காய்கறிகளை குளிர்பதன பெட்டியில் வைத்தாலும், சிலநாட்களுக்கு பின் வாடிவிடுகின்றன. காய்கறிகளின் ஆயுளை,கூடுதலான நாட்களுக்கு வாடாமல் வைத்திருக்க முடியாதா?துருக்கியில் உள்ள, சபன்சி பல் கலைக் கழக விஞ்ஞானிகள், அதற்கு ஒரு வழியை உருவாக்கி இருக்கின்றனர். களிமண்ணில் செய்த ஒரு மெல்லிய படலம். அதில், ’ஹலோய்சைட் நேனோ’ குழாய்களும், கிருமி தொற்றுகளை தடுக்கும் இயற்கை எண்ணெய்களும் கலந்திருக்கின்றன. இந்த படலத்தை, தக்காளி, வாழைப்பழம், கோழி இறைச்சி ஆகியவற்றின் மீது சுற்றி, குளிர்பதன பெட்டியில் வைத்து சோதித்து பார்த்தனர், துருக்கி விஞ்ஞானிகள். பத்து நாட்களுக்கு பின்னும், தக்காளி புத்தம் புதிதாக இருந்தது. வாழைப்பழம், ஆறு நாட்களுக்கு பின்னும், அதன் மஞ்சள் நிறம் மாறாமலும், மிகையாகக் கனிந்து போய்விடாலும் இருந்தது. கோழி கறியில், மிகக் குறைவான பாக்டீரியாக்களே தொற்றியிருந்தன. ‘நேனோ’ குழாய்கள் நிறைந்த, இயற்கை எண்ணெய் கலந்த களிமண் காகிதம் என்ற புதுமையால். இது சாத்தியமாகி உள்ளது.
காய்கறிகளை காக்கும் களிமண்!
- by editor news
- தொழில்நுட்பம்
- 1 min read

Related Posts

தொழில்நுட்பம் – பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பத்தின் (ITK) மூலம் தக்காளி மற்றும் கத்தரியில் விளைச்சலை அதிகரிக்க வழிமுறைகள்
காய்கறிகளை குளிர்பதன பெட்டியில் வைத்தாலும், சிலநாட்களுக்கு பின் வாடிவிடுகின்றன. காய்கறிகளின் ஆயுளை,கூடுதலான நாட்களுக்கு வாடாமல் வைத்திருக்க முடியாதா?துருக்கியில் உள்ள, சபன்சி பல் கலைக் கழக விஞ்ஞானிகள்,… Read More »காய்கறிகளை காக்கும் களிமண்!

விவசாயத்தில் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் (ஐ.சி.டி) பங்கு
காய்கறிகளை குளிர்பதன பெட்டியில் வைத்தாலும், சிலநாட்களுக்கு பின் வாடிவிடுகின்றன. காய்கறிகளின் ஆயுளை,கூடுதலான நாட்களுக்கு வாடாமல் வைத்திருக்க முடியாதா?துருக்கியில் உள்ள, சபன்சி பல் கலைக் கழக விஞ்ஞானிகள்,… Read More »காய்கறிகளை காக்கும் களிமண்!

கழிவு சிதைப்பான் (வேஸ்ட் டீகம்போசர்) பயன்பாடு