எண்ணெய் வித்துப்பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்கள் (Pest and diseases of oil seed crops):

0
2114

நிலக்கடலை: புரொடீனியா, அமெரிக்கன் காய்புழு, சிவப்பு கம்பளி புழு, சுருள் பூச்சி, அசுவினி, இலைப்பேன், தத்துப்பூச்சி, வேர்புழு, காய் துளைப்பான் மற்றும் கரையான் போன்ற பூச்சிகள் சேதம் விளைவிக்கின்றன. மேலும் துரு, டிக்கா இலைப்புள்ளி, வளையத்தேமல், தண்டு அழுகல், மொட்டு கருகல் அப்ளோடாக்சின் போன்ற நோய்களின் காரணிகளும் தாக்குகின்றன.

தென்னை: காண்டாமிருக வண்டு, கருந்தலைப்புழு, சிவப்புக்கூன் வண்டு, செம்பான் சிலந்தி, செதில் பூச்சி, மாவுப்பூச்சி மறும் கரையான் ஆகியவற்றால் சேதம் ஏற்படுகிறது. அடித்தண்டழுகல், குருத்தழுகல், சாறுவடிதல், தஞ்சாவூர் வாடல் மற்றும் இலைக்கருகல் நோய்கள் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.

சூரியகாந்தி: இப்பயிரை வண்டுகள், மொட்டுப்புழு, பச்சைக்காய்ப்புழு, தத்துப்பூச்சி ஆகியவை தாக்குகின்றன. மேலும் ஆல்டர்நேரியா இலைப்புள்ளி, தலை அழுகல், கருகல், துரு நோய்கள் தாக்குகின்றன.

எள்: காய் துளைப்பான், காய் ஈ, இலைபிணைப்பான், கொம்பு புழு ஆகியவை பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகளாகும். மேலும் சாம்பல், இலைக்கருகல், இலைப்புள்ளி, வேர் அழுகல் மற்றும் பச்சைப்பூ நோய்கள் தாக்குகின்றன.

ஆமணக்கு: முள்புழு, காவடிப்புழு, புகையிலைப்புழு மற்றும் காய் துளைப்பான் ஆகிய பூச்சிகள் தாக்குகின்றன. இளஞ்செடி அழுகல், ஆல்டர்நேரியா இலைப்புள்ளி, குலை அழுகல், சாம்பல் மற்றும் துரு நோய்கள் இப்பயிரைத் தாக்குகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here