தாவர திசு வளர்ப்பு முறையின் தோற்றமும் வளர்ச்சியும்!

0
3297

ஜெர்மன் நாட்டைச்சார்ந்த தாவரவியல் அறிஞர் G.ஹேபர்லேண்ட் என்பவர் வெவ்வேறு திசுக்களிலிருந்து பிரித்தெடுத்த தனித்தனியான தாவர செல்களை வெற்றிகரமாக வளர்த்த 1898 ஆம் ஆண்டிலிருந்து தாவரத்திசு வளர்ப்பு முறை நடைமுறையில் உள்ளது. ஆயினும் தாவர வளர்ச்சி ஒழுங்கு படுத்திகளான ஆக்சின்கள், விட்டமின்கள் கண்டுபிடிக்கப்பட்டதன காரணமாக காத்ரெட், ஒயிட் மற்றும் நோப்கோர்ட் என்ற அறிவியலார்கள் 1934-லிருந்து 1939 கால இடைவெளியில், திசு வளர்ப்பு செயல் நுட்பத்திற்கு அடிதளமிட்டனர்.

1940 –லிருந்து 1960-க்குட்பட்ட இருபது ஆண்டுகளில், சைடோகைனின் எனும் வளர்ச்சி ஒழுங்குபடுத்தி கண்டறியப்பட்டு, செல்பகுப்பு மற்றும் செல்கள் மாறுபாடு அடைதல், அவற்றின் விளைவும் ஆகியனவும் கண்டறியப்பட்டன.

செயற்கைமுறையில் ஆய்வகத்தில் தாவர செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகளை வளர்க்கும் முறையானது 1960-க்கு பிறகு செம்மையாக உருவாக்கப்பட்டது. இத்துறையில் இந்தியாவின் டெல்லி பல்கலைக்கழக தாவரவியல் நிபுணர் பேராசிரியர். P. மகேஸ்வரி மற்றும் பேராசிரியர்.S. நாராயணசுவாமி ஆகியோர்களால் 1960 ஆம் ஆண்டு தொடக்கத்தில், இத்துறையில் ஆய்வுகள் பல தொடங்கப்பட்டன. தொடர் நிகழ்வாக பலவகை தாவரப் பகுதிகளுக்கு உகந்த வளர் ஊடகங்களும், தொழில் நுட்பங்களும் உருவாக்கப்பட்டு, இப்பொழுது தாவர மேம்பாடு திட்டங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here