Skip to content

இந்தியாவில் சுற்றுச்சூழலியல்

1970, 1980 ஆம் ஆண்டுகளில், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பெருங்கவலைக்கு உரியனவாகப் பரவலாகக் கருதப்பட்டன. அதன்பின் 1980 ஆம் ஆண்டு இந்திய அரசு சுற்றுச்சூழல் துறையை நிறுவியது. சில ஆண்டுகளுக்குள் அது முழுமையானதொரு அமைச்சகமாகப் பரிணமித்தது. மாசுக்கட்டுப்பாட்டிற்காகவும் இயற்கை வளங்களைப் பேணிக்காப்பதற்காகவும் சட்டங்கள் இயற்றப்பட்டன. நீர்வளத்தையும் வனவளத்தையும் மேலாண்மை செய்வதற்கான சமுதாய அமைப்பு முறைகளை மீட்டமைப்பது குறித்த பேச்சும் கூட எழுந்தது.

கடுமையானவையும் விட்டுக் கொடுக்காதனவுமான பணிகளின் வாயிலாக இந்திய சுற்றுச்சூழலியல் இயக்கம் ஓரளவிலான பசுமையாக்குதலை அரசுக் கொள்கையாக கொண்டுவரப்பட்டது.

ஆனால் மனித வரலாற்றில் சமூக மாற்றத்திற்குப் பரந்த செயல்வினையாற்றிய தொழில் புரட்சியுடன் படிப்படியாகத் தனது பயணத்தைத் தொடங்கியது. மனித வாழ்வியல் உலகத்தின் தொழில்மயமாக்குதல் என்பது வளஆதாரங்களை வலிந்து பறித்தல், உற்பத்தி, போக்குவரத்து ஆகியவற்றில் தான் கைக்கொண்ட வழிமுறைகள் வாயிலாக இயற்கையில் உலகிற்கு வெளிப்படையாகவே பேரச்சத்தை நிகழ்த்திக் காட்டியது.

இயற்கை வளங்கள் பயன்படுத்தப்பட்டதை விட அதிகமாக வீணடிக்கப்பட்டது. இதனால் சுற்றுப்புற சூழலி் மாசு அடைதலின் வேகமும் அதன் அபாய அளவும் பன்மடங்கு பெருக்கமெடுத்தது. அதே சமயத்தில் மருத்துவத் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் மக்கள்தொகையின் அளவுக்கடந்த பெருக்கத்திற்கு வழிகோலியது. அளவு கடந்த மக்கள் பெருக்கமும் அதற்கேற்ப மிதமிஞ்சிய உற்பத்திப் பொருட்களின் பெருக்கமும் நுகர்வும் பெரிதும் வெளிப்படையான விதத்தில் மிகப்பெரும் அளவில் சுற்றுச்சூழல் தூய்மைக்கேட்டையும் உயிரின வாழ்விடங்களில் சீரழிவையும் ஏற்படுத்தி வருகிறது.

சுற்றுச்சூழல் பாழடிக்கப்படும் வேகம் பன்மடங்கு முடுக்கிவிடப்பட்டு வருகிறது. இயற்கை மிக மலிவான மூலப்பொருட்களை வழங்குகின்ற வள ஆதாரமாக மட்டுமின்றி பொருளாதார முன்னேற்றம் என்கிற வரன்முறையற்ற வேட்டையின் தேவையற்ற கழிவுகளைக் கொட்டி வைக்கின்ற குப்பைமேடாகவும் மாற்றப்பட்டு வருகிறது. திறந்தவெளிச் சுரங்கங்களும் தொழிலியலில் கொண்டுள்ள நாளும் வளர்ந்து வரும் தீராத கொடூரப் பசியும் வளங்களையும் கன்னி நிலங்களையும் விழுங்கிச் சுருக்கிவிட்டன. நதிகளிலும் வளிமண்டலத்திலும் பேராபத்து விளைவிக்கக்கூடிய வேதிப் பொருட்கள் கழிக்கப்படுகின்றன.

இவ்வளவு சூழ்நிலையிலும் இந்திய அரசு சுற்றுப்புற சூழலினை பேணிக்காக்க வேண்டிய பொறுப்பில் இருந்தும் உணர மறுப்பது நமது மக்களுக்கு பெரும் ஆபத்து.
சுற்றுப்புற சூழலை பேணிக்காப்பது மிக அவசியமாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj