Skip to content

முல்லை

     முல்லை என்ற சொல்லானது முல்லை பூ, முல்லை திணை. முல்லைத்துறை முதலானவற்றைக் குறிக்கிறது.முல்லை காடுகளில் பூக்கும். இந்நிலத்தை முல்லை நிலம் என சங்க காலத்தில் கூறப்பட்டது.

     சங்க கால பாடல்களில் அகத்திணையில் முல்லைத்திணையும் புறத்திணையில் முல்லைத்துறையும் கூறப்பட்டது.

தாவரவியல் பெயர்: ஜாஸ்மினம் ஆரியகுலேட்டம்

குடும்பம்:ஓலியேசியே

தாயகம்:இந்தியா

       கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரி மன்னன், தான் நகர்வலம் சென்றும் கொண்டிருக்கும்போது ஒரு முல்லைக்கொடி வாடியிருப்பதைப் கண்டான். அதற்கு துணையாக இருக்க ஏதேனும் கிடைக்குமா என்று பார்த்தான். அக்கொடிக்கு தன் தேரையே வழங்கிவிட்டு வந்தான். இதற்கு சான்றாக

முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

என்று அனைவராலும் போற்றப்படுகிறான்.

      அள்ளூர் நன்முல்லையார் எழுதிய சங்க காலப்பாடல்களில் 11பாடல்களில் இம்மலர் இடம்பெற்றுள்ளன

பூவின் வகைகள்:

       முல்லை, கல் இவர் முல்லை, குல்லை, தளவம், நந்தி, பிடவம், மௌவல்

நாள்முல்லை என்னும் நித்தியமுல்லை

இதற்குப் பருவகாலம் இல்லை. நாள்தோறும் பூக்கும்.

முல்லை தளவம் என்னும் செம்முல்லை சாதிமல்லி

இதன் புறவிதழின் வெளிப்பக்கம் சிவப்பாக இருக்கும்.

முல்லை அடுக்குமல்லி

இந்த மல்லிகையில் ஒரே பூவில் (தாமரை போல்) பல அடுக்குகள் இருக்கும்.

குல்லை என்னும் குட்டிப்பிலாத்தி

கார் காலத்தில் முதல் மழை பெய்த நாளில் அரும்பு விட்டு புதர் புதராகப் பூத்துக் குலுங்கும்.

பிடவம்

பிடவம் பூத்துக் குலுங்கும் ஊர் பிடவூர். பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன் மாண்டபோது அவ்வூரில் பூத்திருந்த பூக்களை யாரும் சூடிக்கொள்ளவில்லை. துக்கம் கொண்டு ஆடும் நாளில் முல்லையே! ஏன் பூக்கிறாய் எனப் புலவர் பாடுகிறார்.

மௌவல்

மரமல்லி நள்ளிருளில் பூத்து நாறும்(மணக்கும்). இதனை மௌவல் என்பர்.

நள்ளிருள்நாறி
நந்தி

நந்தியாவிட்டை என இக்காலத்தில் வழங்கப்படும் நந்திப் பூவில் இரண்டு வகை உண்டு. இதில் ஒரே ஒரு அடுக்கு கொண்டது ஒருவகை. ஒன்றுக்குள் ஒன்றாகப் பல அடுக்குகள் கொண்டது அடுக்கு நந்தியாவிட்டை.

தட்பவெப்பநிலை(Climate): அதிக மழை தாங்கி வளர்க்ககூடிய வெப்ப மண்டலப்பயிராகும்.

மண் வளம் (Soil)

நல்ல வடிகால் வசதி கொண்ட வளமான இருமண்பாடு கொண்ட செம்மண் நிலங்கள் சாகுப்படிக்கு ஏற்றது.

பட்டம் மற்றும் இரகம்(Season and variety):ஜின் –நவம்பர் மாதங்களில் பாரி முல்லை, CO 1, CO2 இரகங்களைப் பயிரிடலாம்.

நிலம் தயாரித்தல்(Land preparation):

1.5*1.5 மீ இடைவெளியில் 30*30*30செ.மீ குழிக்கள் தோண்டி நடவு செய்ய வேண்டும்.

நடவு (planting):-

வேர்விட்ட குச்சிகள் மற்றும் பதியன்களை எக்டருக்கு 4400 என்ற அளவில் நடவு செய்ய வேண்டும்.

உரநிர்வாகம் (Fertilizer management):

தாழை, மணி, சாம்பல் சத்துகளை, நடவு செய்த இரண்டு மாதகங்களுக்கு ஒரு முறை இடவேண்டும். கவாத்து செய்த உடன் முதல் உரம் இடவேண்டும். நீர்நிர்வாகம்(Water management):

நட்டவுடன் முதல் பாசனமும் தட்பவெப்பநிலையைப் பொறுத்து வாரம் ஒரு முறையும் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.

காவத்து செய்தல்(Pruning):-

செடிகளை தரைமட்டத்திலிருந்து 45 செ,மீ உயரத்திற்கு ஜனவரி கடைசியில் காவத்து செய்தல் வேண்டும்.

அறுவடை(Harvest):-

மேநவம்பர் காலங்களில் பூக்கும். மொட்டுகளை காலை நேரங்களில் அறுவடை செய்ய வேண்டும்.

மகசூல்(Yield):-

எக்டருக்கு 10,000 கிலோ மொட்டுகள் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news