விழுப்புரம் மாவட்டத்தில் மஞ்சள் அறுவடை துவக்கம்!

0
2195

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டாக நீர் நிலைகள் நிரம்பி இருப்பதால் விவசாயம் சீரடைந்தது வருகிறது , தற்போது மஞ்சள் செழித்து வளர்ந்து அறுவடைப் பணிகள் துவங்கியதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், கச்சிராயபாளையம், சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டு தோறும் 3,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில், மஞ்சள் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

தற்போதைய மார்க்கெட்டில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.14 ஆயிரம் முதல் 17 ஆயிரம் வரை விற்பனையாகிறது.

குறிப்பாக கள்ளக்குறிச்சி பகுதியில் பருவ மழைக்காலத்தில் பெய்த மழையால் பெரும்பாலான இடங்களில் சாகுபடி செய்த மஞ்சள் பயிர்கள் செழித்து வளர்ந்துள்ளன. இதையடுத்து, மஞ்சள் பயிர் அறுவடைப்பணிகள் தற்போது துவங்கி நடந்து வருகிறது.

ஒரு ஏக்கருக்கு 10 முதல் 15 குவிண்டால்கள் வரை மஞ்சள் மகசூல் கிடைத்துள்ளது. அறுவடை செய்யப்படும் மஞ்சள் கிழங்குகளை, ஈரோடு, சேலம், நாமகிரிப்பேட்டை, ஆத்துார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நிறுவனத்தினர், மொத்தமாக கொள்முதல் செய்து எடுத்து செல்கின்றனர்.

இந்தாண்டு, மஞ்சள் பயிர் விளைச்சல் அதிகரித்து, கூடுதல் லாபம் கிடத்ததால், கள்ளக்குறிச்சி பகுதியில் மஞ்சள் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மஞ்சள் விவசாயத்தினை முடிந்தவரை நஞ்சில்லா விவசாயத்தில் செய்தால் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி இன்னமும் பலம்பெறும், ஏனெனில் மஞ்சளை தினசரி ஒரு துண்டு பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள உள்காயங்கள் ஆறும் , அதோடு இதய நோய்கள் வருவதற்கு 30% முதல் 40% குறைய வாய்ப்பு உண்டு, ஆனால் இவற்றை நஞ்சில்லா விவசாய முறையில் உற்பத்தி செய்வது அவசியம். அப்படி நஞ்சில்லா முறையில் விவசாயி்கள் மஞ்சளை உற்பத்தி செய்தால் அதை சிறிய அளவில் வாங்கிக்கொள்ள அக்ரிசக்தி விரும்புகிறது. நஞ்சில்லா முறையில் மஞ்சை உற்பத்தி செய்திருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here