Skip to content

அக்ரிசக்தி மாடிவீட்டுத்தோட்டம் அமைக்க பயிற்சி!

அன்பார்ந்த நண்பர்களே!

ஆடிப்பட்டம் தேடி விதை என்பது நம் முன்னோர் மொழி, அதற்கேற்றார்ப்போல் விவசாயத்தினை இளைய சமூகத்திற்கு கொண்டு செல்ல அக்ரிசக்தியின் சார்பில் ஒரு முன்னெடுப்பு செய்யப்பட உள்ளது.

அக்ரிசக்தியின் விவசாயம் சார்பில் மாடிவீட்டுத்தோட்டம் அமைக்க பயிற்சிகள் ஆடி 18(ஆகஸ்ட் 3) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. சனி, ஞாயிறுகளில் இந்திய நேரப்படி காலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெறும். மாடி வீட்டுத்தோட்டம் அமைப்பதில் அனுபவம் வாய்ந்த நண்பர் திரு.தியாகராசன் அவர்கள் இந்த பயிற்சியை வாட்ஸ்அப் மூலம் பயிற்சி அளிப்பார்.

முதல் கட்டமாக கீரை உற்பத்தி செய்யும் பயிற்சி ஆரம்பிக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 10 பேர் மட்டுமே இந்தப் பயிற்சியில் சேர்க்கப்படுவார்கள். அதன்பின்னர் படிப்படியாக பயிற்சி உறுப்பினர்கள் அதிகரிப்படுவார்கள். இந்த பயிற்சியில் அனைத்தும் முறைப்படி ஆவணமாக வழங்கப்படும். மண் வளம், விதை நேர்தி, பயிர் வளர்ச்சி என தலைப்புகளின் பயிற்சி வழங்கப்படும்.

இந்தப் பயிற்சிக்கு குறைந்த பட்ச கட்டணம் ரூ.500. மட்டுமே

பதிவு செய்ய கீழ்கண்ட இணைப்பை சொடுக்கவும். அடுத்த தலைமுறைக்கு விவசாயத்தினை கொண்டு செல்வது மிக அவசியம். ஆர்வமுள்ளவர்கள் இணைந்துகொள்ளலாம்

https://goo.gl/UtiZbX

மேலும் விபரங்களுக்கு editor.vivasayam@gmail.com,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj