fbpx
Skip to content

சிறுதானிய அரிசி காய்கறிச் சாதம்

தேவையான பொருட்கள் 

சிறுதானிய அரிசி     – 1 கோப்பை

குட மிளகாய், கேரட்  – தலா  1

பீன்ஸ்               –                 50கிராம்

முட்டைக்கோஸ்     –   100 கிராம்

பச்சை மிளகாய்      -2

பெரிய வெங்காயம்   -1

இஞ்சி பூண்டு         -1

பட்டை               -2

கிராம்பு           -3

பிரியாணி இலை   -1 சிறுதானிய அரிசி- 2கோப்பை

குட மிளகாய்    -தலா1

பச்சை பீன்ஸ்          -50கிராம்

முட்டைக்கோஸ் -100 கிரம்

மிளகாய்  -2

பெரிய வெங்காயம் -2

இஞ்சி, பூண்டு      -1

பட்டை            -1

கிராம்பு            -3

பிரியாணி இலை  -1

ஏலக்காய்          -1

முந்திரிப் பருப்பு    -6

தக்காளி சாஸ்     -2தேக்கரண்டி

நெல்              -2  தேக்கரண்டி

எண்ணெய்         -1 தேக்கரண்டி

மிளகு            -1/4 தேக்கரண்டி

சர்க்கரை         -1/2 தேக்கரண்டி

உப்பு             -தேவையான அளவு

செய்முறை;

சிறுதானிய சாதத்தை கொஞ்சம் விறைப்பாக வடித்து ஆற வைக்கவும். கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், குட மிளகாய், பெரிய வெங்காயம் ஆகியவற்றைப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, இலவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றைப் போட்டுத் தாளித்து, நறுக்கி வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பிறகு நறுக்கிய காய்கறிகளைப் போட்டுச் சிறு தணிலில் நனறாக வதக்கவும். அதனுடன் சிறிது சர்க்கரை, தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும். அடிக்கடி கிளறி விடவும். பிறகு தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும். அடுத்து ஆறிய சாதத்தைப் போட்டுக் குழையாமல் கிளற வேண்டும். இதனுடன் மிளகுத் தூளைச் சேர்த்துக் கிளறி, சிறிது நேரம் சிறு தணலில் வைத்து அடுப்பிலிருந்திறக்கவும்.

Leave a Reply

Your email address will not be published.

nv-author-image

Murali Selvaraj