Skip to content

கடக்நாத் அல்லது கருங்கால கோழி

கருங்கோழி அல்லது நாட்டுக்கருப்புக் கோழி,கடக்நாத் கோழி ( Kadaknath ) போன்ற பெயர்களால் அழைக்கப்படுவது இந்தியாவில் காணப்படும் கோழியாகும். இது இந்தியாவின் மத்தியபிரதேசத்தைச் சேர்ந்தது. இது காளி மாசி“‘ எனவும் அழைக்கப்படுகிறது.

அதிக வெப்பத்தையும் குளிரையும் தாங்கி வளரும் தன்மை கொண்டது. கோழிக் குஞ்சுகள் நீலம் மற்றும் கருப்பு நிறத்துடன் பின்பகுதியில் கருப்புக் கோடுகளுடன் காணப்படும். பருவம் அடைந்த கோழிகளின் இறகுகள் கருநீல நிறத்தில் காணப்படும். தோல், கால்கள், நகங்கள் கருப்பாக இருக்கும்

இக்கோழி இறைச்சி, 25 சதவிதம் அளவுக்கு புரதச்சத்து கொண்டுள்ளதுகொலஸ்ட்ரால், 0.73 -1.05 சதவீதம்

. தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் ஓமலூரிலும், வேலூரிலும் பண்ணை உள்ளது.

குட்டம், காணாக்கடி, சிரங்கு, விரணங்கள், வாதம் போன்ற நோய்கள் கருங்கோழிக் கறியால் குணமாகும் என்கிறது சித்த மருத்துவம். முற்காலத்தில் ஆண்களுக்கு வீரியத்தை அதிகரிக்க, சில மூலிகைகளுடன் சேர்த்துச் சமைத்த கருங்கோழிக் குழம்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பெருங்காயம், மிளகு, பிரப்பங் கிழங்கு எனப் பல மருத்துவ மூலிகைகளைச் சேர்த்துச் செய்யப்படும் கருங்கோழி சூரணத்தால் விக்கல், குட்ட நோய்கள், மூலம், வாயு நீங்கும் என்பதற்கான பாடல் குறிப்பு உண்டு.

ஓமியோபதி மருத்துவத்தில், நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களுக்கு, கருங்கோழி இறைச்சியை சாப்பிட பரிந்துரைக்கின்றனர்இந்த இறைச்சியை இரத்த கொதிப்பு, இதய நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்கள் நன்றாகச் சாப்பிடலாம்இறைச்சியில் அதிகமான அமினோ அமிலங்களும், மனிதர்களுக்குத் தேவையான ஹார்மோன் சத்துக்களும் உள்ளனமத்தியப் பிரதேசம், மகாராஷ்ட்ரா,தில்லி போன்ற வடமாநிலத்து மக்கள் இக்கோழிகளின் இறைச்சி, ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதோடு, வயாக்ரா மாத்திரை போல் விந்தணுக்களின் வீரியத்தையும் அதிகரிக்கும் என நம்புகின்றனர்.. மைசூரில் செயல்படும் உணவு ஆராய்ச்சிக் கழகம், கருங்கோழி இறைச்சி இதய நோயாளிகளுக்கு மிகவும் நன்மை தரக் கூடியது என, சான்றளித்துள்ளதுசீன நாட்டின் மருத்துவத்திலும், உணவிலும்கூட இந்தக் கருங்கோழிகள் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன.

ஆதிவாசிகள், கிராம மக்கள் ஆகியோர் இவ்வகைக் கோழிகளை வளர்த்து வருகின்றனர். சேவல் வேண்டுதலுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக்கோழிகள்

நாட்டுக் கோழிகளின் உற்பத்தி திறனை மேம்படுத்த மண்டலக் கோழியினப் பண்ணைகள், இந்திய வேளாண் மற்றும் கால்நடைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவை பல்வேறு வகையான கோழியினங்களை உற்பத்தி செய்துள்ளன. இருவகைப் பயன்பாட்டுள்ள வெளிநாட்டுக் கோழிகளின் மரபணுப் பண்புகளை, உளநாட்டுக் கோழியினத்தின் மரபணுப் பண்புகளுடன் சேர்த்துத் தரம் உயர்த்தப்பட்ட கோழியினங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டுக் கோழியினங்களின் தேவை அதிகரித்து வருவதோடு, தரம் உயர்த்தப்பட்ட பல வண்ண இறைச்சிக் கோழிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் இக்கோழிகளின் எண்ணிக்கை மொத்தக் கோழிகளின் எண்ணிக்கையில் 5.7 விழுக்காடாகும்.

தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக் கோழிகளின் பண்புகள்

பல வண்ணங்களில் காணப்படும் தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக் கோழிகள் காண்பவரின் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன.

குறைந்த செலவிலான கொட்டகை அமைப்பு, சத்துகள் குறைந்த தீவனம் மற்றும் பராமரிப்பு முறைகளிலும் நன்கு வளரக்கூடியவை.

அடைகாக்கும் குணம் காணப்படுவதில்லை. எனவே அதிக முட்டைகளிடும்.

தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக் கோழிகளின் முட்டை மற்றும் இறைச்சியில் உள்ள ஊட்டச் சத்துகள் நாட்டுக்கோழியைப் போன்றே இருக்கும்.

குறைந்த கொழுப்புச் சத்து கொண்ட இக்கோழி இறைச்சியை வயோதிகர்களுக்கும் ஏற்றது.

அதிக நார்ச்சத்துள்ள உணவை உட்கொள்ளும் இயல்பு கொண்டவை. தரம் குறைந்த புரதம் மற்றும் எரிசக்தி கொண்ட தானியங்களை உட்கொண்டு முட்டையிடும் திறன் கொண்டவை.

அதிக நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் நீண்ட காலம் உயிர் வாழும் தன்மை கொண்டவை.

நாட்டுக் கோழிகளின் முட்டையை விட அதிக எடையையும் அதிக கறுவுறும் மற்றும் குஞ்சு பொரிக்கும் திறன் கொண்டவை.

நன்றி

மண்வாசனை

17 thoughts on “கடக்நாத் அல்லது கருங்கால கோழி”

  1. நான் திருச்சி மாவட்டம் எனக்கு இந்த கோழி வளர்ப்புக்கு வேண்டும் எங்கு கிடைக்கும்

  2. எனக்கு ஒமலூரில் வளக்க வேண்டும் எங்கே கிடைக்கும்

  3. நான் விழுப்புரம் மாவட்டம் இந்த கோழி எங்கு கிடைக்கும்

  4. தினகரன் 8939453542 திருவள்ளுர்

    வேலுர் பன்னை முகவரி வேண்டும்

  5. செந்தில் குமார்

    நான் நிலக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டத்தில் வளர்க்க ஆசைப்படுகிறேன்.எனக்கு இதன் முட்டை மற்றும் குஞ்சுகள் கிடைக்குமா?விலை எவ்வளவு? ஃபோனில் தொடர்பு கொள்ள :9787476926.

  6. நான் சிவகங்கை மாவட்டம் கருங்கோழி வாங்க தொடர்பு கொள்ள போன் நம்பர் ஜி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news