Skip to content

விவசாயத் தொழில் சிக்கல்களும், வாய்ப்புகளும்!! – ஏஜே பாலசுப்பிரமணியம்,

விவசாயம் செயலியின் சார்பில் விவசாயத்தினை மேம்படுத்திட என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரின் கருத்துக்களையும் வாங்கி பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியை கருத்துக்களம் என்ற பகுதியின் மூலம் விவசாயம் இணையத்தளம் செய்து வருகிறது. தொழில்துறை, விவசாயத்துறை, பல்துறை ஊடகங்களில் பணிபுரிவோர், ஆசிரியர், பேராசிரியர்கள் , மாணவர்கள் என எல்லா தரப்பு மாணவர்களின் கருத்துக்களையும் நாங்கள் பதிப்பிப்பு வருகிறோம். அதனடிப்படையில் இன்று நம்முடைய நேர்காணல் திரு.ஏஜே.பாலசுப்பிரமணியம், மேலாண் இயக்குநர், Aigilx Health அவர்களின் நேர்காணல்

உலக அளவில் இந்தியா ஒரு வேளாண்மை நாடாகவே பார்க்கப்பட்டுவருகிறது. நம் மொத்த பொருளாதாரமும் வேளாண் துறையில் ஏற்படும் மாற்றத்தினை பொறுத்தே ஏனைய துறைகளில் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படுகிறது.

உலக அளவில் இரண்டாவது அதிக மக்கள் தொகையை கொண்டுள்ள ஒரு நாடு, சிறு தானிய உற்பத்தியில் முதலிடமும், அரிசி மற்றும் கோதுமை உற்பத்தியில் இரண்டாமிடமும், தேங்காய் உற்பத்தியில் மூன்றாமிடமும் பெற்றுள்ள போதிலும் இந்தியாவின் வேளாண்மை துறை தற்போது ஒரு பிரிவுப்பாதையில் பயணிக்கிறது,   இந்தியா போன்ற பெரும் மக்கள் தொகையை கொண்ட நாடு வேளாண் துறையை புறக்கணிக்கக்கூடாது. ஏனெனில் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் உணவு பாதுகாப்பு என்பதும் எப்போதும் தேவையான ஒன்று.

இந்தியா பூகோள அடிப்படையில் மிகச்சிறப்பான கால நிலையில் உள்ள நாடு. வருடம் முழுதும் எல்லாக் காலங்களிலும் நம்மால் பல்வேறு பயிர்களை உற்பத்தி செய்திட முடியும் என்பது மிகப்பெரிய வாய்ப்பு, ஆனால் நடைமுறையில் விவசாயத்தில் விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்கவில்லை, விவசாய ஊழியர்களுக்குச் சரியான ஊதியமும் கிடைக்கவில்லை என்பதால் கடந்த தலைமுறை விவசாயிகள் தங்கள் குழந்தைகளை விவசாயத்திற்குக் கொண்டு வராமல் படிக்க வைத்து வேலைக்கு அனுப்பிவிட்டதால் தற்போது விவசாயம் ஒரு விரும்பத்தகாத துறையாகப் போய்விட்டது, இந்த எண்ணத்தினை விட்டு நாம் வெளிவரவேண்டும்.

மற்ற தொழில்களாவது நவீன தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்டவை. ஆனால் சங்ககாலம் தொட்டு இன்றுவரை மாறாமல் இருப்பவற்றில் உழவுத்தொழிலும் ஒன்று. விவசாயிகள் பலரும் பிரச்சினையில் தள்ளாடும் இந்தச் சூழ்நிலையிலும் இளம்தொழில்முனைவோருக்கு பல விதமான வாய்ப்புகள் வருகின்றன, மற்ற துறைளைப்போல் இதிலும் சவால்கள் இருக்குமென்றாலும் முன்கூடிய ஆய்வுகளுடனும், ஏற்பாடுகளுடனும், தயாரிப்புகளுடன் துணிந்து இறங்கினால் வெற்றி நிச்சயம்

