மாப்பிள்ளை சம்பா (சிவப்பு அரிசி ) – விற்பனைக்கு

3
8589

மாப்பிள்ளைச் சம்பா மாப்பிள்ளைச் சம்பாஇந்தியாவில் 20,000 பாரம்பரிய நெல் வகைகள் இருந்தன. அவற்றுள் பல, நவீன நெல் ரகங்களின் வரவால் அழிந்துவிட்டன.தற்போது சீரகச் சம்பா, மாப்பிள்ளை சம்பா, காட்டுப் பொன்னி, சின்னப் பொன்னி, பாசுமதி, கிச்சிலி சம்பா உள்ளிட்ட 100 முதல் 150 வகையான நெல் ரகங்கள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. அவையும் குறைந்த அளவே பயிரிடப்படுகின்றன.இந்தியாவில் காலங்காலமாகப் பயிர் செய்யப்பட்டு வரும் பாரம்பரிய நெல் வகைகள் பலவும் மருத்துவக் குணம் மிகுந்தவை.

அவற்றிலும் மாப்பிள்ளை சம்பா தனித்தன்மை மிக்கது.பெயர் வரக் காரணம்:பழங்காலத்தில் ஒருவனுக்கு பெண் கொடுப்பதற்கு முன்னர் அவர் பலசாலியா என்பதை சோதிப்பதற்காக அதிக எடை கொண்ட இளவட்டக் கல்லைத் தூக்க வேண்டும். அதைத் தூக்கும் இளைஞரை பலமுள்ளவனாகக் கருதி, அவருக்கு பெண்ணை திருமணம் செய்து கொடுப்பர்.

இந்த ரக அரிசியை சாப்பிடுவர்கள் எளிதில் இளவட்டக் கல்லை தூக்குவார்களாம். இதனால், இதற்கு மாப்பிள்ளை சம்பா என்று பெயர் ஏற்பட்டதாம்.

 • பயிரைப்பற்றி….இந்த நெல் ரகம் ஆளுயரம் வளர்கிறது. ஏழு அடி உயரத்தில் வளரக் கூடியது.வயது 160 நாட்கள். நேரடி விதைப்பு செய்தால் 150 நாளில் அறுவடைக்குத் தயாராகிவிடும்.நிலத்தில் தண்ணீரே இல்லாமல், ஒரு மாதக் காலத்துக்கு நிலம் காய்ந்தாலும்கூட மாப்பிள்ளை சம்பா பயிர் வாடாது.
 • சீற்றம் தாங்கும் அதேபோல கனமழைக் காலங்களில் நெற்பயிர் பல நாட்கள் நீரில் மூழ்கிக் கிடந்தாலும்கூட மாப்பிள்ளை சம்பா பயிர் அழுகாது.
 • புரதம், நார், தாது, உப்புச்சத்து நிறைந்தது. இதன் நீராகாரத்தை சாப்பிட்டால் நரம்புகள் வலுப்படும்.
 • ஆண்மைத் தன்மை அதிகரிக்கும்இ
 • தன் அரிசியை வேகவைக்கும்போது வடிக்கும் கஞ்சியில் மிளகு, சீரகம், உப்பு சேர்த்துச் சாப்பிட்டால் கிடைக்கும் ருசியே தனிதான்.
 • ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் வழங்கப்படும் சூப் வகைகளிலும்கூட இந்தச் சுவை கிடைக்காது என்று சொல்லலாம்.
 • கஞ்சியே இவ்வளவு ருசி என்றால், சோறு எவ்வளவு சுவையாக இருக்கும்?
 • உடலுக்கு வலுவைத் தரக்கூடிய ஏராளமான சத்துகளும் மாப்பிள்ளைச் சம்பாவில் உண்டு.
 • இதற்கெல்லாம் மேலாக நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய, ப
 • தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்வதற்கு ஏற்ற நெல் ரகம் இது.

 

அக்ரிசக்தி மூலம் வாங்க இந்த இணைப்பினை கிளிக் செய்யவும்

https://www.instamojo.com/agrisakthi/5kg-/

 

கருப்பு அரிசி வாங்க இங்கே கிளிக் செய்யவும்

https://www.instamojo.com/agrisakthi/black-rice-/

3 COMMENTS

 1. கருங்குறுவை
  குள்ளக்கார்
  மாப்பிள்ளை சம்பா
  பூங்கார்
  சீரக சம்பா
  கருப்பு கவுணி
  கைகுத்தல் பொன்னி
  காட்டுயாணம்அரிசி வேண்டும்

 2. சீரகச்சம்பா விதை நெல் ஒரு ஏக்கர் நடுவதற்கு வேண்டும்.எங்குக் கிடைக்கும்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here