விவசாய நூல் – எட்டாம் அதிகாரம்.

0
4170

உழவு (தொடர்ச்சி).

உழஅற உழுதால் விளைவற விளையும்.”

ஆழ உழுதாலும் அடுக்க உழு.”

நிலத்தைச் சீராய் உழுவதற்கு மண்ணைக் கிளறி இளக்கப்படுத்த வேண்டுவதுமல்லாமல் தோட்டத்தைக் கொத்துகிறவிதம் ஏறக்குறைய அவ்வளவு சீராய் அதைப் புரட்டவேண்டுவதும் அவசியமென்று முன்னமே விவரித்துச் சொல்லியிருக்கிறது. இவ்வண்ணம் நாட்டுக்கலப்பையால் செய்ய முடியாது. அது செய்வதெல்லாங்கூடி மண்ணைக் கிளறிக் கொஞ்சம் இளக்கப்படுத்துகிறது. மேல்மண்ணை முழுவதும் இளக்கப்படுத்த அதிக சரீரப்பிரயாசை யெடுத்துக் கொண்டாலொழிய முடியாது. ஐரோப்பிய நாடுகளில் தற்காலத்தில் உபயோகப்பட்டுவரும் கலப்பையோ , நாட்டுக் கலப்பைபோ இல்லாமல் வடிவத்தில் வித்தியாசப்படுகிறது. அதைப் பூமியில் செலுத்தும்போது படைச்சால் மண் என்று கூறப்பட்டுள்ள சம கோணமான மண் பகுதியை வெட்டிக் கிளப்பி புரட்டும்படியாய் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் அக்கலப்பையால் செய்யப்படும் வேலை, கையால் கொத்துவதை வெகுவாய் ஒத்திருக்கிறது. உழவுத் தொழிலைத் துரிதமாயும் சீராயும் நடத்துவதற்கு மேற்குறித்த கலப்பை நாட்டுக்கலப்பையை விட எப்போதும் வெகு சிலாக்கியமா யிருக்கிறதென்று அனுபவத்தால் தெரியவருகிறது.

இந்தியாவில் உபயோகப்படுத்துவதற்கு மிகத் தகுதியான அநேகம் கலப்பைகள் வடிவத்தில் ஏறக்குறைய சீமைக்கலப்பையை ஒத்திருக்கும்படி அமைக்கப்பட்டிருக்கின்றன. அக்கலப்பைகளும் மூன்று விதங்களை அடுத்தபக்கத்துப் படங்களில் காணலாம். 1,2 படங்களில் காட்டியவை சாதாரண வேலைக்குத் தகுதியானவைகள். அவைகளை நாட்டுக்கலப்பையைப் போலவே உபயோகப்படுத்தலாம். 3-ம் படத்தில் காட்டப்பட்ட கலப்பையின் வடிவமோ தரிசு நிலத்தைப் பெயர்ப்பதற்கும், சில இடங்களில் வெகு ஆழம் வேரூன்றிக்கிடக்கும் கோரை. அருகு இவைகளைக் களைவதற்கும், இப்போது உபயோகப்பட்டு வரும் நாட்டுக்கலப்பைகளுக்குப் பதிலாக உபயோகப்படுத்துவதற்கும் அனுகூலமானவை. மேற்குறித்த பெருங்கலப்பைகள் அநேகம் எருதுகள் பூட்டி இழுக்கப்படுகின்றன. 3 .1 .2 படங்களில் குறிக்கப்பட்ட கலப்பைகளுள் பருமனில் நடுத்தரமான அநேகம் கலப்பைகள் இந்நாட்டில் பல இடங்களில் அனுகூலமாக உபயோகப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here