தற்போதைய பிரச்சினைகள்

நவீன தொழில்நுட்பங்கள் இன்னமும் பாமர விவசாயிகளுக்குச் சரியான முறையில் சென்று சேரவில்லை. உலகம் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினையில் மிக முக்கியமானது தண்ணீர் பற்றாக்குறை. விவசாயத்திற்கு அதிகப்படியான தண்ணீர் தேவைப்படுகிறது, ஆழ்துளை, கிணறு, ஆறு, மழை நீர் போன்றவை நாம் எதிர்பார்த்த அளவு அளவு நீர் கிடைப்பதில்லை என்பது மிகப்பெரிய பிரச்சினை. இந்தியாவில் நிலை இப்படியிருக்க இஸ்ரேல் போன்ற நாடுகளில் பாலைவனத்தில் கூட விவசாயத்தினை செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது அதிகமான வளங்களைப் பெற்றுள்ள நாமும் இதுபோன்ற இருக்கும் வளங்களை வைத்து விவசாயம் செய்வதில் சில முன்னெடுப்புகளைச் செய்வது மிக அவசியமாகிறது. இப்போதைய சூழ்நிலையில் விவசாயத்திற்குப் பெரிய முதலீடு செய்யவேண்டும் என்பதால் பெரிய நிறுவனங்கள் மட்டுமே செயல்படுகின்றன. இச்சூழ்நிலையைப் போக்கி புதிய தொழில்முனைவோர்கள் புதிய மேலாண்மை உத்தியை விவசாயத்துறையில் அறிமுகப்படுத்திவேண்டிய அவசியம் உள்ளது.

முக்கியப்பிரச்னைகள்

1.உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்வது

செயற்கை உரத்தினை பயன்படுத்தி விவசாயம் செய்யும்போது நமக்கு அதிகப்படியான உற்பத்தி கிடைத்தாலும் நிலம் விரைவில் முடங்கிப்போகும் அபாயம் உள்ளது, உற்பத்தியாகும் நிலம் முதற்கொண்டு, அதை உண்ணும் மனிதர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள் , ஆனால் அதிகப்படியான உற்பத்தி என்பதால்தான் அனைவரும் செயற்கை உரத்தினை நோக்கிப் போகிறார்கள், எனவே செயற்கை உரத்தினை விட நஞ்சில்லா விவசாயம் மூலம் அதிக உற்பத்தித்திறன் பெருக்கும் ஆராய்ச்சிகள் வேகப்படுத்தவேண்டும்.

2.நஞ்சில்லா விவசாயத்தின் பரப்பை அதிகரிப்பது.

நஞ்சில்லா விவசாயம் சார்ந்த புதிய தொழில் முன்னெடுப்புகள் நிறைய தேவை இருக்கின்றன,
நஞ்சில்லா விவசாயம் என்பதை ஒரு தொழில் இயக்கமாகச் செய்தால் அதன் மூலம் விவசாயத்துறையில் பல தொழில் பெருகும், இந்த தொழில் பெருக்கத்தால் விவசாயத்துறை மேலும் விரிவடையும். எனவே இந்தத் தொழில் பெருக்கம்தான் நம்மை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும். நம்முடைய இலக்கு, பெரிய அளவிலான உற்பத்தியை, பெரிய பரப்பில் மேற்கொள்ள முயற்சிப்பதே, இவ்வாறு முயற்சிக்கும்போது நவீன தொழில்துறை கட்டமைப்புகளை( Modern Industrial System அந்தத் துறையில் செயல்படுத்தவேண்டும். ஒரு தொழில்துறையாகவும், தொழில் இயக்கமாகவும் செய்வதே மிகப்பெரிய பலம்,.

விவசாயத்துறையை ஒரு தொழில் இயக்கமாக/தொழில்துறையாக மாற்றிட (அதாவது பெரிய அளவில்) செய்திட என்ன தேவை என்பதை நாம் முயற்சித்து செயல்படுத்த வேண்டும். ஒன்றைச் செய்தால் அதை எப்படி பெரிய அளவில் செய்வது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இதில் உள்ள சிக்கல்களே நமக்கான வாய்ப்புகள்.

