Skip to content

இந்தியாவின் காலநிலை மண்டலங்கள்

கொப்பன் காலநிலை வகைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு டாக்டர் டிரவர்த்தா உருவாக்கிய காலநிலை மண்டலப் பகுப்பு இந்தியாவிற்குப் பொருந்துவதாகப் பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதன்படி, இந்தியா A, B, C  மற்றும் H என நான்கு வகையாகப் பிரிக்கப்படுகின்றது.

இதில்,       A -வெப்பமண்டல மழைக்காலநிலை (உயர் வெப்பநிலை  நிலவும்)

B -வறண்ட காலநிலை (உயர் வெப்பநிலை நிலவும் ஆனால்                                             குறைந்த மழைப்பொழிவு இருக்கும்)

C -வறண்ட குளிரான சூழல் நிலவும் (00-180C   வெப்பநிலை நிலவும்)

H-மலைசார்ந்த காலநிலை நிலவும்

இந்தியாவின் காலநிலை மண்டலங்கள்

காலநிலைவகை பகுதிகள் சிறப்பம்சங்கள்
            வெப்பமண்டல மழைக்காடுகள் காலநிலை(AM)

 

மேற்குத்தொடர்ச்சி மலைகள், மேற்கு கடற்கரைச் சமவெளிகள், அஸ்ஸாம் மற்றும் திரிபுராவின் சிலபகுதிகள்

 

வருடம் முழுவதும் அதிகவெப்பநிலை, அதிகபட்ச பருவமழைப்பொழிவு, வருடாந்திர மழைப்பொழிவு சுமார் 200 செ.மீ.

 

வெப்பமண்டல சவானா காலநிலை(AW)

 

மேற்குத்தொடர்ச்சி மலைகள், மேற்கு கடற்கரைச் சமவெளிகள், அஸ்ஸாம் மற்றும் திரிபுராவின் சிலபகுதிகள்

 

வறண்ட குளிர்காலம், வருடாந்திர மழைப்பொழிவு 76 முதல் 150 செ.மீ. வரை

 

வெப்பமண்டல அரைப்பாலைவன ஸ்டெப்பி காலநிலை(Bs)

 

 

மாகாராஷ்டிரம் முதல் தமிழகம் வரையிலான மழை மறைவு பிரதேசங்கள்

 

குறைந்தபட்ச மழைப்பொழிவு (38 முதல் 80 செ.மீ வரை) 20C முதல் 300C வரையிலான வெப்பநிலை

 

வெப்பமண்டல பாலைவன காலநிலை(Bwh)

 

இராஜஸ்தானின் பார்மர், பீகானீர் மற்றும் ஜெய்சல்மார் பகுதி மற்றும் கட்ச்சின் ஒரு பகுதி

 

மிகக்குறைவான மழைப்பொழிவு மற்றும் அதிகபட்ச வெப்பநிலை

 

வெப்பமண்டல பாலைவன காலநிலை(Bwh)

 

இமயமலையின் தென்பகுதி

 

மிதமான குளிர்காலம் மற்றும் மிதமிஞ்சிய வெப்பநிலை நிலவும் கோடைகாலம்

 

மலைப்பகுதி காலநிலை(H)

 

6000 மீட்டருக்கும் அதிக உயரம் கொண்ட மலைப்பகுதிகள்

 

63 முதல்  254 செ.மீ வரையிலான மழைப்பொழிவு

 

வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல ஸ்டெப்பி வகை காலநிலை(Bsh)

 

பஞ்சாப், ஹரியானா மற்றும் கட்ச் பகுதி

 

12 முதல் 350 C வரையிலான வெப்பநிலை வேறுபாடு

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj