Skip to content

விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச லாப விலை- திரு.செல்வராஜ்,

நம்முடைய இன்றைய கருத்துக்களத்தில் தனது கருத்தை அளித்திருப்பவர் அத்திக்கடவு கௌசிகா நதி மேம்பாட்டு சங்க செயலாளர், திரு.செல்வராஜ்,அவர்கள்

விவசாயம் உயர ….?

உண்மையான விவசாய விளைநிலங்களை அடையாளம் காணுதல் .மண்ணின் தன்மைக்கேற்ப விவசாயம் செய்ய வழிகாட்ட வேண்டும் …விளை பொருளை லாபமாக விற்க ஏற்பாடு செய்யவேண்டும் .

விவசாயிகள் என்ன செய்ய வேண்டும் ….?

தெளிவான நீர் மேலாண்மை செய்ய பழகவேண்டும் .மதிப்புக்கூட்டும் வகையில் விவசாய விளை பொருட்களை மாற்ற கற்றுக்கொள்ள வேண்டும் .விஷ ரசாயன கலப்பு மருந்துகள் கையாள்வதை நிறுத்தவேண்டும்.விளை நிலங்களில் மரங்களும் பயிர்களும் வளர்த்தவேண்டும் .இனிவரும் காலங்கள் சிறந்த விற்பனை நபர்களாக மாற வேண்டும் .முடிந்த வரை விளை நிலங்கள் விற்பதை குறைக்க வேண்டும் .

அரசு என்ன செய்ய வேண்டும் …?

விவசாயத்துக்கு அடிப்படை நீர் ஆதாரம் .சொட்டு நீர் பாசனத்துக்கு உண்மையான மானியம் தரப்பட வேண்டும் .பழைய முறையான விவசாய விளைநிலங்களில் இலவச ஏரிகள் போடும் திட்டம் தீவிர நடைமுறை படுத்தப்படவேண்டும் .விஷ ரசாயனமருந்துகள் மனிதனும் ,மண்ணும் மலடாக்கும் .முற்றிலும் இதை தடுக்க வேண்டும் .விளை பொருள்களை ஓரளவு லாப விலையில் அரசே விவசாயிகளிடம் வாங்கி பொதுமக்களுக்கு விற்கலாம் .விவசாய விளைபொருட்கள் விலை கட்டுப்பாட்டை தகர்ப்பது மிக முக்கியம். பெட்ரோல் விலை மற்றும் எந்த தொழில் சார்ந்த பொருள்களின் விலை உயரும்போது அதன் விலைகுறைப்புக்கு இறக்குமதி செய்வதில்லை .விவசாய பொருளுக்கு மட்டும் விலை உயரும்போது இறக்குமதி செய்யப்படுகிறது .இயந்திர மானியங்கள் அதிகப்படுத்தப்படவேண்டும் .10 ஏக்கர் வரை உள்ள விவசாயிகளை சிறு விவசாயிகளாக அறிவிக்க வேண்டும் .நீர் ஆதார திட்டங்கள் லாப நோக்கில் இல்லாமல்(Cost benifit ratio ) மக்கள் பயன் நோக்கில் செயல்படுத்தப்பட வேண்டும் .

விவசாயம் உயர பொதுமக்கள் என்ன செய்யவேண்டும் …?

சினிமா டிக்கெட் எவ்வளவு உயர்ந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மக்கள் விவசாய விளை பொருட்களுக்கான குறைந்த பட்ச லாபத்துடன் கூடிய விலைக்கு வாங்க வேண்டும் .நீர் ஆதாரங்களை ஆக்கிரமிக்காமல் இருந்தால் இரு தரப்பினருக்கும் நல்லது .விவசாய பொருட்களை சிரமம் பார்க்காமல் நேரடியாக விவசாயி இடம் வாங்கலாம் .

தொழில் முனைவோர் விவசாயம் சார்ந்து என்ன தொழில் செய்யலாம் …?

விவசாய உபகரணங்கள் ,உழவு இயந்திரங்கள் ,மின்சாதனங்கள் ,மோட்டார்கள் ,விவசாய விளை பொருட்களை மதிப்பு கூட்டும் உபகரணங்கள் ,அறுவடை இயந்திரங்கள் ,சொட்டு நீர் பாசன உபகாரணங்கள் ,பால் கறக்கும் இயந்திரங்கள் , நடவு இயந்திரங்கள் .தென்னை ,பனை மரங்களில் காய்கள் பறிக்கும் இயந்திரங்கள் .தீவனம் நறுக்கும் இயந்திரங்களை  குறைந்த செலவில் உருவாக்கலாம்

நன்றி
செல்வராஜ் பா.க
செயலாளர் ,அத்திக்கடவு கௌசிகா நதி மேம்பாட்டு சங்கம் .
www.kousikanathi.com

 

திருசெல்வராஜ் அவர்களின் கருத்துக்களுக்கு உங்கள் மறு மொழியையும் கீழே கொடுத்துள்ள மறுமொழி பொத்தான் மூலம் வழங்கலாம்.
நீங்களும் இந்த கருத்துக்களத்தில் பங்கேற்கவேண்டுமா? உடனே எங்களுக்கு மின்னஞ்சல் (editor.vivasayam@gmail.com அனுப்புங்க)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj