மா, சீதா, திராட்சை, நார்த்தைக்கு முளை ஒட்டுக்கட்டுதல்

1
2543

முளை ஒட்டு கட்ட ஏற்ற பயிர்கள்: மாசீதாதிராட்சைநார்த்தை

வேர்ச்செடியிலுள்ள மொட்டுப்பகுதியை நீக்கி விட்டு அந்த இடத்தில் தேர்வு செய்த ஒட்டுச் செடியின் மொட்டுப் பகுதியை பொருத்துவதற்கு முளை ஒட்டுக்கட்டுதல் அல்லது மொட்டுக் கட்டுதல் (Budding) என்று பெயர்மொட்டுக்கட்டுதல் ஐந்து வகைகளில் செய்யப்படுகிறதுவேர்ச்செடியின் தண்டுப்பகுதியிலுள்ள வெட்டு வாயும் ஒட்டுச்செடியின் ஒட்டுப்பகுதியும் ஒன்றாக பொருந்துமாறு இருக்க வேண்டும்.

1.கேடய முளை ஒட்டு

2.சதுர வடிவ முளை ஒட்டு

3.நீள் பட்டை வடிவ முளை ஒட்டு

4.குழல் முளை ஒட்டு

5.வளைய முளை ஒட்டு

1.கேடய முளை ஒட்டு(Shield budding): இம்முறையில் மொட்டுப்பகுதி கேடய வடிவில் வெட்டி எடுக்கப்பட்டு வேர்ச்செடியில் பொருத்தப்படுகிறது.

2.சதுர வடிவ முளை ஒட்டு(Patch budding): இம்முறையில் மொட்டுப்பகுதி சதுர வடிவில் வெட்டி எடுக்கப்பட்டு வேர்ச்செடியில் பொருத்தப்படுகிறது.

3.நீள்பட்டை வடிவமுனைஒட்டு(Flap budding): இம்முறையில் நீளமான பட்டை வடிவத்தில் மொட்டானது எடுக்கப்பட்டு வேர்ச்செடியில் பொருத்தப்படுகிறது.

4.குழல் முளை ஒட்டு(Flute budding): இம்முறையில் மொட்டானது குழல் வடிவில் வெட்டி எடுக்கப்பட்டு வேர்ச்செடியில் ஒட்டப்படும்.

5.வளைய முளை ஒட்டு(Ring budding): இம்முறையில் வளையமான பட்டையுடன் மொட்டு எடுக்கப்பட்டு வேர்ச்செடியில் பொருத்தப்படும்.

 

1 COMMENT

  1. ஆந்தரகோனஷ் நோயின் அறிகுறிகள் மற்றறும் தேயிலை கொசு கொசு பயிரின் சேதம் கண்டறிவது பற்றி தகவல் கூறவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here