Skip to content

ஹைட்ரோகார்பன் திட்டம் சாதகம்/பாதகம் – 01

ஹைட்ரோகார்பன் என்பது தீப்பற்றி எரியக்கூடிய தன்மை கொண்ட நீரகக்கரிமங்களே. இயற்கை எரிபொருட்களான பெட்ரோலியம், நிலக்கரி, இயற்கை எரிவாயு போன்றவற்றில் காணப்படும் முதன்மைக்கூறு ஹைட்ரோகார்பனே.

திரவநிலையில் பிரித்தெடுக்கப்படும் ஹைட்ரோகார்பன் பெட்ரோலியம் அல்லது கனிம எண்ணெய் என்றழைக்கப்படுகிறது. அதேபோல வாயு நிலையில் பிரித்தெடுக்கப்படும் ஹைட்ரோகார்பன் இயற்கை எரிவாயு என்றழைக்கப்படுகிறது. 

பாறைப் படிம எரிவாயு (ஷேல் காஸ்) போன்ற எரிவாயுக்கள் மூலம் மரப சார ஆதாரங்களில் இருந்து கிடைக்கும். எரிசக்தி நுகர்வில் இந்தியா உலகின் மூன்றாவது நாடாக இருக்கிறது. இந்தியாவில் எரிசக்திகளுக்கான ஆதாரம் வெகு குறைவாக உள்ளதால் அதிக அளவில் இறக்குமதியை நம்பி உள்ளது.

மரபு சாராத ஆதாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1.நிலக்கரி படுகை மீத்தேன்
2.நிலக்கரி சுரங்க மீத்தேன்
3.ஷேல் எரிவாயு
4.டைட் எரிவாயு

உலகம் முழுதும் பல்வேறு வகையான படிமப் பாறைகளில் இயற்கை எரிவாயு கலந்துள்ளது. மணல் கற்கள், சுண்ணாம்புக் கற்கள் மற்றும் ஷேல்களில் இயற்கை எரிவாயு உள்ளது.

ஷேல் எரிவாயு மரபு சார்ந்த எரிவாயு ஆதாரங்களில் இருந்து அவை மாறுபட்டதாக இருப்பதுடன், ஷேல் எரிவாயு ஆய்வு முழுவதும் நிலத்தில் மேற்கொள்ளப்படுவதாலும் பெரும் சவாலாக இருக்கும். தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த ஆதாரங்களில் உற்பத்தி செய்வது என்பது மிகவும் சவால் நிறைந்தது.தேக்கங்களின் இறுக்கம் காரணமாக இவற்றுக்கு கிடைமட்டமாக ஹைட்ராலிக் ஃபிராக்சரிங் தேக்கத்தின் அதிகப்பகுதியில் செய்ய வேண்டியிருப்பதுடன், சில சமயங்களில் பல அடுக்கு ஃபிராக்சரிங் மற்றும் 1-2 ஆண்டுகளில் ஷேல் எரிவாயு அதிக அளவில் கிடைக்கும் என்பதுடன், பின்னர் பல ஆண்டுகளில் அதன் ஓட்டம் மிக மெதுவாக இருக்கும். இதற்காக அதிக எண்ணிக்கையில் கிணறுகள் தோண்டப்பட வேண்டும் என்பதால் உள்ளூர் சமூகம், சுற்றுச்சூழல் மற்றும் முயற்சிகளை அதிக அளவில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

நீர் மாசடையும் முக்கிய கவலையைத் தவிர, ஷேல் எரிவாயு ஆய்வு மற்றும் உற்பத்தியில் இதர பல்வேறு சவால்களும் உள்ளன. சில ஆயிரங்கள் முதல் 20 ஆயிரம் கன மீட்டர் வரையிலான அதிகபட்ச தண்ணீர் ஹைட்ராலிக் ஃபிராக்சரிங் செய்யத் தேவைப்படும். உள்ளூர் சுற்றுசூழல்  ஃபிராக்சரிங் பணிக்குப் பின்னர் தண்ணீர் சுற்றுச்சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலைத் தரும். ஷேல் எரிவாயுகளுக்கு மரபு சார்ந்த எண்ணெய் மற்றும் எரிவாயுவுடன் ஒப்பிடுகையில் பரந்த நிலம் தேவைப்படும் என்பதால் நிலத்தின் மீது பெரும் அழுத்தம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் இதுவும் ஒரு சவாலாகும். வழக்கமாக ஒரு கிணறு 10 சதுர கிலோ மீட்டர் பரப்பில் இருந்து ஹைட்ரோ கார்பன்களை வறண்டு போகச் செய்யும் என்பதால், 100-500 சதுர கிலோ மீட்டர் பரப்பில்  தேவைப்படும் என்ற நிலையில் ஷேலுக்கு பல மடங்கு கூடுதலாக நிலம் தேவைப்படும்

பல அடுக்கு ஃபிராக்சரிங் (10-20 நிலைகள்) கிணறு ஒன்றுக்கு 1000 முதல் 4000 டன் பிராபண்ட்கள் தேவைப்படும். இத்தனை அதிக அளவு உட்செலுத்தப்படும் போது பூகம்பம் ஏற்படுவதற்கான அச்சமும் உள்ளது. இது ஷேல் ஆய்வுக்கு ஒப்புதல் அளிப்பதில் பெரும் கவலையை ஏற்படுத்தி இருப்பதுடன், சமீபத்திய ஆய்வு ஒன்றில் இருந்து ஜெர்மனியில் இயற்கை எரிவாயு உற்பத்தி கடந்த ஆண்டில் சுமார் 6 சதவிகிதம் அளவுக்கு குறைந்திருப்பதாக தெரிவிக்கிறது. ஷேல் எரிவாயு மற்றும் ஹைட்ராலிக் ஃபிராக்சரிங் சர்ச்சைகள் மரபு சார்ந்த எரிவாயு உற்பத்தியையும் தடுக்கிறது. 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஷேல் எரிவாயு குறித்த விவாதங்கள் மரபு சார்ந்த எரிவாயு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராலிக் ஃபிராக்சரிங் திட்டங்களுக்கு ஒப்புதல் கிடைப்பதை தடுத்துள்ளது.

எனவே எரிவாயு ஆய்வில் ஈடுபடும் ஒவ்வொரு நாடும் போதிய வரன்முறைகள் மற்றும் சுற்றுச்சூழல் தரத்தைத் திட்டமிட்டு சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நீண்ட கால பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை மிக அதிகமாக இருப்பதால் தண்ணீர் தரம் மற்றும் தண்ணீர் இருப்பு ஆகியவற்றை கண்காணிப்பது மிக அவசியம்

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nv-author-image

Murali Selvaraj

error: Content is protected !!