புதிய தொழில்முனைவோர், புதிய ஆராய்ச்சிகள், பாரம்பரிய உத்திகள், நவீன தொழில்நுட்பங்கள் விவசாயிகள் ஆகியோர் ஒன்றிணையும்போது அதன் பலன் அதிகமாகிறது, எனவே நஞ்சில்லா விவசாயத்தினை எப்படி அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுத்தி பன்மடங்கு ஆக்குவது என்பதை நாம் முன்னெடுக்கவேண்டும். நவீன தொழில்துறை கட்டமைப்புகளைப் பயன்படுத்தி நாம் நிறைய துறைகளை பெருக்கியிருக்கிறோம், அதனாலே பெரும் பொருளாதாரத்தினை உருவாக்கமுடிகிறது, அதன் வளர்ச்சியை நாம் கண்டிருக்கிறோம்.. உலகில் உள்ள அனைவரும் வாழ்க்கை தரத்தினை அதிகம் பெற்றிருக்கிறார்கள், . நவீன தொழில்துறையின் குறைகளை பெரிதாக்காமல் , அக்குறைகளை நீக்கி நவீன தொழில்துறை கட்டமைப்புகளை நாம் விவசாயத்தில் கொண்டு செல்வதும் மிகவும் அவசியம்

வெளிநாடுகளில் என்னமாதிரியான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன, அவற்றினை எப்படி இந்தியாவிற்குக் கொண்டுவருவது? இந்தியாவிற்குக் கொண்டுவந்தாலும் கடைக்கோடியில் உள்ள விவசாயிகளிடையே எப்படி கொண்டு போய் சேர்ப்பது, அதற்கு தேவையான நிதி ஆதாரங்களை எப்படி பெறுவது போன்ற சவால்களை கடக்க வேண்டும்

சந்தைமயமாக்கல்

நமது பொருட்களை, நமது தொழில்நுட்பத்தினை விற்பனை செய்ய நமக்கு சந்தை மயமாக்கல் அவசியமாகிறது,
விவசாயப்பொருட்களை உண்மையாகவே சந்தைப்படுத்ததில் பல விதமான சிரமங்கள் இருக்கின்றன.
இப்போதைய சூழ்நிலையில் நமக்கு விவசாயப்பொருட்கள் கிடைத்தாலும் அது சந்தையை அடைவதற்குள் பல்வேறு மாற்றங்களை சந்தித்க்கிறது, அது சரியான முறையில் பதப்படுத்தாமல் கொண்டு செல்வது, விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்காமல் இருப்பது, கொண்டு செல்வதில் ஏற்படும் சேதாரம் என பலதரப்பட்ட காரணங்கள், எனவே இந்த சிக்கல்களை களைய சந்தை மயமாக்கல் மிக அவசியம்.

தகவல் பரிமாற்றம்

சாதாரண தகவல்கள் கூட இன்றைய சூழ்நிலையில் பெரும் மாற்றத்தினை சந்திக்கிறது, பெரும் நிறுவனங்கள் விலை கூட சிறிய தகவல்களால் வீழ்ச்சியடைகிறன்றன, இப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட விவசாயத்தில் தகவல் பரிமாற்றம் மிக குறைவு என்பது கவனத்திற்குரியது. சந்தை என்று சொல்லக்கூடிய சூழ்நிலையில் தகவல் என்பது மிகப்பெரிய பலம், எங்கே பொருளுக்கு விலை அதிகம் கிடைக்கும், எப்படி கொண்டு செல்வது, எந்த பயிரை உற்பத்தி செய்வது, யாருக்கு எதை விற்பது, சந்தைக்கு என்ன தேவை போன்ற தகவல்களை நாம் விவசாயிகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கூட்டுறவு சங்கங்கள்

விவசாயத்தில் கூட்டு முயற்சிகள் என்பது மிக அவசியம், விவசாயிகளை ஒரு கட்டமைப்பில் கொண்டுவந்து, அந்த கட்டமைப்புகளை விவசாயப்பண்ணைகளை உருவாக்கி, ஒரு பெரிய சந்தையை உருவாக்கி அனைவரையும் பயனடைய செய்வது, அதோடு சிறிய அளவிலான கடன் தொகைகளை கொடுப்பது, பயிர் பாதுகாப்பு காப்பீடு, விவசாயிகளுக்கான காப்பீிடு என எல்லாமே இந்த கூட்டுறவு சங்கங்களின் வழியாக நிர்ணயிக்கலாம்.

