அக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 4ம் ஆண்டில்—

4
4584

நம்மாழ்வார் அய்யா அவர்களை சந்தித்து. அவருடன் சந்திப்பு என்ன சில நிமிடங்கள்தான். ஆனாலும் பெற்றது ஏராளம். அவருடன் சிபேடு எப்படி விவசாயத்திற்கு பயன்படுத்துவது என்று கேட்டபோது நிறைய ஆலோசனைகளை வழங்கினார். விரைவில் வானகம் வந்து சந்திக்கச்சொன்னார். நிறைய தகவல்களை நுட்பம் வழியாக அனைவரிடமும் சேர்க்கவேண்டும் என்றும் சொன்னார்.

ஆனாலும் அதற்குபின் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகளால் விவசாயம் மென்பொருள் பற்றி சோதித்தே பார்க்க முடியவில்லை. இப்போதுதான் அதற்கான நேரம் அமைந்ததா என்று தெரியவில்லை. ஆனாலும் முதற்கட்டமாக விவசாயத்திற்கு என்று தனியான ஒரு குறுஞ்செயலியை உருவாக்கி வெளியிட்டுள்ளோம்.
நுட்பம் உருவாக்குவது மட்டுமே எங்கள் பணி. இந்த விவசாய மென்பொருள் தொடர்ந்து இயங்கவேண்டும். பலராலும் பயன்படுத்தப்படவேண்டும் என்று விரும்பினோம்.

நம்மாழ்வாரின் முதலாம் நினைவுநாளில் இந்த குறுஞ்செயலியை வெளியிட்டு அவரின் நினைவாகவே வெளியிட்ட விவசாயம் செயலி இன்று 4ம் ஆண்டில் அடி வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.
தொடர்ந்து எங்களுடன் பயணிக்கும், ஆதரவளிக்கும் அனைவருக்கும் உங்கள் நன்றிகள்!! 
வெளிவரும்,,, பல புதிய செய்திகளுடன், புதிய மாற்றங்களுடன்

 

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

4 COMMENTS

  1. தங்கள் பணிமென்மேலும் சிறக்க வேண்டுகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here