் பாதிக்கப்படுகிறது.

இந்த பூச்சிகளை கட்டுப்படுத்த வேளாண் துறை புதிய கருவி ஒன்று அறிமுகம் செய்துள்ளது. அந்திபூச்சிகளை ஒழிப்பதற்கு, வேளாண் துறையின் மூலம், மானிய விலையில், சூர்ய மின்விளக்கு பொறி ஒன்று விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இந்த விளக்கின் மொத்த விலை, 4,480 ரூபாய். இதில், விவசாயிகளுக்கு அரசு மானியமாக, 2,000 ரூபாய் வழங்குகிறது.

இது குறித்து, வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நெற்பயிரை தாக்கும் அந்திபூச்சிகளை ஒழிப்பதற்கு, சூரிய ஒளி சக்தியால் செயல்படும், மின் விளக்கு பொறி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விளக்கின் அடியில் தட்டு வடிவில் உள்ள பிளாஸ்டிக் தட்டில், ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி, சிறிதளவு மண்ணெய்ணெய் ஊற்றி, விளக்கை எரிய விட்டால் பூச்சிகள் இறந்து விடும். இந்த மின்பொறி விளக்கு தேவைப்படும் விவசாயிகள், 4,480 ரூபாய்க்கு வங்கியில் வரைவு காசோலையாக பெறப்பட்டு, நிலத்தின் சிட்டாவுடன் விண்ணப்பம் எழுதி, அந்தந்த வேளாண் உதவி அலுவலரிடம் கொடுக்க வேண்டும். விவசாயிகளுக்கான மானியம், 2,000 ரூபாய், அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். வரும், மார்ச் இறுதிக்குள், விவசாயிகள் விண்ணப்பித்து மின்பொறி விளக்குளை பெற்றுக் கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில், இருப்பு உள்ள வரை மட்டுயே மின்பொறி விளக்குகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here