சவால்கள் மற்றும் தீர்வுகள்

ஒரு தொழில்முனைவோர் வெற்றியடைகிறார் என்பது அவர் ஒரு அறிவாளி என்பதாலோ அல்லது அவரிடம் நிறைய பணம் இருக்கிறது என்பதாலோ அல்ல, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் பணியாற்றிவரும் பேராசிரியர் சரஸ் சரஸ்வதி என்ற பேராசிரியர் செயல் விளைவு – (Effectuation) என்ற மாதிரி திட்டத்தினை முன் வைக்கிறார்.

ஒரு தொழிலை துவங்குவதற்கு முன்பு துவங்கும் இடம், துவங்குபவர், தன்னால் என்ன முடியும், தனக்கு என்ன சக்தி இருக்கிறது, யாருடன் அவரால் சேர்ந்து உற்பத்தி செய்ய முடிகிறது, அவர் யாருடன் சென்று சேர்ந்தால் அவருடன் பெரிய அளவில் வெற்றி பெற முடியும் போன்ற தகவல்களை சேகரித்தபின்னர் களமிறங்கவேண்டும். இருக்கிற வாய்ப்புகளை, கட்டமைப்புகளை, தொடர்புகளை, எதிர்கொள்ளும் வாய்ப்புகளை எப்படிச் செயல்படுத்தி அதன் பலனை பெற்று வெற்றிகொள்கிறார்களோ அவர்கள் வெற்றியாளர்கள். இதைத்தான் செயல் விளைவு – (Effectuation) – செயலால் விளைந்த பலன்.

விவசாய தொழில் நிகழ்வுகள்

சென்னை போன்ற பெரு நகரங்களில் ஸ்டார்ப் அப் இவன்ட்ஸ் போன்ற நிகழ்வுகள் தொழில் முனைவோர்களுக்காக வார இறுதியிலும், சில கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் நடத்தப்பட்டுவருகின்றன.
அதே போன்று விவசாயத்திற்கு என்றும் என்று தனிப்பட்ட விவசாய தொழில் முனைவோர்கள் நிகழ்வுகளை நாம் அவ்வப்போது நிகழ்த்தி, அனைவரும் கருத்து பரிமாற்றம் செய்து ஒரு வளமான விவசாய தொழில் முனைவுகளுக்கு வழிகாட்டலாம்.
எனவே புதிய தொழில் முனைவோர்களுக்கு நான் சொல்லவிருப்பது நிறைய வாய்ப்புகள் நம்மிடையே இருக்கிறது, ஆனால் அனைவரும் அதை சரியாக பயன்படுத்தி செயல்படுத்திட வேண்டும், முயற்சி செய்யவேண்டும், ஒரு குறுகிய ஒரு சிறிய சந்தையை எடுத்துக்கொண்டு அதை தாம் செய்ய விரும்பு திட்டத்தின் முன்மாதிரியை செயல்படுத்தி எவர் வெற்றியடைகிறார்களே அவர்களே வெற்றியடைகிறார்கள்

ஏஜே பாலசுப்பிரமணியம்

2 thoughts on “விவசாயத் தொழில் சிக்கல்களும், வாய்ப்புகளும்!! – ஏஜே பாலசுப்பிரமணியம்,”

 1. Prabakaran subramaniyan

  தண்ணீர் வரைச்சி காலத்தில் குடி தண்ணீரும் பற்ரா குறை அந்த நேரத்தில் வசிக்கும் நகர் புர வீட்டில் இருந்து ஆழ் குழாய் அமைத்து அங்கிருந்து விவசாய செய்யும் (வயல்) நிலத்திற்கு ஆயில் என்ஜின் மூலம் தண்ணீர் கொண்டு செல்வது சரியா தாவர

  1. துரைசாமி பழனிசாமி

   அரசின் மின் பயன்பாட்டு சட்டப்படி குற்றம்.
   ஒரு கிணற்றுக்கு அல்லது ஆழ்துளை கிணற்றுக்கென வாங்கப்பட்ட சர்வீசில் இருந்து அந்த நீரை இந்த இந்த சர்வே நிலத்திற்கு மட்டும்தான் பாய்ச்ச வேண்டும் என்ற விதி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj