Skip to content

கறவை மாடு வாங்கும்போது நல்ல மாடுகளை எப்படி கண்டறிவது?

  • இளம் மாடாகவும், பெரிய மாடாகவும் இருத்தல் வேண்டும். கழுத்துப்பகுதி சிறியதாகவும், மடிப் பெரியதாகவும், நன்கு உடலுடன் ஒட்டியதாகவும் இருத்தல் வேண்டும்.
  • சமமான முதுகு மற்றும் மடிக்காம்புகளுக்கு இடைப்பட்ட இடைவெளி சரியாக இருத்தல் வேண்டும்.
    பின்பக்கம் இருந்து பார்க்கும் போது தலை தெரியக்கூடாது. வயிறு இரண்டு பக்கமும் சமமாக இருத்தல் வேண்டும்.
  • மடிக்காம்பு முழங்காலுக்கு மேல் இருத்தல் வேண்டும்.
  • பெரும்பாலும் 3 வயதுக்கு உள்பட்ட மாடுகளையே வாங்க வேண்டும். நோயால் பாதிக்கப்படாத, ஆரோக்கியமான, அதிக பால் உற்பத்தி கொடுக்கக் கூடிய மாடாக இருக்க வேண்டும்.
  • சிறப்பான பசுவின் தோற்றமும், பெண்மை குணாதிசயங்கள் கொண்ட மாடாக இருக்க வேண்டும். சுறுசுறுப்பாகவும், சாந்தமான மனநிலை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
  • பசுவின் தோல் பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும் இருக்க வேண்டும். தோல் மிருதுவாகவும், இழுத்து விட்டால் உடனடியாக பழைய நிலைக்கு தோல் செல்லும் தன்மை உடையதாகவும் இருக்க வேண்டும்.
    கண்கள் பளிச்சென்று துறுதுறுப்பாகவும், மூக்கு அகலமானதாகவும், மூக்கின் நுனிப்பகுதி ஈரமானதாகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே ஆரோக்கியமான பசு என கருத்தில் கொள்ள முடியும்.
    மாட்டை பக்கவாட்டில் பார்க்கும்போது, உடல் நீள வடிவ முக்கோணமாக இருக்க வேண்டும்.
  • முதுகுப் பகுதி வளைந்தில்லாமல் நேர்க்கோடாக இருக்க வேண்டும். கால்கள் வலுவானதும், வளைந்து இல்லாமலும் இருக்க வேண்டும்.
  • பால்மடியானது தொடைகளுக்கு நடுவில் பின்புறம் சிறிது உயரத்தில் இருந்து தொடங்கி வயிற்றின் முன் பாகம் வரை இருப்பது நல்ல பால் உற்பத்திக்கு அடையாளமாகும்
  • பால்மடி தொடுவதற்கு மிருதுவாகவும், பால் கறந்தவுடன் மடி வற்றிப் போகவும் வேண்டும். பால் காம்புகள் மிகப் பெரியதாகவோ, சிறியதாகவோ இல்லாமல் சரிசமமான அளவில் இருக்க வேண்டும். பால் காம்புகள் ஒரே அளவு இடைவெளியுடன் இருக்க வேண்டும்.
  • எல்லா காம்புகளிலும் கறவை பால் வருகிறதா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும்.
  • மடியில் ஓடும் ரத்த நாளங்கள் வளைந்தும், புடைத்தும் காணப்பட வேண்டும். அப்படி இருந்தால் மாட்டுக்கு நல்ல ரத்த ஓட்டம் இருப்பதையும், பால் சுரக்கும் தன்மையையும் அறிய முடியும்.
  • கறவை மாடுகளை சந்தையில் சென்று வாங்காமல் கால்நடை வளர்க்கும் விவசாயிகளிடம் நேரடியாகச் சென்று வாங்குவதே நலம். நமது மண்ணுக்கேற்ப அனைத்து சீதோஷ்ண நிலையையும் தாங்கக் கூடிய கலப்பின மாடுகளை வாங்குவதே மிகச் சிறந்ததாகும்.
  • மாட்டை பக்கவாட்டில் பார்க்கும்போது, உடல் நீள வடிவ முக்கோணமாக இருக்க வேண்டும். முதுகுப் பகுதி வளைந்தில்லாமல் நேர்க்கோடாக இருக்க வேண்டும்.

3 thoughts on “கறவை மாடு வாங்கும்போது நல்ல மாடுகளை எப்படி கண்டறிவது?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj