Skip to content

பேரிச்சை

    இது ஒரு பனை வகையைச் சார்ந்த மரம். இம்மரம் இதன் இனிப்பான பழங்களுக்காக வளர்க்கப்படுகிறது. இது ஒரு நடுத்தர அளவுள்ள தாவரம். 15 முதல் 25 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் ஓலைகள் 4 முதல் 6 மீட்டர் நீளம் வரை இருக்கும். ஒவ்வொரு பழமும் அதன் வகையையும் அளவையும் பொறுத்து 20-70 கலோரி சக்தியினைக் கொண்டிருக்கும்.

     உலகில் மொத்தம் 2,500 வகை பேரிச்ச மரங்கள் உள்ளன. இதில், 120 வகை பேரிச்ச மரங்கள், ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் உள்ளன. பேரிச்சம் பழம் வளைகுடா நாடுகளில் தான் அதிகளவு விளைகிறது. அங்கு உயர் தரமான பேரிச்சம்பழங்களையே மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். தரம் குறைந்த பேரிரிச்சம் பழங்கள், விலங்குகளின் உணவாக பயன்படுகின்றன. பேரிச்ச மரத்தின், அடிப்பகுதி, தண்டு, இலைகள், நார்கள் போன்றவை கைவினைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

சத்துகள்

   பேரிச்சம் பழத்தின் சதைப்பகுதியில் 648 மி.கி.பொட்டாசியம்,59 மி.கி.கால்சியம்,1.3 மி.கி.இரும்புச்சத்து, 0.2%-0.5% கொழுப்புச்சத்து, பெக்டின் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளன.

பேரிச்சை சாகுபடி செய்வது எப்படி என விவசாயி நிஜாமுதீனிடம் கேட்டபோது…

நடவு முறைகள்:

    ஒரு ஏக்கரில் 24-24 அடிக்கு ஒரு செடி வீதம் 76 செடிகள் நட வேண்டும். ஒவ்வொரு குழியின் அளவும் 3-3-3 அடியாக இருக்க வேண்டும். குழியின் அடிப்பாகத்தில் 1.5 அடி வரை மணல் கலந்த மண்ணும் மேல் பாகம் 1.5 அடியில் இயற்கை உரங்களும் கலந்து நடவு செய்யலாம். நடவு செய்து சுமார் ஒரு மாதம் காலம் வரை இரண்டு முறை ஒரு செடிக்கு 50 லிட்டர் தண்ணீர் வரை பாய்ச்ச வேண்டும். பிறகு வாரம் ஒருமுறை தண்ணீரும் மரங்களான பிறகு 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீரும் போதுமானது. இது தென்னைமரத்தை போல் இருப்பதால் இது வறட்சியான காலகட்டத்திலும் வளரக்கூடியது.தென்னை மரத்தை பராமரிப்பது போலவே இதையும் பராமரிக்க வேண்டும். இதில் ஊடுபயிரும் நடலாம். இதன் ஆயுள் காலம் 150 வருடங்கள்.

திசு வளர்ப்பு பேரிச்சைச்செடி:

    பேரிச்சை செடிகளை ஆய்வகங்களில் நன்கு வளர்க்கப்பட்ட நான்கு வருட செடிகளை அபுதாபி, இஸ்ரேல் போன்ற நாடுகளில் இயற்கை தகவமைப்பிற்கு மாற்றி விவசாயிகளுக்கு இறக்குமதி செய்து தருகிறோம். நல்ல விளைச்சலையும், சுவையையும் தரக்கூடிய பர்ரி,கனிதி, அலுவி, கலாஸ், கதரவி, மிதினாஸ், சாயர், அஜ்வா, மத்தும்,சுக்ரி போன்ற பேரிச்சை வகைகளை இறக்குமதி செய்கிறோம்.பேரிச்சை விவசாயம் செய்ய ஆலோசனை கொடுத்து வருகிறேன். நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஊடுபயிராக எதனைப் பயிரிடுவது?

     பேரிச்சை தோட்டத்தில் கேழ்வரகு, எலுமிச்சை, மாதுளை போன்ற பயிர்களை கூடுதல் வருவாய் ஈட்ட பயிரிடலாம். நெல் , கரும்பு பயிரிடக்கூடாது.

விற்பனை நிலவரம்

பேரிச்சை மருத்துவ குணம் நிறைந்து காணப்படுவதால் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஆர்டர் வருகிறது. தமிழ்நாட்டில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலே பேரிச்சை விவசாயிகள் உள்ளனர்.

நன்றி: நிஜாமுதீன் , பசுமை விகடன்

பேரிச்சை மருத்துவ குணம்:

 1. ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம் சத்து, வைட்டமின் ஏ, பி, பி–2, பி–5 மற்றும் வைட்டமின்–இ சத்துக்கள் நிறைந்துள்ளன.

 2. பொதுவாக உலகிலுள்ள குழந்தைகளில் 42 சதவீதம் பேர் கண் பார்வை கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊற வைத்து சாப்பிட்டு வந்தால், உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

 3. குழந்தைகளுக்கு பேரீச்சம் பழத்தை தேனுடன் ஊறவைத்து காலை மாலை என இருவேளையும் கொடுத்து வந்தால் குழந்தையின் உடல் தேறி, வலுவுடனும், புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாகவும் காணப்படுவார்கள்.

 4. பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

 5. சளி இருமலுக்கு பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி, ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

 6. பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும். பேரீச்சம் பழத்துடன், சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால், உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

 7. இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும் தன்மையும், எலும்புகளை பலப்படுத்தும் தன்மையும், பேரீச்சம் பழத்துக்கு உண்டு. இந்த பழம், இளைப்பு நோயைக் குணப்படுத்தும். முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும். புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.

 8. பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் வரவே வராது. இவ்வாறு சத்துக்கள் நிறைந்த பேரீச்சம் பழத்தை தினமும் உண்டு வந்தால், தீராத நோய்களும் நம்மை விட்டு நீங்கிச் சென்று விடும்.

 9. டேனின்ஸ் எனும் ஆன்டி ஆக்ஸிடென்ட் பே‌ரிச்சையில் உள்ளது. இது நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியது.

 10. சிறந்த நோய் எதிர்ப் பொருள்களான லுடின், ஸிசாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரைப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது.

தொகுப்பு: பிரியங்கா

9 thoughts on “பேரிச்சை”

 1. very nice messege for me.
  இந்த பேரிச்சை எல்லா சீதோஷ்ண நிலையிலும், அனைத்து வகை மண்ணிலும் வளருமா? எனக்கு சொல்லுங்க.plz.

 2. நாற்றுகள் கிடைக்கும் இடம் முகவரி கூறமுடியுமா

 3. விவசாயி

  பேரிசசை தருமபுரி, கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி தவிர மற்ற தமிழக மாவட்டத்தில் வளர்ந்தாலும் சரியான மகசூல் தராது. தட்ப வெப்பநிலையே காரனம். இயற்கையை எதிர்து போட்டி போட வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news